அலங்காநல்லூரில்… லாரி மோதி பெண் போலீஸ் உயிரிழப்பு!

Published:

karthayini-police
karthayini-police

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் லாரி மோதி பெண் போலீஸ் ஒருவர் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கல்லணை ஊராட்சியை சேர்ந்தவர் கார்த்திகாயினி (27) தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் போலீஸ் வேலை பார்க்கிறார். இவரது கணவர் பெயர் ஆனந்த் (30) சென்னையில் போலீசாக உள்ளார். இவர்களுக்கு 3 மற்றும் 4 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை வேலைக்கு சென்ற போது குமாரம் அருகே எதிரே வந்த தண்ணீர் லாரி அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கார்த்திகாயினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீசார் தண்ணீர் லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்!

Related articles

Recent articles

spot_img