
ராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களின் தொடர சாதனை முயற்சியாக யோகா, கராத்தே, சிலம்பம், ஒவியம், இயல், இசை, நாடகம், அறிவியல் கண்காட்சி, அனைத்தும் டாக்டர் அப்துல்கலாமின் 99வது பிறந்த நாளில் 9 நிகழ்வுகள் 9 ஆயிரம் நிமிடங்களில் 15மணிநேரம் காலை 6 மணி முதல் 9 மணி வரை உலக சாதனை நிகழ்ச்தி மாபெரும் சாதனை படைத்து்ளனர்.
இதில் 99 மாணவர்கள் சிலம்பம் சுற்றி மாபெரும் சாதனை படைத்துள்ளனர் அமராவதிபுதுார் ராஜராஜன் சி பி எஸ் இ பள்ளி சமுக வியல் ஆசிரியை வடிவாம்பாள் உலக சாதனை நிகழ்த்தி சாதனை படைத்துள்ளார் இவர் 15.02 நிமிடத்தில் 96 (35 வகையான இட்லிகள் 24 வகையான கொழுக்கட்டைகள் 19 வகையான பணியாரங்கள் 11 வகையான வடைகள் 4 வகையான பூரிகள் 2 வகையான சீயம் உட்பட தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை சமைத்து உலக சாதனை படைத்துள்ளார்
குறள்குடி உமையாள் மெய்யம்மை 5.28 நிமிடத்தில் திருப்பாவை முப்பது பாடல்களை முழுமையான ஒப்புவித்து உலக சாதனை படைத்து பதிமூன்று வயதில் இச்சாதனை செய்துள்ளார் இவ்விரண்டு உலக சாதனைகளையும் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்டு மற்றும் புதுச்சேரி se.ve வேல்டு ரெக்கார்டு போரம் நிறுவன தலைவர் முனைவர் வெங்கடேசன் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் முனைவர் சரவணன் ஆகியோரால் கண்காணிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது
இவ்விரண்டு உலக சாதனை படைத்தவர்களையம் பள்ளி மாணவர்களின் 15 மணி நேர தொடர் சாதனைகளையும் ராஜராஜன் கல்வி குழுமத்தில் ஆலோசகர் அழகப்பா பல்கலைகழகத்தின் முன்னாள் துணை வேந்தர் சுப்பையா பாராட்டினார் இச்சாதனை நிகழ்வை பள்ளி முதல்வர் வாசுகி மற்றும் பேராசிரியர் வாசுகி கவிநாயகி ஒருங்கிணைந்து நடத்தினர்.