karur bjp - 2026

கரூர் மாவட்ட பாஜக சார்பில் இல்லந்தோறும் தேசிய கொடிகள் இலவசமாக வழங்கும் நிகழ்வு – 75 வது சுதந்திர தினத்தினையொட்டி ஆங்காங்கே தேசிய கொடிகளை கட்டி, தேச பற்றினை மீண்டும் சுவாசிக்க வைத்த கரூர் மாவட்ட பாஜக – அதிரடியாக களத்தில் இறங்கிய கரூர் மாவட்ட பாஜக தலைவர் வி.வி.செந்தில்நாதன்.

சுதந்திர தின அமுதப்பெருவிழாவை கொண்டாடும் வகையில் அனைவரும் இன்று முதல் 3 நாட்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற அரசு உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே பாரத பிரதமர் மோடி அவர்களும் 75 வது சுதந்திர தினத்தினை அவரவர் வீடுகளில் மூன்று தினங்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து கொண்டாட வேண்டுமென்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், அனைத்து வீடுகளிலும் இலவச தேசிய கொடிகளை கொடுத்த கரூர் மாவட்ட பாஜக, நகரம், ஒன்றியம், பேரூர் கழகம், கிளை கழகங்கள் சார்பில் இல்லந்தோறும் தேசிய கொடி ஏற்றி வைக்கும் நிகழ்வு கரூர்

ALSO READ:  ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை; போதை, கொலை, குற்றங்கள் குறித்து மக்கள் கவலை!

மாவட்டம் முழுவதும் கரூர் மாவட்ட பாஜக தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அனைவரது வீடுகளிலும் தேசிய கொடியை இலவசமாக வழங்கியதோடு, மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன், ஆங்காங்கே, அவரே, களத்தில் இறங்கி தேசிய கொடிகளையும் கட்டினார்.

கரூர் மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் துவங்கிய இந்த பணி காலை முதல் ஆரம்பித்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முன்னதாக, ஆங்காங்கே இல்லந்தோறும் சுதந்திர தின அமுதப்பெருவிழா குறித்த விழிப்புணர்வு கரூர் மாவட்ட பாஜக சார்பில் நடத்தப்பட்டது.

கூலி விவசாயிகள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் தங்களது வீடுகளில் தேசிய கொடி பறக்குமா ? என்ற உணர்வு இருந்த நிலையில், கரூர் மாவட்ட பாஜக சார்பில் வீடு, வீடாக இலவச தேசிய கொடிகளை கொடுத்து கட்டப்பட்டது பெருமளவிற்கு வரவேற்பு அளித்தது.

இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட பாஜக செயலாளர் டைம் சக்தி என்கின்ற சக்திவேல் முருகன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending