சர்ப்ப பயம் நீங்க… சொல்லுங்க இந்த மந்திரத்தை!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் லைஃப் ஸ்டைல்
ashtanaga - 2026

விலகிச்செல் சர்ப்பமே
உனக்கு மங்களமுண்டாகட்டும்
தொலைவில் சென்றுவிடு
பெரும்புகழ் படைத்தவனே
ஜனமேஜயனது வேள்வியின் முடிவில்
ஆஸ்திகனது வசனத்தை நினைவில் கொள்.

ஜரத்காருவுக்கு ஜரத்காருவினிடத்தில்
தோன்றிய பெரும்புகழ் படைத்த ஆஸ்திகன்
சத்யசந்தன் அரவங்களிடமிருந்து அவன் என்னைக் காத்திடுக.

இந்த இரண்டு சுலோகங்களும் சர்ப்ப பயம் நீங்குவதற்காக பாரம்பரியமாக சொல்லப் பட்டு வருபவை. இந்த சுலோகங்கள் தினசரி சந்தியா வந்தனத்தில் திசைகளை வணங்கும்போது வடக்கு நோக்கி சொல்லப்படவேண்டும் என்ற முறைமை சம்பிரதாயமாக உள்ளது (சில சம்பிரதாயங்களில் இல்லாமலிருக்கலாம், நான் பின்பற்றி வருவதில் உள்ளது.

அபஸர்ப ஸர்ப ப⁴த்ரம்ʼ தே
தூ³ரம்ʼ. க³ச்ச² மஹாயஶா:
ஜனமேஜயஸ்ய யஜ்ஞாந்தே
ஆஸ்தீக வசனம்ʼ ஸ்மரன்

ஜரத்காரோர்-ஜரத்கார்வாம்ʼ
ஸமுத்பன்னோ மஹாயஶா:
ஆஸ்தீகஸ்-ஸத்யஸந்தோ⁴ மாம்ʼ
பன்னகே³ப்⁴யோsபி⁴ரக்ஷது

  • ஜடாயு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.