கரூரில் நடந்த நாட்டியாஞ்சலி! கலக்கிய செல்வி நித்யஸ்ரீ!

திருச்சி லைஃப் ஸ்டைல்
nithyasri karur - 2026

கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் செல்வி நித்ய ஸ்ரீ சுரேஷின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் முன்பகுதியில் உள்ள நால்வர் அரங்கில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் மருத்துவர் சுரேஷ் – ஜெடிலா ஆகியோரின் மகள் நித்யஸ்ரீ சுரேஷ் (வயது 15) நாட்டியம் ஆடி நடராஜருக்கு அஞ்சலி செலுத்தினார்.

பரதம் ஆடியபடி நடராஜருக்கு அஞ்சலி செலுத்திய இந்த நிகழ்ச்சியை பக்தர்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர். முன்னதாக குரு வணக்கமாக, இவர் தனது குரு முனைவர் சிவலோகநாதனுக்கும் மரியாதை செலுத்தினார்.

இந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிக்கான முழு ஏற்பாடுகளை கூத்தம்பலம் நாட்டிய அகாடமியினை சார்ந்த குரு முனைவர் சிவலோகநாதன் சிறப்பாக செய்திருந்தார். ஏற்கெனவே, இந்த கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் நவராத்திரி நிகழ்ச்சிகளில் பாட்டுக் கச்சேரி, வீணைக்கச்சேரி ஆகியவற்றில் பங்கேற்று பக்தி இசை சொற்பொழிவுகள் நிகழ்த்தியவர் நித்யஸ்ரீ என்பது குறிப்பிடத் தக்கது. தனது 10 வயதில் ஜெட்லி புக் ஆப் ரெக்கார்டு நிகழ்ச்சியில் இடம்பெற்று சாதனை புரிந்த நித்யஸ்ரீயின் நாட்டிய நிகழ்ச்சியில் இடம்பெற்ற சில அபிநயங்கள்….

nithyasri karur2 - 2026
nithyasri karur1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.