கட்சிக்காரர்களிடம் பூத் சிலிப் கேட்டு ஏன் அலைக்கழிக்கிறீர்கள்?!

Published:

voting - 2026

திருவிக நக்ர் தொகுதியில், பெரம்பூர் ஸ்கூல் ரோட்டில் உள்ள பெண்கள் கார்பரேஷன் பள்ளையில் நான்கு வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

அதில் 13ஆம் எண்ணுள்ள வாக்குச் சாவடியில் காலை 7 முதல் 0750 வரை வாக்குப்பதிவு இயந்திரக்கோளாறு காரணமாக நடக்கவில்லை. அதன் பின்னரும் 0900 மணி வரை மிகவும் மெதுவாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

அரசு ஊழியர்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரத்தை கயாளுவதில் தகுந்த அனுபவம் இல்லை. பூத் சிலிப் கொடுக்காததால் வாக்காளர்களின் பெயர்களைத் தேடுவதில் சிரமம் இருந்தது.

புதிய வாக்களர்கள் பலர் திருப்பியனுப்பப்பட்டனர். அவர்கள் 200மீ தூரம் சென்று கட்சி ஆட்களுடம் பூத் சிலிப் வாங்கி வந்த பின்னர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். பாராளுமன்றத் தேர்தலில் இத்தகைய பிரச்சனைகள் இருக்கவில்லை.

Related articles

Recent articles

spot_img