yes bank news1 - 2026

ஆட்டிசம் குறைபாடு உள்ள மகனின் பராமரிப்புக்கு என்ன செய்வது?
— பணம் எடுக்க முடியாத யெஸ் வங்கி வாடிக்கையாளர் கண்ணீர்..
– புதிய தலைமுறை செய்தி.

YES வங்கி வாடிக்கையாளர்கள் 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே எடுக்க முடியும் என்னும் உத்தரவை ரிசர்வ் வங்கி பிறப்பித்து இருந்தாலும் விதி விலக்குகளையும் குறிப்பிட்டு இருக்கிறது….

மருத்துவம், கல்வி , திருமணம், குடும்ப நிகழ்ச்சிகள், மற்றும் தவிர்க்க முடியாத அவசர செலவுகளுக்காக 5 லட்சம் ரூபாய் வரை பணம் எடுக்க முடியும் என்பதே அந்த விதி விலக்கு அறிவிப்பு.

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு நேற்றே வெளியிடப்பட்டு விட்ட நிலையில் குழந்தையின் மருத்துவ செலவை எப்படி சந்திப்பது என தந்தை கண்ணீர் என்று ஒரு ஊடகம் செய்தி வெளியிடுகிறது.

yes bank news - 2026

பொது மக்களுக்கு தேவையான தகவலை தந்து உதவ வேண்டிய பொறுப்பில் உள்ள ஊடகத்திற்கே போதிய அளவில் தகவல் தெரியவில்லை, அல்லது தெரிந்து கொள்வதிலும், தெரிந்து கொண்டு பொது மக்களுக்கு உதவி புரிவதிலும் அக்கறையில்லை என்பதே அவலத்தின் உச்சம்.

  • வசந்தன் பெருமாள்
ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending