புதுக்கோட்டை புவனேஸ்வரி பீடத்தில் மகாசரஸ்வதி பூஜை!

ஆன்மிகச் செய்திகள் திருச்சி
pudukottai bhuvaneshwari saraswathi alankaram
pudukottai bhuvaneshwari saraswathi alankaram

புதுக்கோட்டை ஸ்ரீ புவனேஸ்வரி  வித்யாபீடத்தில்  மஹா சரஸ்வதி பூஜை   முன்னிட்டு விசேஷ பூஜைகள்,நடைபெற்றது  

புதுக்கோட்டை ஸ்ரீ புவனேஸ்வரி  வித்யாபீடத்தில்  நவராத்திரியின் எட்டாம் நாள் நிகழ்ச்சியாக மஹா சரஸ்வதி பூஜை   முன்னிட்டு விசேஷ பூஜைகள் ,  ஸ்ரீ புவநேச்வரீஅம்பாள் , மஹா சரஸ்வதி அலங்காரத்தில் அருள் பாலித்தார்.  

காலை முதல் நடைபெற்ற ஹம்ஸவாகீஸ்வரி மந்த்ர பல்லவ மேதாஸூக்த ஹோமத்தின் பூர்ணாஹுதியும், பூஜ்யஸ்ரீ பிரணவாநந்த மஹாஸ்வாமிகளின் அருளாசியுடனும், ஸ்ரீ அஷ்டாதசபுஜ மஹாலக்ஷ்மி துர்காதேவிக்கு அபிஷேகம் நடைபெற்றது பின்னர் நடைபெற்ற பிரணவாநந்த மஹாஸ்வாமி பக்தர்களுக்கு  அருளாசிவழங்கினார்  

தனது அருளுரையில், ஸ்ரீ சரஸ்வதியின் பேரருளால், அனைவரும் கல்வியில் ஆர்வம் குறையாமல், நல்ல ஞாபக சக்தியுடனும்,  நேர்மையுடனும் பெரியவர்கள் சொல்கேட்டும், சிறந்து விளங்கவேண்டும் என்பதற்காகவும் செய்யப்பட்ட இன்றைய பூஜைகளும், ஹோமமும் நற்பலன்கள் அனைத்தையும் வழங்கும் என்று கூறினார்.  

  • டீலக்ஸ் சேகர், புதுக்கோட்டை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.