
ஜனாதிபதி யாக பதவியேற்ற பிறகு முதல்முறையாக தமிழகம் வந்த திரெளபதி முர்முவுக்கு விமானநிலையத்தில் கவர்னர் ரவி வரவேற்பு கொடுத்தார்.பின்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வந்த அவருக்கு பூர்ண கும்ப மரியாதையுடன் கோயில் நிர்வாகம் வரவேற்றது.ஜனாதிபதி மீனாட்சி அம்மன் கோயில் சுந்தரேஸ்வரர் கோயில் சாமி தரிசனம் செய்தார்.
இரண்டு நாள் பயணமாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தமிழ்நாடு வந்தார். குடியரசு தலைவராக பதவியேற்ற பின்னர் திரௌபதி முர்மு முதன் முறையாக இன்று தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார்
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் காலை 11.45 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் குடியரசு தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதியை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

இதனை தொடர்ந்து அவர், மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். கோயிலில் குடியரசு தலைவருக்கு பூர்ண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர் கோயிலில் மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் சன்னிதிகளில் தரிசனம் செய்த அவருக்கு கோயில் வரலாறு கட்டிடக்கலை குறித்து தக்கார் கருமுத்து கண்ணன் விளக்கி கூறினார். அவருக்கு கோயில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
பின்னர், கோயிலில் நடைபெறும் அன்னதான நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு கோயிலில் பிரசாதம் உண்ட பிறகு மதுரையிலிருந்து கார் மூலம் விமானம் சென்று, அங்கிருந்து தனி விமானம் மூலம் கோவை சர்வதேச விமான நிலையத்துக்குச் செல்கிறார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக கோயில் வளாகத்தில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் டிரோன் கேமராக்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டது.
எட்டு இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிபு
உயரமான மாடிகளின் மீது இருந்தும் ஆயுதம் ஏந்திய காவல் துறையினர்
மீனாட்சி அம்மன் கோயில் வளாகம் முழுவதும் காவல் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.
ஓய்வு எடுத்தபின் பிற்பகல் அங்கிருந்து விமானம் மூலம் புறப்பட்டு, மாலை 3.10 மணிக்கு கோவை பீளமேடு விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் கார் மூலம் ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். மாலையில் கார் மூலம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்திற்கு செல்கிறார்.
மாலை 6 மணிக்கு ஆதியோகி சிலை மற்றும் தியான லிங்கத்தில் பஞ்சபூத ஆராதனையுடன் தொடங்கும் மகா சிவராத்திரி விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். அவரை, ஈஷா யோக மையத்தின் நிறுவனர் சத்குரு வரவேற்கிறார்.
இரவு 9.15 மணிக்கு ஈஷா யோக மையத்தில் இருந்து கார் மூலமாக புறப்பட்டு கோவை சுற்றுலா விருந்தினர் மாளிகை வந்து தங்குகிறார். நாளை ஞாயிற்றுக்கிழமை காலை காரில் கோவை விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார்.
போரில் உயிர்நீத்த வீரர்கள் நினைவு தூணில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் பகல் 12 மணி அளவில் அங்கிருந்து ஹெலிகாப்டரில் கோவை விமான நிலையம் திரும்பும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, தனி விமானத்தில் டெல்லி செல்கிறார். ஜனாதிபதி வருகையையொட்டி மதுரை, கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.




