வாழைப்பழத்துக்கு காசு கொடுத்ததை வாக்காளருக்கு கொடுத்ததா கதை கட்டிட்டாய்ங்களே! எடப்பாடியார் வேதனை!

Published:

Edappadi K Palaniswami - 2026

வாழைப்பழத்திற்குதான் பணம் கொடுத்தேன் என்று ஒரு வீடியோ புகாருக்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெண் வாக்காளருக்கு பணம் கொடுத்ததாக பரபரப்பு வீடியோ ஒன்றை எடிட் செய்து திமுக., சார்பு டிவி வெளியிட்டது.

ஆனால் அதற்கு பதிலளித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழைப்பழம் வாங்கி கொணடு அதற்கு பணம் கொடுத்தேன் என மறுப்பு தெரிவித்துள்ளார்.

சேலத்தில் இன்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் சேலம் நகரில் முக்கிய வீதிகளில் உள்ள காய்கறிக் கடைகள், பழக்கடைகள், மளிகைக் கடைகள், பாத்திரக் கடைகள், டீக்கடைகள் என ஒவ்வொரு கடையிலும் ஏறி இறங்கி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முதல்வர் எடப்பாடியார் நடந்தே சென்று ஓட்டு சேகரித்தார்.

அப்போது கடைஒன்றில் வாழைப்பழம் வியாபாரம் செய்து வந்த பெண்ணிடம் தேர்தல் பிரசார நோட்டீசுடன் பணத்தையும் மறைத்து வைத்து கொடுத்ததாக வீடியோ காட்சி சன் டி.வி.யில் வெளியானது.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

இதை அடுத்து, வாக்காளர்களுக்கு முதல்வரே நேரடியாக பணம் கொடுக்கிறாரென்று செய்தி ஒளிபரப்பப் பட்டது.

இந்தக் காட்சிக்கு மறுப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, பணம் எதுவும் கொடுக்க வில்லை. அந்தப் பெண்ணிடம் வாழைப் பழம் வாங்கிவிட்டு அதற்கு விலையாக பணம் கொடுத்தேன். எந்த பொருள் வாங்கினாலும் அதற்கு விலையாக பணம் கொடுப்பது என் வழக்கம். நான் வாழைப்பழம் வாங்கியதை எடிட் செய்துவிட்டு பணம் கொடுத்ததை மட்டும் டி.வி.யில் ஒளிபரப்பியுள்ளனர்… இது இட்டுகட்டிய கதை என்றார்.

பிரியாணி தின்றுவிட்டு, பணம் கொடுக்காமல் வருவது, ஓசி டீ, ஓசி பிரியாணி என எல்லாமே ஓசியில் அனுபவிப்பவர்கள் திமுக.,வினர். அதற்கு உரிய விலையாக பணம் கேட்டால், பாக்ஸிங் போட்டு கும்மாங்குத்து குத்தி, நாசப்படுத்திவிட்டு அராஜகத்தில் ஈடுபடுவது திமுக.,வின் பழக்கம். ஆனால், பழத்தை வாங்கி விட்டு அதற்குரிய விலையை முதல்வர் எடப்பாடி கொடுத்ததை தாங்கிக் கொள்ள முடியாமல், வழக்கம் போல் பொய்ப் பிரசாரத்தில் இறங்கிவிட்டது திமுக.வின் மீடியா.

96தேர்தலின் போது, ஒரு போட்டோ, சில ஜோடி செருப்புகள் இவற்றை நாள் முழுதும் காட்டியே வாக்காளரிடம் பொய்யைக் கொண்டு சென்ற ஊடகம் தானே என்று சமூக வலைத்தளங்களில் வசைகளும் வந்து கொண்டிருக்கின்றன.

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

Related articles

Recent articles

spot_img