நடிகர் சூர்யா பேச்சு வன்முறையைத் தூண்டும்; எச்.ராஜா குற்றச்சாட்டு!

act surya - 2026புதிய கல்விக்கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை சென்னையில் சிவக்குமார் அறக்கட்டளையின் 40-வது ஆண்டு விழாவில் நடிகர் சூர்யா பேசுகையில், 20 வருடங்களாக நான் நடித்துக்கொண்டிருப்பதால் நான் பேசினால் பார்ப்பார்கள், கேட்பார்கள் என்பதால் சொல்கிறேன்.

எல்லோருடைய கோபம், அச்சம் என்னவென்றால் மீண்டும் மீண்டும் தேர்வு, தகுதித் தேர்வு, நுழைவுத் தேர்வு போன்றவற்றில் உள்ள கவனம் சமமான, தரமான மாணவர்களுக்காகச் செய்யப்படவில்லை என்பது பெரிய குற்றச்சாட்டு. சமமான, தரமான கல்வியைக் கொடுக்காமல் தகுதியான மாணவனை எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?

கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு பரிந்துரையில், ஒரு ஆசிரியர் அல்லது 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகள் மூடப்படும் என்று சொல்கிறார்கள்.

அந்த மாணவர்கள் எங்கே போவார்கள்? கிராமங்களில் படிப்பவர்களின் ஆரம்பப் பள்ளி வாழ்க்கை இனி என்னவாகப் போகிறது? எங்கள் வீட்டில் மூன்று மொழிப் பேசுபவர்கள் உள்ளார்கள்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

இருந்தாலும் என் மகனுக்கு, என் மகளுக்கு மூன்றாவது மொழியைச் சொல்லிக் கொடுப்பது சவாலாக உள்ளது. இதனால் முதல்தலைமுறை மாணவர்களின் எதிர்காலம் என்ன ஆகும்? மூன்றாவது மொழியைத் திணித்தால் அவர்கள் எப்படிச் சமாளிப்பார்கள்? நீங்கள் எல்லோரும் அமைதியாக இருந்தால் இது திணிக்கப்படும்.

h.raja 1 - 2026

நாங்கள் 10 வருடங்களாக மாணவர்களைப் பார்த்து வருகிறோம். 10 வருடங்களாக 30% மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாமல் படித்துக்கொண்டிருக்கிறார்கள். 30% +2 மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாமல் படித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் எப்படி நீட் எழுதுவார்கள்? எல்லாத் தேர்வுகளையும் தூக்கிப்போட்டுவிட்டு ஒரே ஒரு நுழைவுத் தேர்வு வரும். அதை எழுதினால் தான் எந்த டிகிரியாக இருந்தாலும் போகமுடியும். நீட் தேர்வு சமூகத்தின் சமநிலையை மாற்றுகிறது.

தேர்வுப் பயிற்சி மையங்களின் ஆண்டு வருமானம் ரூ. 5000 கோடி. எட்டாவதிலிருந்து தேர்வுகளை எழுத பயிற்சி மையங்கள் தேவைப்படுகின்றன.

அரசுப் பள்ளி மாணவர்கள் எப்படிப் படிப்பான்? இவ்வளவு நுழைத்தேர்வுகள் இருந்தால் எங்குச் சென்று படிப்பார்கள்?

ரூ. 30,000 சம்பாதிப்பவர்களே, ஒரு லட்சம் ரூபாய் கட்டணம் கொண்ட பள்ளியில் தங்கள் பிள்ளைகள் படிக்கவேண்டும் எனத் தவியாகத் தவிக்கிறார்கள்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

பயிற்சி மையங்கள் காளான்களாக முளைத்துள்ளன. நான்கில் ஒரு பங்குக் கல்லூரிகளைக் குறைக்கப் போகிறார்கள். 50,000 கல்லூரிகள் 12,000மாகக் குறைக்கப்படவுள்ளன. இதனால் ஊர்களில், கிராமப்புறங்களில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள் மூடப்படும்.

கல்வி பயில மறுபடியும் அவர்களுக்குத் தடை ஏற்படும். நிறைய நுழைத் தேர்வுகள் நடக்கப்போகின்றன. ஆனால் படிப்பதற்குப் பள்ளிகள், கல்லூரிகள் இருக்கப்போவதில்லை.

இதுபற்றிய பயமோ, விழிப்புணர்வோ ஏன் நம்மிடம் இல்லை. இதனால் எனக்குத் தூக்கமில்லை. தூக்கம் இல்லாமல் தான் நான் இவ்வளவு கோவப்பட்டுப் பேசுகிறேனா எனத் தெரியவில்லை.

எல்லோரும் தயவு செய்து விழிப்புணர்வுடன் இருங்கள். கல்வியாளர்கள், அறிஞர்கள், ஆசிரியர்கள், ஊடகங்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கிராமப்புற மாணவர்களுக்காகப் போராடும் சங்கங்கள் என அத்தனை பேரும் விழித்துக்கொள்ளவேண்டும்.

அனைவரும் ஜூலை 30-க்குள் அதற்கான இணையத்தளத்தில் உங்களுடைய கருத்துகளைத் தயவு செய்து தெரியப்படுத்துங்கள்.

இது நம் குழந்தைகளின் எதிர்காலத்துக்கானது. அரசாங்கத்துடன் இணைந்து அவர்களுடைய ஆதரவுடன் என்ன மாற்றம் வேண்டுமோ அதை உடனடியாகச் செய்யவும் விழித்திருந்து செய்யவும் அகரம் மூலமாகச் சொல்லவேண்டும் என எண்ணினேன் என்று கூறியிருந்தார்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

இந்நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் பொதுக்கூட்டத்தில் ஹெச்.ராஜா பங்கேற்று பேசுகையில், புதிய கல்விக்கொள்கையில், தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் விருப்ப மொழி, என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு இருக்கும்பட்சத்தில் எவ்வாறு இந்தி மொழி திணிக்கப்படுவதாக அமையும், என கேள்வி எழுப்பினார்.

மேலும், புதிய கல்விக்கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது. இந்தி படிக்க கூடாது என கூறும் திமுகவினர் வீடுகளின் முன்பு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

Entertainment News

Popular Categories