370வது சட்டப்பிரிவு ரத்து: நெல்லையில் வழக்கறிஞர்கள்பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

Published:

nellai advocates welcomes - 2026

காஷ்மீருக்கு தனி சலுகை வழங்கிய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370 ஐ ரத்து செய்த குடியரசுத் தலைவருக்கும் மத்திய அரசுக்கும் வாழ்த்து தெரிவித்து இந்து வழக்கறிஞர் முன்னணிமற்றும் பா.ஜ.க வழக்கறிஞர்கள்,  நெல்லை மாவட்ட நீதிமன்றம் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் கா.குற்றாலநாதன், பா.ஜ.க வக்கீல் அணி மாநில செயலாளர் பாலாஜிகிருஷ்ணசுவாமி ஆகியோர் தலைமையில் பிஎம்எஸ் மாநில செய்ற்குழு உறுப்பினர் T.R.ராஜகோபால், மூத்த வழக்கறிஞர் G.தனபால் அதிவக்தா பிரிவு மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில்பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் இந்த மகிழ்ச்சிக் கொண்டாட்டம் நடைபெற்றது.

இந்து வழக்கறிஞர் முன்னணி மாநில துணைத்தலைவர் சிதம்பரம் ,
மாவட்ட பொதுச்செயலாளர் வெற்றிவேல்,  மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட செயலாளர் துர்கேஸ்வரன், மாவட்ட துணைத்தலைவர் நாகராஜன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

மேலும், பா.ஜ.க மாவட்ட துணைத்தலைவர் சீதா, பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் ராஜீவ்காந்தி, பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு குமரேசன், சிவசுப்பிரமணியன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட இந்துமுன்னணி பா.ஜ.க வழக்கறிஞர்கள் பங்கேற்று பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி இந்த வரலாற்றுச் சம்பவத்தைக் கொண்டாடினர்.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

Related articles

Recent articles

spot_img