ஆபாசமாக படம் பிடித்து மிரட்டி பலாத்காரம்! விசிக., நிர்வாகிக்கு குண்டாஸ்!

Published:

arrest 1 - 2026

ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பெண்களை பலாத்காரம் செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பலாத்காரம் செய்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி உள்பட இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது!

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே செல்லியம்பாளையம் சேர்ந்த ரங்கநாதன் மகன் மோகன்ராஜ் (42 வயது). காகாபாளையம் ஆட்டோ ஸ்டாண்ட் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்க தலைவராக உள்ளார் மோகன்ராஜ்.

இவரது கூட்டாளி அதே பகுதியைச் சேர்ந்த நாராயணன் மகன் மணிகண்டன் (22 வயது). இவர்கள் இருவரும் தனியாக வேலைக்குச் செல்லும் பெண்கள், கணவரை இழந்தவர்கள் ஆகியோரைக் குறிவைத்து, ஆட்டோவில் இலவசமாக ஏற்றிச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

இதன்மூலம் பெண்களிடம் நெருக்கமாகப் பழகி அவர்களின் ஆபாசக் காட்சிகளை தங்கள் மொபைல் போன்களில் பதிவு செய்து வைத்தனர். பின்னர் அதைக் காட்டி மிரட்டியே அவர்களை பலாத்காரம் செய்துள்ளனர்.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

இவர்கள் மீது பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்தது உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில் மோகன்ராஜ், மணிகண்டன் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கொண்டலாம்பட்டி போலீசார் பரிந்துரைத்துள்ளனர்.

அதை ஏற்று ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டதால் சேலம் மத்திய சிறையில் உள்ள இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!

Related articles

Recent articles

spot_img