சென்னை:
யாருக்காவது தைரியம் இருந்தால் எனது பூணூலை வெட்ட வரட்டும் என தனது டிவிட்டர் பக்கத்தில் படம் போட்டு வீரத்தைக் காட்டியுள்ளார் காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன்.
பூணூல் அணிந்த தனது புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ள அவர், “எவருக்காவது வீரம் இருந்தால், இந்த நேரம், இடத்தில் என் பூநூலை வெட்ட வரட்டும்.. அவன் முதலில் என் முஸ்லீம், கிறிஸ்துவ, ஹிந்து தலித் மற்றும் பிற இந்து நண்பர்ஙளை கடந்து என்னிடம் வருவதற்குள் அவன் தடுக்கப் பட்டு, தண்டிக்கப் பட்டிருப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
திராவிடர் கழக குடும்ப இயக்கத்தினர் மீண்டும் பூணூல் அறுப்பு அரசியலைக் கையில் எடுத்துள்ளனர். நேற்று சென்னை மயிலாப்பூர், திருவல்லிக்கேணி பகுதியில் சுமார் 15 முதிய பிராமணர்களின் பூணூலை அறுத்ததாக ராயப்பேட்டை போலீசில், திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த 4 பேர் நேற்று சரணடைந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
எவருக்காவது வீரம் இருந்தால், இந்த நேரம், இடத்தில் என் பூநூலை வெட்ட வரட்டும்.. அவன் முதலில் என் முஸ்லீம், கிறிஸ்துவ, ஹிந்து தலித் மற்றும் பிற இந்து நண்பர்ஙளை கடந்து என்னிடம் வருவதற்குள் அவன் தடுக்கப் பட்டு, தண்டிக்கப் பட்டிருப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. pic.twitter.com/yzZY4jpKdO
— V Narayanan-Americai (@americai) March 7, 2018




vara mattangira thairiyam thaan.bhathikka padu athu satharana makkal thaan..mudinja stalinukku advi e pannunga