அனுமதியின்றி திறந்த… சலூன் கடைக்கு சீல்

சென்னை லைஃப் ஸ்டைல்
baba saloon closed

144 – தடை ஊரடங்கு உத்தரவின் பொழுது தடையை மீறி கடையை திறந்து வைத்து முடிதிருத்தும் வேலை செய்த நபர் மீது வழக்கு பதிந்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

சென்னை ராஜாஅண்ணாமலைபுரத்தில், டாக்டர் ராதாகிருஷ்ணபுரத்தில் காந்தி தெருவில் பாபா முடி திருத்தகம் திறந்து வைக்கப் பட்டிருப்பதாகவும், அதில் முடிவெட்டும் வழக்கமான பணிகள் நடைபெற்று வந்ததாகவும் கூறப் பட்டது.

ஞாயிற்றுக் கிழமை இன்று முற்பகல் 11 மணி அளவில் ஊரடங்கு உத்தரவு தடையை மீறி, கடையைத் திறந்து வைத்து கடையின் உள்ளே இரண்டு நபர்களுடன் முடி திருத்தும் பணியை செய்து வந்ததால் காவல் நிலையத்தில் சிலர் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் 122,வது வார்டு AE கோதண்டராமன் தலைமையில் போலீஸார் அங்கே சென்று, முடிதிருத்தும் கடையை சீல் வைத்தனர். அவர்களுடன் ஆய்வாளர் கண்ணன் மற்றும் உதவி ஆய்வாளர் கார்த்திக் ராஜா ஆகியோர் சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.