samayam tamil 1 2 - 2026

இந்திய ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே பொறுப்பேற்பு..

சற்றுமுன்

இந்திய ராணுவத்தின்29வது தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே இன்று பொறுப்பேற்றார்.
 இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியான எம்.எம். நரவனேவின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து ராணுவத்தின் அடுத்த தலைமைத் தளபதியாக இதற்கு முன்பு துணை தலைமை தளபதியாக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே இன்று பொறுப்பேற்றார்.
தொடர்ந்து, ராணுவத்தின் புதிய துணை தலைமைத் தளபதியாக பி.எஸ்.ராஜூ நியமிக்கப்பட்டுள்ளாா். இவரும் இன்று பொறுப்பேற்றார்.பொறியாளர்கள் பட்டாளத்தை சேர்ந்த ஒரு அதிகாரி ராணுவப் படையின் துணைத் தளபதியாக நியமிக்கப்படும் முதல் நபர் பி.எஸ் ராஜூ ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, ஓய்வுப் பெற்ற ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நரவனே மற்றும் அவரது மனைவி வீணா நரவனே ஆகியோர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா கோவிந்த் ஆகியோரை ராஷ்டிரபதி பவனில் சந்தித்து பேசினர்.

samayam tamil 1 2 - 2026
ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.