செவ்வாய்க் கிழமை இன்று ஒரு பெரிய திருப்பமாக, தில்லி குற்றப்பிரிவு போலீஸார், தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்கள் மீது தலைநகரின் சாகேத் நீதிமன்றத்தில் 20 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்கிறது.
ஆதாரங்களின்படி, 20 குற்றப்பத்திரிகைகள் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ள முதல் தொகுதியில், மார்கஸ் நிகழ்வில் கலந்து கொண்ட 83 க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பெயரைக் குறிப்பிட்டுள்ளது. 20 குற்றப்பத்திரிகையில் தப்ளிக் இ ஜமாஅத்தின் 2000 உறுப்பினர்கள் மீது குற்றம் சாட்டப்படுமென்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மார்ச் மாதத் தொடக்கத்தில் புதுதில்லியில் நிஜாமுதீன் மார்க்கஸில் நடைபெற்ற தப்லிக் இ ஜமாஅத் நிகழ்வு நாட்டின் ஒட்டுமொத்த COVID-19 கேஸ்களில் 30% க்கும் அதிகமான உயர்வுக்கு வழிவகுத்தது, இதில் கலந்து கொண்டவர்களில் பலர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்று புவியியல்ரீதியாக கொரோனோ பரவலை அதிகரிக்க வைத்தனர்.
முன்னதாக மே 6 ஆம் தேதி, 35 நாட்களுக்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்ட அனைத்து மார்கஸ் பங்கேற்பாளர்களுக்கும் ஒரு பெரிய நிம்மதி தரும் வகையில், தனிமைப்படுத்தல் காலத்தை முடித்துக் கொண்ட 4000 தப்லீக் இ ஜமாஅத் உறுப்பினர்களை அங்கிருந்து விடுவிக்கும் படி தில்லி அரசு உத்தரவிட்டது. மேலும், தில்லி போலீஸ் விசாரணையில் பெயரிடப்பட்டிருந்த உறுப்பினர்கள் அனைவரையும் போலீஸ் காவலுக்கு அனுப்ப உத்தரவிட்டது. மீதமுள்ள உறுப்பினர்களை தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திருப்பி அனுப்ப உத்தரவிட்டது.
மார்கஸ் கிளஸ்டர் கண்டுபிடிக்கப் பட்டதிலிருந்து, அந்த இடத்தில் இருந்த அனைத்து பங்கேற்பாளர்களும் வெளியேற்றப்பட்டு தில்லியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் நன்கு கண்காணிக்கப்பட்ட பின்னர், அந்தந்த தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து தொடர்ச்சியாக இரண்டு முறை கொரோனா சோதனை மேற்கொள்ளப் பட்டு, பின்னர் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பி அனுப்பப் பட்டனர்.
இருப்பினும், தில்லியின் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தங்கவைக்கப்பட்டவர்கள் தற்போது விடுவிக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தப்லிகி ஜமாத்தின் கோவிட் -19 பரவல்:
மார்ச் 30 அன்று வெளியான தகவலின் படி, மார்ச் 13 முதல் 15 வரை தப்லிகி ஜமாத்தின் தலைமையகமான மார்க்கஸ் நிஜாமுதீன் மசூதியில் ஒரு மத நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது, இதில் மலேசியா, இந்தோனேசியா, சவுதி அரேபியா, கிர்கிஸ்தான் மற்றும் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து 3400 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் படுவதற்கு சற்று முன்னர், ஆனால் இதுபோன்ற அதிகம் பேர் ஒன்று கூடும் கூட்டங்களுக்கு எதிராக மாநிலத்தின் உத்தரவு பிறப்பிக்கப் பட்ட பிறகு, இந்த பங்கேற்பாளர்களில் 1500 பேர் நாட்டின் பல பகுதிகளுக்கும் அவசரம் அவசரமாகத் திரும்பினர், இது கொரோனா வைரஸ் பரவ அதிகம் வழிவகுத்தது.
ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதற்காகவும், மற்றவர்களை அவ்வாறு நடந்து கொள்ளத் தூண்டிவிட்டதாகவும் தில்லி குற்றப்பிரிவு போலீஸார், பின்னர் மார்கஸ் தலைவர் மௌலானா சாத் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிகழ்வில் இருந்து பெறப்பட்ட ஆடியோ டேப்களில், கொரோனா வைரஸைப் பற்றி அறிவியல்பூர்வமற்ற மற்றும் மத விரோத கூற்றுக்கள் பரப்பப் பட்டது தெரியவந்தது. மேலும் நம்பிக்கை அடிப்படையிலான துணிச்சலான பிரச்சாரமும் இங்கே மேற்கொள்ளப் பட்டது தெரியவந்தது.
இதனால்தான், மார்கஸ் நிகழ்வு குறித்து சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்த்தன் இப்போது புலம்புகிறார்!
இரு நாட்களுக்கு முன்னர், மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இந்த நிகழ்வைப் பற்றி விவாதித்த போது, தனது புலம்பலை வெளிப்படுத்தியிருந்தார், இது குறித்து மேலும் விவாதிக்க விரும்பவில்லை என்றார்.
“இந்த நிகழ்வு குறித்து போதுமான அளவு விவாதிக்கப்பட்டு விட்டது. இப்போதெல்லாம் யாராவது இந்த பிரச்னையை எழுப்பும் போது நான் மிக மோசமான மனநிலையை அடைகிறேன். இருப்பினும், மார்ச் இரண்டாவது வாரத்தில், உலகில் வைரஸ் மிக வேகமாக பரவி, ஒன்றரை மாதங்கள் கடந்துவிட்டன. நாடு முதல் கேஸைப் பதிவு செய்தது. அதுவரை நாட்டில் கொரோனா கேஸ்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது, “என்றார் அவர்.
“அந்த நேரத்தில், இந்த துரதிர்ஷ்டவசமான மற்றும் சோகமான சம்பவம் நடந்தது. அது நடந்தபோது, அங்கு எந்த சமூக இடைவெளியும் பின்பற்றப்படவில்லை. தில்லியில், அந்த நேரத்தில், 10-15 பேர் ஒன்றாக நின்று கொண்டிருக்க முடியாத சூழ்நிலை இருந்தது. அந்த நேரத்தில், 12 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் அங்கே வந்தனர்,” என்று சுகாதார அமைச்சர் மேலும் கூறினார்.
இந்த மார்க்கஸ் குறித்து தகவல் பெறப்பட்ட நேரத்தில், அங்கிருந்து நிறைய பேர் அகற்றப்பட்டனர்! ஆனால் அதற்கு முன்பே நிறைய பேர் அங்கிருந்து வெளியில் பல்வேறு பகுதிகளுக்கும் பரவலாகச் சென்று விட்டனர். அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை அதிகரித்தது….என்றார் அவர்.
இருப்பினும், பல்வேறு மாநில அரசுகளும், உள்துறை அமைச்சக அதிகாரிகளும் இந்த விவகாரத்தில் நிறைய உதவினார்கள்… என்று கூறியிருந்தார் ஹர்ஷ்வர்த்தன்.