உலக நன்மை வேண்டி மேட்டுப்பாளையத்தில் ராஷ்ட்ரிய ஹிந்து மகா சபா சார்பில் 13வகையான மூலிகை பொருட்களை கொண்டு மகா சடியாகம் நடைபெற்றது
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள குமரன் குன்று பகுதியில் உலக நன்மை வேண்டியும் மக்கள் நோய் நொடியின்றி வாழ்வு மேம்பட ராஷ்ட்ரிய இந்து மகா சபா சார்பில் மகா சன்டியாகம் நடைபெற்றது
ராஷ்ட்ரிய இந்து மகா சபை மாநில தலைவர் வேலு ஜி தலைமையில் நடைபெற்ற சன்டியாகத்தில் ஸ்ரீ சோடா ஸ்ரீ பால திரிபுரசுந்தரி பீடத்தின் 23 குருமார்கள் பங்கேற்று இந்த யாகத்தை நடத்தினர்
யாகத்தில் பராசக்தி அன்னையின் அவதாரமான 13 தேவியர்களுக்கு 13கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன
அதனை தொடர்ந்து யாக வேள்வியில் பதிமூன்று வகையான பட்டுப்புடவை, மாங்கல்யம், கண்ணாடி வளையல், குங்குமம், மஞ்சள், எலுமிச்சை, கொப்பரை தேங்காய்,தேங்காய் பழம், மஞ்சள் பாதம் , மாலை, மரிக்கொழுந்து, முல்லை, தாமரை, வில்வ பூ மற்றும் பல்வேறு மூலிகைகளை கொண்டு சன்டியாகம் நடைபெற்றது
யாகத்தில் உலக நன்மை வேண்டி குருமார்கள் வேத மந்திரங்கள் ஓதி யாக பூஜைகள் நடத்தப்பட்டது இந்த மகா சண்டியாகத்தில் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்