திருவண்ணாமலை: ஆனித் திருமஞ்சன விழா சிறப்பு!

Published:

thiruvannamalai ani thirumanjanam1 horz - 2026

ஆனித்திருமஞ்சன விழா திருவண்ணாமலையில் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனித் திருமஞ்சன தேனீக்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் இன்று அதிகாலையில் நடை பெற்றது. பின்னர் சுவாமி திருவீதி உலா திருக்கோவிலில் உள்பிராகாரத்தில் வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

செய்தி: எஸ்.ஆர்.வீ. பாலாஜி, திருவண்ணாமலை

பஞ்சம், பட்டினியற்ற வாழ்வு பெற…

(சாம்பசிவ த்யானம்)

மன்மாதா ஸஸிசேகரோ மம பிதா ம்ருத்யுஞ்ஜயோ மத்குரு:
ந்யக்ரோதத்ரும மூலவாஸாஸிகோ மத் ஸோதர: ஸங்கர:
மத்பந்துஸ்த்ரிபுராந்தகோ மம ஸகா கைலாஸசைலாதிப:
மத்ஸ்வாமீ பரமேஸ்வரோ மம கதி: ஸாம்ப: ஸிவோ நேதர:

பொதுப் பொருள்: பிறைசூடிய பெருமானே, நீங்களே என் தாய். யமனை வென்ற ஈசனே, நீங்களே என் தந்தை. ஆலமரத்தடியில் அமர்ந்து தட்சிணா மூர்த்தியாக விளங்கும் நீங்களே எனக்கு ஆசான். உலகுக்கே மங்களம் செய்விக்கும் மகாதேவனே, நீங்களே என் சகோதரன். த்ரிபுர சம்ஹாரம் செய்த ருத்ரனே நீங்களே எனக்கு உறவினர். கயிலாய மலையின் அதிபரே, நீங்களே என் தோழர். பரமேஸ்வரனே, நீங்களே என் தெய்வம். அம்பாளின் கருணையும்சேர்த்து அருள்பாலிக்கும் உமாமகேஸ்வரா, எனக்கு உங்களைத் தவிர வேறு கதி இல்லை. என்னைக் காத்து, பஞ்சம், பட்டினியில்லாத வாழ்க்கையை அருள்வீராக.

(காசி விஸ்வநாதர் சந்நதியில் தினமும் அர்த்தஜாம பூஜையில் பாராயணம் செய்யப்படும் ஸ்லோகம் இது. இத்துதியை ஆனித் திருமஞ்சனம் அன்று பாராயணம் செய்தால் எல்லா நன்மைகளும் பெருகும்.)

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

Related articles

Recent articles

spot_img