4வது அலை.. அபாயம்.. வீடுகளுக்கே வந்து தடுப்பூசி..: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்!

Radhakrishnan 1 - 2026

உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கி 2 ஆண்டுகள் தாண்டிவிட்டது. இருப்பினும், இப்போது வரை கொரோனா வைரசை எந்த நாடும் முழுமையாக அழிக்கவில்லை.

தற்போதைய சூழலில் கொரோனா தடுப்பூசி மட்டுமே வைரஸ் பாதிப்பைத் தடுக்க ஒரே ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து நாடுகளும் வேக்சின் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த வேக்சின் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காகவே ஒவ்வொரு வாரமும் தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

அதன்படி இந்த வாரம் தமிழ்நாட்டில் 25ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இது தொடர்பாகச் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார்.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், “தமிழ்நாட்டில் 25ஆவது மெகா தடுப்பூசி முகாமில் மட்டும் 5.53 லட்சம் பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 5.32 கோடி பேருக்கு ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. அதேபோல 4 கோடிக்கும் அதிகமானோருக்கு 2ஆவது டோஸ் கொரோனா வேக்சின் போடப்பட்டு உள்ளது.

அதாவது 92% பேருக்குக் குறைந்தது 2 டோஸ் வேக்சினும், 80% பேருக்கு 2 டோஸ் வேக்சினும் போடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து 12- 14 வயதுடையவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி மாநிலத்தில் 12- 14 வயதுடையவர்களுக்கு இதுவரை 4.29 லட்சம் பேருக்கு வேக்சின் செலுத்தி உள்ளோம்.

மாநிலத்தில் இதுவரை 1.34 கோடி பேர் 2ஆவது டோஸை செலுத்தாமல் உள்ளனர். கொரோனா அச்சம் இன்னும் முழுமையாக விலகிவிடவில்லை. கொரோனா கேஸ்கள் மீண்டும் உயர வாய்ப்புள்ளது.

உலக நாடுகளை பார்த்தால் நமக்குத் தெரியும். பல நாடுகளில் இப்போது வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கொரோனா வழிகாட்டுதல்களை நாம் முறையாகப் பின்பற்றவில்லை என்றால் மீண்டும் 4ஆம் அலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றாவிட்டால் மற்ற நாடுகளைப் போல் நாமும் கொரோனா தொற்றால் அவதிப்படும் சூழ்நிலை உருவாகும்.

ஒரு டோஸ் வேக்சின் போட்டுக் கொண்டு 2ஆம் டோஸ் வேக்சின் போடாமல் இருப்போரின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. வரும் காலத்தில் அவர்கள் வீடுகளுக்கே சென்ற கொரோனா வேக்சின் செலுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

குறிப்பாகத் தமிழ்நாட்டில் பலரும் மாஸ்க் அணிய மறந்து வருகின்றனர். இதுவும் 4ஆம் அலை பரவு வாய்ப்பாக அமைந்துவிடும். எனவே அனைவரும் விரைவில் வேக்சின் செலுத்த வேண்டும், சீக்கிரமாக வேக்சின் போட்டுக் கொள்ள வேண்டும்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Entertainment News

Popular Categories