spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅரசியல்செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் நீக்கியது சரியா?

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் நீக்கியது சரியா?

- Advertisement -

வானிலை பாலு

இன்று 29.06.2023 தமிழக அமைச்சரவையிலிருந்து இலாகா இல்லாத அமைச்சர் திரு செந்தில் பாலாஜியை தமிழக ஆளுநர் திரு ஆர்.என். ரவி அவர்கள் நீக்கியிருக்கிறார். இது சாரியா? சரிதான் சில கட்சிகளின் தலைவர்களும் ‘சரியல்ல; ஆளுநர் வரம்பு மீறிவிட்டார்’ என சில கட்சிகளும் கருத்து தெரிவித்துள்ளன.

சட்ட வல்லுநர்கள் சிலர் முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே ஆளுநர் ஒருவரை அமைச்சராக நியமிக்கலாம் அல்லது நீக்கலாம் எனக் கருத்து தெரிவித்துள்ளனர். வேறு சில சட்ட வல்லுநர்கள் ஒரு அமைச்சர் அந்த மாநிலத்தின் ஆளுநரின் மனதுக்குப் பிடிக்கும் வரையில் மட்டுமே அமைச்சராக நீடிக்க முடியும் என்ற சட்ட விதியைச் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது இப்போது ஒரு நீண்ட சட்டப் போராட்டத்திற்கு வழி வகுக்கும். உயர்நீதி மன்றம், உச்சநீதிமன்றம் என இந்தச் சட்டப் போராட்டம் தொடர்ந்து நடக்கும்.
இந்த விஷயத்தைப் பொறுத்த வரையில் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில நமக்கு நியாயம் என்ன என்பதைச் சொல்லும்.

(1) செந்தில் பாலாஜி மீது தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கு அவர் அஇஅதிமுக செய்த ஒரு குற்றாத்திற்காக. குற்றம் அவர் அரசு வேலை தருவதாகச் சொல்லிப் பலரிடம் பணம் வாங்கினார். நீதிமன்றத்தில் அவர் நான் அந்தப் பணத்தை வாங்கவில்லை என வழக்காடவில்லை. மாறாக நான் வாங்கிய பணத்தைத் திரும்பிக் கொடுத்துவிட்டேன். எனவே வழக்கை முடித்து வையுங்கள் என உயர் நீதிமன்றத்தில் கோரினார். விநோதமாக உயர் நீதிமன்றம் அவர் கோரிக்கையை ஏற்று வழக்கைத் தள்ளுபடி செய்தது. வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டபோது உச்ச நீதிமன்றம் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.

(2) இது தொடர்பாக அவரது இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் பல ஆவணங்கள் கிடைத்ததாக சோதனை செய்த அதிகாரிகள் கூறுகின்றனர்.

(3) அவரை கைது செய்ய முற்பட்டபோது அவர் தனக்கு உடல்நலமில்லை எனச் சொல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

(4) இப்போது வழக்கு, குற்ற விசாரணைக்காக அவரைக் கைது செய்யலாமா என்பதிலிருந்து, சோதனையின்போது மனிதாபிமற்ற முறையில் அவர் துன்புறுத்தப்பட்டார் என்ற வகையில் திரும்பியது. ஆளுங்கட்சி அமைச்சராக இருப்பதால் அவருக்கு நீதிமன்றத்தில் பல சலுகைகள் கிடைப்பதுபோன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டுவிட்டது.

(5) மாநில அரசு அவரது இலாக்காக்களை வேறு அமைச்சர்களுக்கு மாற்றப் பரிந்துரைத்தது. ஆளுநர் அதனை ஏற்றார். ஆனால் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக நீடிப்பதை என்னால் அனுமதிக்க முடியாது என அரசுக்கு எழுதினார்.

(6) அரசு ஆளுநரின் கடிதத்தை அலட்சியம் செய்து, செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என ஒரு அரசாணை வெளியிட்டது. இதனால் ஆளுநரின் ஈகோ சீண்டிவிடப்பட்டது.

(7) இப்போது ஆளுநர் அமைச்சரை நீக்கி ஆணை பிறப்பித்திருக்கிறார். இது சரியா தவறா என்பதை இனி வழக்காடித்தான் முடிவு செய்ய முடியும்.

(8) ஒரு அரசு ஊழியர் குற்ற வழக்கில் கைதானால், 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் இருந்தால் அவர் தானாக பதவியில் இருந்து இடை நீக்கம் செய்யப்படுவார். பின்னர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் அவர் பதவிநீக்கம் செய்யப்படுவார். இதற்கு Moral Turptitude class என்ற பிரிவு பயன்படும். ஆனால் அமைச்சர்களை அவ்வளவு சுலபமாக கைது செய்ய முடியாது என்பதால் இந்த விதி அவர்களுக்குச் செயல்படுத்தப்படுவதில்லை.

(9) நியாயப்படி பார்த்தால் செந்தில் பாலாஜி பணத்தைத் திருப்பிக் கொடுத்ததாகச் சொன்னதன் மூலம் குற்றாத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார். எனவே அவர் தானாகவே பதவி விலகி இருக்கவேண்டும்.

(10) ஒருவர் அவதூறாக பிராசாரம் செய்திருக்கிறார் என தமிழக அரசு குறிப்பாக எதிர்க்கட்சி ஆதரவாளர்களை கைது செய்கிறது. அவர் பதிவிட்டிருப்பது பற்றிய ஆதாரம் இருந்தால் நேரடியாக வழக்குப் பதிவுசெய்து வழக்காடலாம். அதில் மேலும் விசாரிப்பதிற்கு என்ன இருக்கமுடிண்டும்? ஆனால் இங்கே குற்றத்தை ஒப்புகொண்ட ஒருவருக்கு அரசு வக்காலத்து வாங்குகிறது. இது சரிதானா என்று தமிழக அரசு சிந்திக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe