உசிலம்பட்டி தேவர் கல்லூரியில் தேவர் ஜயந்தி விழா!

Published:

usilampatti devar college
usilampatti devar college

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

விழாவிற்கு, கல்லூரிச் செயலர் வாலாந்தூர் பாண்டியன் தலைமை தாங்கினார். தலைவர் பால கிருஷ்ணன், பொருளாளர் வன ராஜா நிர்வாக குழு உறுப்பினர்கள் போஸ், பாஸ்கர பாண்டியன், அம்மாசி, ஜெயவீரணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்லூரி முதல்வர் ரவி, விழாவை துவக்கி வைத்து பேசினார். பேராசிரியர் சதீஸ் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட பார்வர்டு பிளாக் மாநில பொது செயலாளர் கதிரவன் மற்றும் தேசிய செயலாளர் தேவராஜ் சிறப்புரை யாற்றினார்.

கல்லூரியின் துணை முதல்வர் ஜோதிராஜன், ஒருங்கிணைப் பாளர் பொன்ராம், செல்லம்பட்டி ஒன்றிய துணைத் தலைவர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் ராஜா, புலவர் சின்னன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவில், மாணவர்களுக் கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப் பட்டது. தமிழ் பேராசிரியை ஜான்சி தலைமையில் சிறப்பு பட்டி மன்றம் நடந்தது.

விழாவிற்கான ஏற்பாடுகளை, பேராசிரியகள் நாகப்பிரியா, கீர்த்திகா, ராஜேஸ்வரி, சுபாஷ் ஆகியோர்கள் செய்திருந்தனர். ஆங்கில துறை பேராசிரியை இந்துஸ்ரி நன்றி கூறினார்.

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

Related articles

Recent articles

spot_img