கர்நாடகாவின் ஹூப்ளி பகுதியைச் சேர்ந்த கணேஷ் மிஸ்கின் மற்றும் அமித் பாடி ஆகியோர் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
பெங்களூருவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ். கடந்தாண்டு செப்டம்பர் 5ம் தேதி அவரது வீட்டிற்கு வெளியே மர்மநபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டு சி.சி. டி.வி. கேமராவில் 3 கொலையாளிகளின் படங்கள் பதிவாகியிருந்தன, இந்த கொலை வழக்கு தொடர்பாக ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஹுப்ளி மாவட்டத்தைச் சேர்ந்த அமித் மற்றும் கணேஷ் ஆகிய இருவரை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கைது செய்துள்ளனர்.



