சிவகாசி அருகே குடும்ப தகறாறில் கணவன் மனைவி தற்கொலை செய்து கொணட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் அருகே சிவகாசி அருகே கங்காகுளம் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி மகன் ஜெயமுருகன் (27). ஸ்ரீவில்லிபுத்தூரை அருகே கம்மாபட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகள் மாலதி (24) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளனர். தற்போது மாலதி 6 மாத கர்பிணியாக இருந்துள்ளார். இரண்டு பேரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இருந்துள்ளார். இரண்டு குடும்பத்தினருக்கும் நீண்ட காலமாக குடும்ப பிரச்சனை இருந்துள்ளது.இந்நிலையில் நேற்று நள்ளிரவு இரண்டு பேரும் சிவகாசி அருகே கங்காகுளத்தில் உள்ள வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு திருத்தங்கல் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தி 2பேர் உடல்களையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பிரேத பரிசோதனைக்காக 2பேரின் உடல்கள் இன்றுகாலை விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து திருததங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடததி வருகின்றனர்.