வாழைகளை சேதப்படுத்தியதிய பாகுபலி காட்டுயானை.

Published:

மேட்டுப்பாளையம் அருகே மங்களக்கரைபுதூர் பகுதியில் விளை நிலங்களில் நுழைந்த பாகுபலி காட்டுயானை 300 வாழைகளை நேற்றரிவு சேதப்படுத்தியதிய சம்பவம் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நெல்லிமலை உள்ளது. இப்பகுதியை சுற்றி குறும்பனூர், பஞ்சுக்காடு, சமயபுரம், பத்திரகாளியம்மன் கோயில் பகுதி, தேக்கம்பட்டி, கிட்டாம்பாளையம், மங்களக்கரைபுதூர், தாசம்பாளையம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. இந்நிலையில் மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதியில் நடமாடி வந்த பாகுபலி என பொதுமக்களால் அழைக்கப்படும் ஒற்றை காட்டுயானை கடந்த 3 நாட்களாக மேற்கண்ட பகுதியில் நடமாடி வருகிறது. இதனிடையே தினசரி மாலை 7 மணிக்கு மேல் நெல்லிமலை பகுதியில் இருந்து குரும்பனூர் வழியாக வெளியே வரும் ஒற்றை காட்டுயானை விளை நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தி செல்கிறது- இதையொட்டி நேற்றிரவு வனத்தை விட்டு வெளியேரிய காட்டுயானை வனத்துறையினரை மீறி மங்களக்கரைபுதூர் பகுதியலுள்ள வாழை தோட்டத்திற்குள் நுழைந்தது. இதில் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த கதளி, செவ்வாழை தோட்டங்களில் இருந்த 300 வாழைகளை சேதப்படுத்தியது. இதனால் விசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. எனவே விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுயானையை விரைவில் வேறுபகுதியில் விரட்டி அடிக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

IMG 20220430 WA0087 - 2026
IMG 20220430 WA0086 - 2026
202204291207194160 Tamil News Tamil News bhahubali elephant entered village near MEDVPF 1 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img