cryogrnic test isro pic 1539399267 - 2026

நெல்லை அருகே இஸ்ரோ நடத்திய கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி..

நெல்லை
cryogrnic test isro pic 1539399267 - 2026

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் கிரையோஜெனிக் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. 

நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள இஸ்ரோ மையத்தில், எல்விஎம்3 ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் என்ஜின் பரிசோதனை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக நடந்தது. நேற்று மாலை 4 மணிக்கு ‘சிஇ-20’ கிரையோஜெனிக் என்ஜின் சோதனை 28 வினாடிகள் நிகழ்ந்தது.

இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தற்போது தெரிவித்துள்ளனர். இந்த கிரையோஜெனிக் என்ஜின் உதவியுடன்  எல்விஎம்3 ராக்கெட் மூலமாக லண்டனில் தயாரிக்கப்பட்ட 36 OneWeb India-1 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்ட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.