
மதுரை: பயணிகள் வருகை குறைந்ததால், மதுரை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பத்து விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.
உள்நாட்டு பயணிகளின் விமான சேவையானது கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ நிறுவனங்கள் பயணிகள் சேவையில் ஈடுபட்டதாம்.
மதுரையிலிருந்து சாதாரண நாள்களில் 24 பயணிகளின் விமானங்கள் தினசரி இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் கடந்த 55 நாள்களாக, மதுரையில் முழுவதுமாக விமான சேவை நிறுத்தப்பட்டு, கடந்த இரு தினங்களாக உள்நாட்டு பயணிகள் விமானம் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பயணிகள் வரத்து குறைந்ததால், விமான நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை காலை 10 விமானங்களின் சேவையை ரத்து செய்து, நான்கு பயணிகளின் விமானங்கள் இயக்கப்பட்டன.
மதுரை விமான நிலையத்தில் பயணிகள் அனைவரும் கடுமையான பரிசோதணைக்கு பிறகு , பயணிக்க அதிகாரிகள் அனுமதித்தனர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை



