health tips - 2026

அப்பாச்சி தீர்வு: வயிற்றுப்போக்கு, மேகநோய், மகோதரம், இடுப்பு வலி, மயக்கம்..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

வயிற்றுப் போக்கிற்கு…

மாதுளம் பழத்தோவை உலர்த்தி பொடித்து சர்க்கரை சேர்த்து காலை. மாலை கால் ஸ்பூன் சாப்பிட்டு வர வயிற்றுப் போக்கு குணமாகும்.

மேகநோய் குணமாக…

பொடுதலை இலையை உலர்த்தி தூள் செய்து வல்லாரை இலையை அவித்து உலர்த்தி தூள் செய்து இரண்டிலும் கால் ஸ்பூன் தூள் எடுத்து தேனில் குழப்பி காலை, மாலை நாற்பது நாள்கள் சாப்பிட்டு வர மேகநோய் குணமாகும். மருந்து சாப்பிடும் போது உப்புக் குறைத்து பத்தியமாக இருக்க வேண்டும்.

மகோதரம் சரியாக…

இந்த வியாதியினால் வயிறு. கை, கால் வீங்கிவிடும். காட்டாமணக்கு இலை 35 கிராம் எடுத்து நான்கு அவுன்ஸ் கோமயம் (பசு மூத்திரம்) விட்டு இடித்து சாறு பிழிந்து காவை, மாலை இரண்டு அவுன்ஸ் வீதம் மூன்று நாள்கள் சாப்பிட குணமாகும். மருந்து சாப்பிடும் நாள்களில் உப்பில்லா பத்தியம் இருக்க வேண்டும்.

இடுப்பு வலியா?

ALSO READ:  இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

பவளமல்லிகை இலைகளை மண் சட்டியிலிட்டு வதக்கி நீர்விட்டுக் காய்ச்சி பாதியளவாக சுண்டியதும் இறக்கி வடிகட்டி காலை, மாலை ஓர் அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வர இடுப்பு வலி, இடுப்பு சந்து வாதம் எல்லாம் குணமாகும்.

அடிக்கடி இளமயக்கம் ஏற்படுகிறதா?

35 கிராம் வெங்காயத்தை ஒரு லிட்டர் நீரில் போட்டு பாதியாக சுண்டக் காய்ச்சி அரை ஸ்பூன் கஷாயத்தை பசும்பாலில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வர குணமாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.