தமிழ்நாட்டில் சொத்து வரியை 100 சதவீதம் வரை உயர்த்த அரசு உத்தரவிட்டுள்ளதால் ஒவ்வொரு வீட்டுக்கும் எவ்வளவுவரி உயரும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பகுதியில் மொத்தம் 12 லட்சம் வீடுகள் உள்ளன. இதில் 10 லட்சத்து 50 ஆயிரம் பேர் சொந்த வீட்டுக்காரர்கள். 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வாடகை வீடு வைத்துள்ளதாக புள்ளி விவரம் உள்ளது. தற்போது சொந்த வீடுகளுக்கு 50 சதவீதம் வீட்டு வரி உயரும் போது ஒவ்வொரு அரையாண்டுக்கும் ரூ.180 கோடி அதிகம் வரி கிடைக்கும். வாடகை வீடுகளுக்கு வரி உயர்வதன் மூலம் 400 கோடி ரூபாய் அதிகம் வரி கிடைக்கும். இதன் மூலம் சென்னை மாநகராட்சிக்கு 1 ஆண்டுக்கு 1,160 கோடி ரூபாய் கூடுதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சொத்து வரி உயர்வால் மாநகராட்சிக்கு உயர்கிறது வருவாய்
Popular Categories



