29 C
Chennai
25/10/2020 1:23 PM

பஞ்சாங்கம் அக்.25- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம்: அக்.25 ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...
More

  ஸ்டாலின், திருமாவளவன் இதற்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டும்: கொந்தளிக்கும் பாஜக., பிரமுகர்!

  மதரீதியான மோதல்களை தூண்டிவிட முனைந்த இவர்கள் மீது, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  ஆர்ப்பாட்ட அரசியல் : ஸ்டாலின், திருமாவளவன் உள்பட கட்சியினர் 3750 பேர் மீது வழக்கு பதிவு!

  மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் இல்லம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

  பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

  திருமாவளவனுக்கு அதிமுக., அமைச்சர்கள் கொடுத்த அட்வைஸ்!

  இதையடுத்து திருமாவளவன் மீது 6 பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

  கொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்!

  அவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்

  அடுத்த பாகுபலி..! ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்!

  பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News

  ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்!

  ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா. எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Source: Vellithirai News

  புதிய சைக்கோ த்ரில்லர் படம்… க்ளாப் அடித்து தொடங்கிவைத்தார் பாக்யராஜ்!

  ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்

  Source: Vellithirai News

  வயிற்றுப்போக்கு: பாட்டி வைத்தியம்!

  deria

  ஒரு நாளில் மூன்று அல்லது அதற்கு மேல் தண்ணீர் போன்று மலம் வருவது வயிற்றுப்போக்கு.

  அசுத்தமான உணவு, பானங்கள் உண்பதால் அல்லது அசுத்தமான கரண்டி, பாத்திரம் பயன்படுத்துவதன் மூலமாகவும் அசுத்தமான விரல்களால் வாயைத் துடைக்கும்போது எற்படும் தொற்றால் வயிற்றுப்போக்கு உருவாகும்.

  தண்ணீர் மற்றும் திரவங்கள் ஆகியவற்றின் இழப்பு உடலை பலவீனமாக்குகிறது. நம் உடலில் உள்ள திரவங்கள் மாற்றப்படாவிட்டால், வயிற்றுப்போக்கு இளம் குழந்தைகள் உயிருக்கு ஆபத்தாகும்.

  சுத்தமான நீர், அல்லது தேங்காய் அல்லது அரிசி கஞ்சி போன்ற கூடுதல் பாதுகாப்பான பானங்கள் கொடுப்பதன் மூலம் வயிற்றுப்போக்கு தடுக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவது நல்லது.

  juce

  வயிற்றுப்போக்கு கொண்ட குழந்தைகளுக்கு உலர்ந்த வாய் மற்றும் நாக்கு, குழி விழுந்த கண்கள், கண்ணீர், தளர்வான தோல் மற்றும் கை, கால்கள் குளிர்ந்த நிலையில் இருக்கலாம். குழந்தைகளுக்கு உச்சந்தலையில் சிறிய குழி போன்று உருவாகலாம்.

  குழந்தைகள் ஒரு நாளில் ஐந்து முறைக்கு மேல் தண்னீர் போன்று மலம் கழித்தாலோ அல்லது இரத்தம் தோய்ந்த மலம் கழித்தாலோ அல்லது வாந்தி எடுத்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகவும்.

  ORS என்பது உடல் வறட்சி நீக்கல் முறையாகும். ORS எடுத்துக்கொள்ள மருத்துவமனை அல்லது மருந்து கடைகளை நாடவும். ORS- ஐ சுத்தமான தண்ணீரில் கலந்து குடிப்பது வயிற்றுப்போக்குக்கு சிறந்தது.

  பெரும்பாலான வயிற்றுப்போக்கு மருந்துகள் வேலை செய்யாது ஆனால் 6 மாதம் (வயது) மேலான குழந்தைகளுக்கு துத்தநாகம் மாத்திரைகள் விரைவில் குணப்படுத்தும். ORS- ஐ எடுத்துக்கொள்ளுவது நல்லது.

  honey 2

  வயிற்றுப்போக்கு கொண்ட குழந்தைகள் தங்கள் உடல்களை வலுவாக்கிக்கொள்வதற்கு முடிந்தளவு சுவையான, கரைத்த உணவை சாப்பிட வேண்டும்.

  குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலமாகவும், ஆரோக்கியமான உணவு முறை மூலமாகவும், தடுப்பூசிக்கள் போடுவது மூலமாகவும் வயிற்றுப்போக்கு வராமல் தடுக்கலாம்.

  கோடை காலத்தில் உண்டாகிற கடுமையான வெப்பத்தின் காரணமாகச் சரும நோய்கள் மட்டுமன்றி வயிற்றிலும் பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு. அவற்றில் ‘கோடை கால வயிற்றுப்போக்கு’ (Summer Diarrhoea) முக்கியமானது.

  குடலில் செரிமானத்துக்கு உதவுகிற என்சைம்கள் வெப்பக் காலத்தில் குறைவாகச் சுரப்பதால், இந்த வகை வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. அடுத்து, வெப்பம் நிறைந்த பருவநிலையில் சில பாக்டீரியாக் கிருமிகள் வளர்ச்சி அடைவது அதிகரிக்கிறது. நாம் பயன் படுத்தும் குடிநீர், உணவில் இவை கலந்து வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகின்றன.

  surakai

  விப்ரியோ காலரா, எஸ்செரிச்சியா கோலி, சிகெல்லா, சால்மோனெல்லா, ரோட்டா வைரஸ், ஆஸ்டியோ வைரஸ், அடினோ வைரஸ், நார்வா வைரஸ், எண்டிரோ வைரஸ், அமீபா, ஜியார்டியா, குடல் புழுக்கள் ஆகியவை வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் முக்கியக் கிருமிகள்.

  இந்தக் கிருமிகள் எல்லாமே வயிற்றுப்போக்கு ஏற்பட்ட வரின் மலத்தில் வசிக்கும். மாசடைந்த உணவு, குடிநீர் மூலம் இவை நேரடியாக அடுத்தவரை வந்தடையும்போது, அவருக்கும் நோய் உண்டாகிறது. இந்தக் கிருமிகள் ஒட்டிக்கொண்டிருக்கும் கழிப்பறை இருக்கைகள், கதவுப்பிடிகள், குழாய்கள் போன்றவற்றை அடுத்தவர்கள் தொடு வதன் வழியாகவும் நோய் உண்டாகலாம்.

  ஈக்களும் எறும்புகளும் இந்தக் கிருமிகளை மனிதருக்குப் பரப்புகின்றன. இவை மனிதக் கழிவின்மீது அமரும் போது அவற்றின் மீது கிருமிகள் ஒட்டிக்கொள்ள, அதன் பின்னர் இவை உணவுப் பொருட்களை மொய்ப்பதன் மூலம் கிருமிகள் உணவுக்குப் பரவி, அதை உட்கொள்ளும் மனிதருக்குப் பரவுகின்றன.

  இவை தவிர நச்சுணவு, அஜீரணம், ஊட்டச்சத்துக் குறைவு, நாட்பட்ட பயணம், பசும்பால் புரதம் ஒவ்வாமை, லாக்டோஸ் ஒவ்வாமை, கல்லீரல் மற்றும் கணையப் பாதிப்பு, எய்ட்ஸ் நோய் போன்றவற்றால் சாதாரணமாகவே வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

  உருவாகும் முறை

  கிருமிகள் நேரடியாகவோ, சில நச்சுப் பொருட்களைச் சுரந்தோ சிறுகுடலையும் பெருங்குடலையும் தாக்கும்போது, அதற்கு எதிர்விளை வாகக் குடலில் அதிக அளவில் திரவம் சுரக்கிறது. இது வயிற்றுப்போக்காகக் குடலிலிருந்து வெளியேறுகிறது. அப்போது குடலில் உள்ள தண்ணீர்ச் சத்தும் சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுச் சத்துகளும் வெளியேறி விடுகின்றன. இதன் விளைவாக உடலில் கடுமையான நீரிழப்பு (Dehydration) ஏற்படுகிறது.

  மேலும் கிருமிகளால் பாதிக்கப்பட்ட குடல், உணவுச் சத்துகளைச் சரியாக உறிஞ்சத் தவறுகிறது. இதனால் நோயாளிக்கு ஊட்டச்சத்து குறைந்து, நோய் எதிர்ப்பாற்றல் குறைகிறது. இக்காரணத்தால் வயிற்றுப்போக்கு மேலும் தீவிரமடைகிறது.

  அறிகுறிகள்

  இந்த நோயின் ஆரம்பத்தில் தண்ணீர்போல மலம் போகும். அதிகத் தாகம் எடுக்கும், நாக்கு வறண்டுவிடும், வாய் உலர்ந்துவிடும், தோல் உலரும், கண்களுக்குக் கீழே குழி விழும். இவற்றின் தொடர்ச்சியாகச் சிறுநீரின் அளவு குறையும். நாடித்துடிப்பு பலவீனமடையும், ரத்த அழுத்தம் குறையும், கிறுகிறுப்பு, மயக்கம் வரும். கை, கால்கள் சில்லிட்டுவிடும். சிலருக்குக் காய்ச்சல், உடல்வலி, வாந்தி, வயிற்றுவலி போன்ற துணை அறிகுறிகளும் சேர்ந்துகொள்ளும்.

  apple vinigar

  குழந்தைகளுக்கே அதிகப் பாதிப்பு!

  இந்த நோய், பிறந்த குழந்தைகள் முதல் முதியோர்வரை எவரையும் பாதிக்கலாம் என்றாலும், நடைமுறையில் ஆறு மாதத்திலிருந்து இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளே அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். அசுத்தமான இடங்களிலும் மாசு நிறைந்த சூழலிலும் வளரும் குழந்தைகளையும், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள குழந்தைகளையும் இது எளிதாகத் தாக்கிவிடும்.

  குழந்தைகளுக்குப் பாட்டிலில் பால் கொடுக்கும்போது, அந்தப் பாட்டிலைச் சரியாகக் கழுவிக் கிருமி நீக்கம் செய்யாவிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படுவது வழக்கம். பிளாஸ்டிக் டப்பாக்களில் பால் தருவது, மலம் கழித்துவிட்டுக் கையைச் சுத்தமாகக் கழுவாமல் குழந்தைகளைக் கொஞ்சுவது போன்றவற்றாலும் இது ஏற்படுவதுண்டு. சில குழந்தைகள் எந்த நேரமும் வாயில் ரப்பரைத் திணித்துக்கொள்வார்கள். சுத்தம் பேணப்படாத அந்த ரப்பர் மூலமும் கிருமிகள் பரவி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது.

  பெரியவர்களோடு ஒப்பிடும்போது, குழந்தைகளுக்கு வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவு கொஞ்சம் குறைவு. பெரியவர்களின் வயிற்றுக்கு வந்துசேரும் பெரும்பாலான கிருமிகளை அமிலமே அழித்துவிடும். குழந்தைகளுக்கு இவ்வாறு கிருமிகள் அழிக்கப்படுவது குறைவு. வயிற்றுப்போக்கால் குழந்தைகள் அதிகம் அவதிப்படுவதற்கு, இதுவும் ஒரு முக்கியக் காரணம் என்று சொல்லலாம்.

  அடுத்து, குழந்தைகளுக்குக் குடலின் நீளம் மற்றும் பரப்பளவு உடலின் பரப்பளவோடு ஒப்பிடும்போது அதிகம். ஆகையால், குழந்தைகளின் குடலிலிருந்து வெளியேறும் வயிற்றுப்போக்குத் திரவத்தின் அளவும் அதிகம். எடுத்துக்காட்டாக, 6 கிலோ எடையுள்ள ஒரு குழந்தையின் உடலிலிருந்து வெளியேறும் ஒரு லிட்டர் திரவத்தால் உண்டாகிற பாதிப்பு மிக அதிகம். அதேவேளையில், 60 கிலோ எடையுள்ள ஒருவருக்கு ஒரு லிட்டர் திரவ இழப்பால் ஏற்படும் பாதிப்பு குறைவு. இதனால்தான் இந்த நோய்க்குக் குழந்தைகள் பெரிதும் உயிரிழக்கின்றனர்.

  சிகிச்சை என்ன?

  நோயாளியின் மலத்தைப் பரிசோதித்தால் நோய்க் கிருமியின் வகை தெரியும். அதற்கேற்பச் சிகிச்சை தரப்படும். வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு முதலில் நீரிழப்பைச் சரி செய்ய வேண்டும். இதற்கு அதிக அளவில் சுத்தமான நீரை நோயாளி பருக வேண்டும். அல்லது உப்பு, சர்க்கரைக் கரைசலைப் பருக வேண்டும்.

  இக்கரைசலை வீட்டிலேயே தயாரித்துக்கொள்ள முடியும். ஐந்து நிமிடங்களுக்குக் கொதிக்க வைத்து, ஆற வைத்த ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம் சர்க்கரை, 5 கிராம் உப்பு கலந்து, ஒரு மணி நேரத்துக்கு 500 மி.லி. அளவில் குடிக்கத் தரலாம். இதுவே கடைகளில் எலெக்ட்ரால், மினரோலைட், காஸ்லைட், புரோலைட் என்ற வர்த்தகப் பெயர்களில் கிடைக்கிறது. இவற்றில் ஒன்றையும் பயன்படுத்தலாம்.

  இவை பலன் தராத நிலையில் நோயாளியை மருத்துவமனையில் சேர்த்து, குளுகோஸ் மற்றும் ‘சலைன்’ செலுத்த வேண்டும். அத்துடன் தகுந்த ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் மற்றும் ஓரணுயிரி எதிர் மருந்துகள் (Antiprotozoans) செலுத்தப்பட வேண்டும்.

  ரோட்டா வைரஸ் போன்ற வைரஸ் காரணமாக ஏற்படும் வயிற்றுப்போக்குக்குத் தனிப்பட்ட மருந்து எதுவுமில்லை. இந்த வகை வயிற்றுப்போக்கு சில நாட்களில் தானாகவே சரியாகிவிடும். அதுவரை நோயாளியின் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் தடுப்பதும், நீரிழப்பு ஏற்பட்டால் அதை ஈடுகட்டச் சலைன் செலுத்தி சிகிச்சையைத் தொடர வேண்டியதும் முக்கியம்.

  papaya

  தாய்ப்பால் முக்கியம்!

  சிறு குழந்தைக்கு வயிற்றுப்போக்கு இருந்தால், தாய்ப்பால் தருவதை நிறுத்த வேண்டிய அவசியமில்லை. தேவைப் பட்டால் மருத்துவர் யோசனைப்படி தாய்ப்பால் தருகிற இடைவெளியை அதிகப்படுத்திக்கொள்ளலாம். அதேநேரம் பாட்டில் பாலைக் கண்டிப்பாக நிறுத்திவிட வேண்டும்.

  மருத்துவர் யோசனைப்படி உப்புச் சர்க்கரைக் கரைசலை 10 நிமிடத்துக்கு ஒருமுறை ஒரு தேக்கரண்டி அளவுக்குக் குழந்தையின் நாக்கின் அடியில் விடலாம். குழந்தைக்கு 8 மணி நேரத்துக்குள் வயிற்றுப்போக்கு நிற்காவிட்டால் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை தர வேண்டும்.

  motherfeed

  உணவு முறை

  வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட வருக்கு வாந்தி அவ்வளவாக இல்லை எனும் நிலைமையில், ஊட்டச்சத்தும் நீர்ச்சத்தும் குறைந்துவிடாமல் இருக்க அரிசிக் கஞ்சி, ஜவ்வரிசிக் கஞ்சி, ஆரூட் கஞ்சி, பொட்டுக்கடலைக் கஞ்சி, இளநீர், எலுமிச்சைச் சாறு, மோர் போன்றவற்றில் ஒன்றை அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாகத் தரலாம்.

  அதிகம் காரம் உள்ள உணவு வகைகளையும் கொழுப்பு உணவையும் குறைந்தது ஒரு வாரத்துக்குத் தவிர்க்க வேண்டும். துத்தநாகம் (Zinc) கலந்த சொட்டு மருந்தை இரண்டு வாரங்களுக்குத் தரலாம். லாக்டோஸ் ஒவ்வாமை உள்ள குழந்தைக்குச் சோயா கலந்த பால் பவுடரைத் தரலாம்.

  தடுப்பது எப்படி?

  நாம் குடிக்கப் பயன்படுத்தும் தண்ணீரைக் குறைந்தது 5 நிமிடங்களுக்குக் கொதிக்க வைத்து, ஆற வைத்துக் குடிக்க வேண்டும்.

  வீட்டிலிருக்கும் குடிதண்ணீர்த் தொட்டியில் சரியான அளவில் குளோரின் கலந்து பயன்படுத்தினால் நோய்க் கிருமிகள் சேராது.

  ஒவ்வொரு வீட்டிலும் சமையலறை சுத்தமாகப் பராமரிக்கப்பட வேண்டும். சுத்தமான பாத்திரங்களில் சுகாதாரமான முறையில் உணவைச் சமைக்க வேண்டும்.

  நன்கு வேகவைத்த உணவை உண்ண வேண்டும்.

  கோடையில் சமைத்த உணவு வகைகள் சீக்கிரம் கெட்டுவிடும் என்பதால், சுடச்சுடச் சாப்பிட்டுவிட வேண்டும். நாள் கணக்கில் சேமித்துவைத்துச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

  உணவு வகைகளை ஈக்கள் மொய்க்காமலும் எறும்புகள் தொற்றாமலும், பல்லி / பூச்சிகள் கலந்துவிடாமலும் மூடி பாதுகாக்க வேண்டும்.

  அசுத்தமான வெளியிடங்களிலும், சாலையோரக் கடைகளிலும் திறந்தவெளி உணவகங்களிலும் அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

  ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை இருக்க வேண்டியது மிக அவசியம். அதை சுத்தமாகப் பேண வேண்டியது, அதைவிட முக்கியம். மேலும் ஒவ்வொரு முறை மலம் கழித்ததும் கைகளைச் சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும்.

  வீட்டில் ஒருவருக்கு வயிற்றுப்போக்கு தீவிரமாக இருந்தால், அவரைத் தனிமைப் படுத்த வேண்டும். அல்லது மருத்துவமனையில் சேர்த்துச் சிகிச்சை அளிக்க வேண்டும்.

  வீட்டில் பாதிக்கப்பட்ட நோயாளியின் மலம், வாந்தி, உடைகள், அவர் பயன்படுத்திய பாத்திரங்கள், படுக்கை விரிப்புகள் போன்ற அனைத்தையும் சலவைத்தூள் போட்டுத் தொற்றை அகற்றுதல் மிக முக்கியமான தடுப்பு முறை.

  வீட்டிலும், வீட்டைச் சுற்றிலும், தெருக்களிலும் தண்ணீர் / சாக்கடை தேங்க அனுமதிக்கக் கூடாது. எந்த வகையிலும் கழிவு சேரக்கூடாது. இவ்வாறு சுகாதாரத்தைக் கடைப்பிடித்துத் தெருக்களைச் சுத்த மாக வைத்துக்கொண்டால், ஈக்கள் மொய்ப்பதைத் தடுத்துவிடலாம். இதன் மூலம் வயிற்றுப்போக்கு வருவதையும் தடுக்கலாம்.

  சிலருக்கு தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு பிரச்சனைகள் ஏற்படும். இதனை அலட்சியப்படுத்தினால் உயிருக்கே ஆபத்தாகி விடும்.

  எனவே வயிற்று போக்கு பிரச்சனையை குணப்படுத்த இயற்கையில் உள்ள அற்புத வழிகள்

  பெரியவர்களுக்கு
  பெரியவர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், ஓமம், இரட்டி மதுரம், கல்லுப்பு ஆகிய மூன்றையும் வெண்ணெய்யுடன் சேர்த்து, 2 கிராம் என்ற அளவில் 3 முறை தினமும் சாப்பிட வேண்டும்.
  கடுக்காய்ப் பொடியை சுடுநீர் அல்லது மோரில் 20-30 கிராம் வரை 4 மணிக்கு ஒருமுறை கொடுக்க வேண்டும்.
  சுக்குப் பொடி கலந்த கஞ்சி குடிக்கலாம் அல்லது வெறும் சுடுநீரை மட்டுமே குடிக்கலாம்.
  மருதாணி விதைகளை பொடித்து அதை நெய்யுடன் கலந்து பாக்களவு தினமும் 2-3 முறை சாப்பிட வேண்டும்.
  மல்லி விதை போட்டுக் கொதிக்க வைத்த தண்ணீர், ஓம தண்ணீர் ஆகிய இரண்டையும் கலந்து அடிக்கடி குடிக்க வேண்டும்.
  குறிப்பு
  வயிற்றுப்போக்கு இருக்கும் போது உப்பு, மிளகு, வெல்லம், கோதுமை உணவு, பூண்டு, இளநீர், கரும்புச்சாறு ஆகியவற்றை சாப்பிடக் கூடாது.

  சீரகத் தண்ணீர் : சீரகத் தண்ணீர் வயிற்றுக்கோளாறுகளுக்கு நல்ல மருந்து. எனவே சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பின் அன்றைய நாள் முழுவது அந்த நீரை குடித்து வாருங்கள்.

  ஆப்பிள் சிடர் வினிகர் : ஆப்பிள் சிடர் வினிகரை தண்ணீரில் கலந்து அன்றைய நாளில் 3 முறை குடியுங்கள். வயிற்றுப்போக்கு குறையும்.

  சாதம் : வெள்ளை சாதத்தை மட்டும் அவ்வபோது கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு படிப்படியாகக் குறையும்.. கட்டுப்படாத வயிற்றுப்போக்கு இருப்பின் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.

  எலுமிச்சைச் சாறு
  வயிற்றுப்போக்கு ஏற்படும் போது, எலுமிச்சைச் சாற்றில் தண்ணீர், உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து குடிப்பதால் வயிற்றுப்போக்கு மற்றும் உடலில் வறட்சி ஏற்படாமல் தடுக்கிறது.

  மாதுளை
  தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு பிரச்சனை ஏற்பட்டால், 3 கப் மாதுளைப் பழம் ஜூஸ் குடிக்கலாம். அல்லது மாதுளம் பழத்தை பழமாக கூட சாப்பிடலாம்.

  தேன்
  தேன் ஒரு சிறந்த மருத்துவ குணம் நிறைந்தது. எனவே தேன் மற்றும் ஏலக்காய் பொடியை வெந்நீரில் கலந்து நாள் ஒன்றுக்கு இரண்டு முறை குடித்தால், வயிற்றுப்போக்கு சரியாகிவிடும்.

  இஞ்சி
  இஞ்சியில் உள்ள ஆன்டிபாக்டீரியல் குணம் வயிற்றுப்போக்கை நிறுத்தும் தன்மைக் கொண்டது. எனவே 1/2 டீஸ்பூன் சுக்குப் பொடியை மோரில் கலந்து நாள் ஒன்றுக்கு 3 முறை குடித்தால் வயிற்றுப்போக்கு குணமாகும்.

  பப்பாளி காய்
  பப்பாளி காய் வயிற்றுப்போக்கிற்கு நல்ல மருந்தாகும். எனவே பப்பாளி காயைத் துருவி மூன்று கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, அந்த நீரை வடிகட்டி சிறிது நேரம் கழித்து குடித்தால், நல்ல பலன் கிடைக்கும்.

  curd

  மோர்
  மோரில் உள்ள அமிலத்தன்மை செரிமான இயக்கத்திற்கு உதவுகிறது. எனவே ஒரு டம்ளர் மோரில் உப்பு, சிறிது ஜீரகப்பொடி, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் மற்றும் மிளகுத்தூள் ஆகியவை சேர்த்து, குடித்தால் வயிற்றுப்போக்கு நின்று விடும்.

  சுரைக்காய் ஜூஸ்
  சுரைக்காயில் உள்ள நீர்ச்சத்து நமது உடலை வறட்சி அடையாமல் தடுக்கிறது. எனவே சுரைக்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அதை அரைத்து வடிகட்டி சாறு எடுத்து குடிக்க வேண்டும்.

  அமீபாக்கள் என்னும் ஒருவகைக் கிருமிகளாலும் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. இவ்வகை வயிற்றுப்போக்கைச் சீதபேதி என்பர்.

  மலத்தின் அளவு குறைச்சலாகப்போதல், மலத்துடன் ரத்தமும் சீழமும் கலந்து வருதல், ஆசனவாயில் வலி இருத்தல், மீண்டும் மீண்டும் மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வோடு இருத்தல். காய்ச்சலும் உடல் வலியும் இருத்தல் போன்ற அடையாளங்கள் ஒரு சேர இருந்தால் அது சீதபேதி என்று நிச்சயமாகச் சொல்லிவிடலாம். சீதபேதியை ஏற்படுத்தும் ‘அமீபாக்கள்’ என்னும் கிருமிகளும் ‘சைஜிலா’ என்னும் கிருமிகளும் ஈக்கள் மூலமாகவும் சுகாதாரமற்ற குடிநீரின் மூலமாகவும் உணவோடு கலந்து நம் வயிற்றுக்குள் போய்விட்டால் சீதபேதி நிச்சயம் ஏற்படும்.

  சில சமயங்களில் பெருங்குடலில் வீக்கம் ஏற்படுவதாலும் சீதபேதி வரும். உடனடியாக காரணத்தை அறிந்து மருத்துவம் செய்து கொள்வது நல்லது.

  ஒரு அவுன்ஸ் விநீகரில் 4 கிராம் அளவு உப்பைக் கரைத்து கொடுக்க வயிற்றுப் கடுப்பு, வயிற்றோட்டம் ஆகியன குணமாகும்.
  வெந்நீரில் விநீகர் கலந்து அத்துடன் சிறிது உப்பு, மிளகுத் தூளும் கலந்து சாப்பிட விஷபேதி நீங்கிவிடும்.
  மாதுளங் கொழுந்தைப் போக்கும் நீரில் போட்டுத் தீ நீர் வைத்துக் குடித்தால் சீதக்கடுப்பு, சீதபேதி ஆகியவை சரியாகிவிடும்.
  காளானை உலரவைத்து பொடியாக்கி காலை, மாலை இருவேளையும் ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு குணமாகும்.
  மந்தாரைப் பூவை தீ நிரில் இட்டு குடிப்பதால் ரத்தபேதியும் சீதபேதியும் விரைவில் குணமாகும்.
  மூன்று கிராம் வேலம் பிசினை தண்ணீரில் கலந்து குடித்தால் பேதி, சீதபேதி ஆகியவை குணமாகும்.
  உத்தாமணி இலைச்சாற்றுடன் தேனையும் தும்பைச் சாற்றையும் கலந்து கொடுப்பதால் குழந்தைகளின் வாந்தி, பேதி நீங்கிவிடும்.

  venthayam

  வெந்தயத்தை இரவில் ஊரவைத்து மறுநாள் காலையில் அரைத்து தயிரோடு கலந்து சாப்பிட்டால் சீத பேதியை எளிதில் குணமாக்கலாம்.
  மாம்பூவை உலர்த்தி தீ நீர் இட்டு குடித்தால் சீதபேதி வயிற்றுப்போக்கு குணமாகும்.
  கோவை இலையை சாறுபிழிந்து ஒரு தேக்கரண்டி வீதம் காலையிலும் மாலையிலும் குடித்து வந்தால் சீதபேதி குணமாகும்.
  முற்றிய வில்வக்காயை இடித்து அரைக் கொட்டைப் பாக்கு அளவு சாப்பிட்டால் பேதி, சீதபேதி குணமாகும்.
  கறிவேப்பிலையை எடுத்து சுத்தம் செய்து கொண்டு அம்மியில் வைத்து அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து இரண்டு வேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.
  குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் சிறிது பெருங்காயத்தை மோரில் கலந்து கொடுத்தால் நீங்கிவிடும்.

  தேனுடன் இஞ்சியை வதக்கி, நீர் விட்டுகொதிக்க வைத்து, அந்தநீரை காலை, மாலை என்று இருவேளை குடித்துவர வயிற்றுப்போக்கு தீரும்.

  கறிவேப்பிலையுடன் ஒரு தேக்கரண்டியளவுசீரகத்தையும் சேர்த்து அம்மியில் வைத்துமை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப்போக்கு நிற்கும்

  சோற்றுக் கற்றாழையின் இளமடலை தோல் சீவி சோற்றை சுத்தம் செய்து, அதனுடன் உடன்சீரகம், கற்கண்டு, சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட வயிற்றுப்போக்கு குணமாகும்.

  100 மில்லி பாலுடன் இரண்டுமாதுளம் பிஞ்சை அரைத்து, பாலுடன் கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு குணமாகும்.
  இளம் பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு சரியாகும்.

  வெற்றிலையுடன் சிறிது ஓமத்தைச் சேர்த்து அரைத்து அதனுடன் ஒரு கரண்டி தேன் கலந்து சாப்பிட வயிற்றுப்போக்கு உடனே குணமாகும்.

  மாதுளம் பழத்தை வேக வைத்து சாறு எடுத்து தேனுடன் கலந்து குடிக்க அனைத்து வகையான வயிற்றுப் பிரச்சனைகளும் தீரும்.

  சிறிதளவு கசகசாவை வாயில் போட்டு நன்றாக மென்று சிறிது தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு குறையும்.

  பாலுடன் மாங்கொட்டையின் பருப்பை பொடி செய்து கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு குணமாகும்.

  சீரகத்தை எலுமிச்சை பழசாற்றில் ஊற வைத்து காயவைத்து, மென்று சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு குணமாகும்.

  மா மரத்தின் துளிர் இலைகளைப் பொடியாக்கி, தேனில் குழைத்து சாப்பிட, வயிற்றுப்போக்கு நிற்கும்.

  பப்பாளிப்பழம் சாப்பிட்டால் தொடர் வயிற்றுப்போக்கு குறையும்.

  koya

  குழந்தைகளுக்கு
  குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், மாமரத்தின் உள்பட்டையை அரைத்து, குழந்தையின் வயிற்றில் தடவலாம்.

  வாந்தியுடன் வயிற்றுப்போக்கு இருந்தால் 1½ நெல்மணி அளவு பொடித்த ஜாதிக்காய்ப் பொடியைக் கொடுக்கலாம்.
  கோரைக் கிழங்கினைத் கொதி நீரிலிட்டு வேகவைத்து, 3 நெல்மணி அளவு, பாலில் கலந்து தினமும் இருமுறை கொடுக்கலாம்.

  குணப்படுத்தும் முறைகள்
  வயிற்றுபோக்கை உணர்ந்ததும் சுத்தமான நீரை காய்ச்சி வடிகட்டி ஒரு டம்ளர் எடுத்து அதில் கால் டீஸ்பூன் உப்பு மற்றும் அரை டம்ளர் சர்க்கரை சேர்த்து குடிக்கலாம். தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை குடித்து வாருங்கள்.

  வெள்ளை சர்க்கரை சேர்க்காத பழச்சாறுகள் எடுத்துகொள்ளலாம். எலக்ட்ரோலைட், உப்பு சர்க்கரை கலந்த எலுமிச்சைச்சாறு, மோர், மருந்துவடிவில் கிடைக்கும் ஓஆர்எஸ் பாக்கெட்டை வாங்கி கொதிக்க வைத்து நீரில் கலந்து குடித்து வரலாம்.

  இளநீர் குடிக்கலாம். வெளியேறும் நீரின் அளவுக்கேற்ப அதை ஈடு செய்யும் வகையில் தண்ணீர் ஆகாரம் எடுத்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். சற்று வயிற்றுப்போக்கு மட்டுப்பட்டவுடன் புழுங்கலரிசியை வறுத்து மிக்ஸியில் பொடித்து கஞ்சி காய்ச்சி குடிக்கலாம்.

  ஒரு டம்ளர் கஞ்சிக்கு ஒரு டீஸ்பூன் வீதம் உப்பு கலந்து கஞ்சி கெட்டிப்பதமாக இல்லாமல் தண்ணீர் போல் திரவமாக இருக்கும்படி காய்ச்சி குடிக்கலாம். இக்காலத்தில் கடினமான உணவை தவிர்த்து மென்மையான உணவுகளை எடுத்துகொள்வது நல்லது.

  குளிக்க பயன்படுத்தும் நீரும் சுத்தமானதாக இருக்க வேண்டும். சமைக்க, சாப்பிட பயன்படுத்தும் பாத்திரங்கள் சுத்தமான நீரில் நன்றாக கழுவிய பிறகு பயன்படுத்த வேண்டும். தண்ணீரை அப்படியே குடிக்காமல் நன்றாக காய்ச்சி குடிக்க வேண்டும்

  கெமோமில் தேயிலை: தேவையான பொருட்கள்
  • 1-2 தேக்கரண்டி கெமோமில் தேயிலை
  • 1 கப் தண்ணீர்
  • தேன் 1.
  ஒரு கப் தண்ணீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி கெமோமில் தேயிலையை கலந்து கொதிக்க விடவும். 5 நிமிடங்கள் மற்றும் சிம்மில் வைத்து வடிகட்டவும். சூடு தணிந்த பின் சிறிது தேனைச் சேர்த்துக்கொள்ளவும். உடனடியாக உட்கொள்ளுங்கள். ஒரு சில நாட்களுக்கு தினமும் மூன்று முறை கெமோமில் தேயிலை தேநீர் குடியுங்கள். கெமோமில் தேயிலை சக்தி வாய்ந்த ஆன்டி ஸ்பாஸ்மோடிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை வெளிப்படுத்துகிறது, இது வயிற்றுப் போக்கை நிவர்த்தி செய்ய உதவுகிறது. குடல் தசைகளை தளர்த்தி மற்றும் அதன் எரிச்சலை குறைத்து சிறந்த நிவாரணமளிக்கிறது.

  புளுபெர்ரி டீ

  தேவையான பொருட்கள்
  • 1-2 தேக்கரண்டி புளுபெர்ரி வேர்கள்
  • 1 கப் சூடான நீர்
  • தேன்
  ஒரு கப் சூடான நீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி புளுபெர்ரி ரூட்டைச் சேர்க்கவும். அதை 5 முதல் 10 நிமிடங்களுக்கு கொதிக்கவைத்து பின் வடிகட்டவும். கொஞ்சம் தேன் சேர்த்து, சூடாக இருக்கும் போதே அதைச் சாப்பிடுங்கள். இரண்டு நாட்களுக்கு தினமும் மூன்று முறை இதைச் செய்யுங்கள்.

  ப்ளூபெர்ரிகள் உங்கள் வயிற்றுப்போக்குக்குக் காரணமான நோய்க் கிருமிகளுடன் அதிலுள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பி பண்புகளால் போராடுகின்றன. உங்கள் வயிற்றை தளர்த்த உதவும் மற்றும் வயிற்றுப் போக்கின் அறிகுறிகளை நிவர்த்தி செய்ய உதவும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றப் பண்புகளையும் கொண்டுள்ளன.

  வெந்தயம்

  தேவையான பொருட்கள்:

  • 1-2 டீஸ்பூன் வெந்தய விதைகள்
  • ஒரு குவளைத் தண்ணீர்
  1 அல்லது 2 தேக்கரண்டி வெந்தய விதைகளை நீரில் 15 நிமிடம் ஊறவைக்கவும். ஊறிய வெந்தயத்தை அரைத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் கலக்கவும். இந்தக் கலவையை உடனடியாக உட்கொள்ளுங்கள். மூன்று நாட்களுக்கு தினமும் 2 முதல் 3 முறை இதை செய்ய வேண்டும். வெந்தய விதைகள் mucilage நிறைந்தவை, இது மல அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது. வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த உதவுகிறது இவை செரிமானத்திற்கு உதவுதல் மற்றும் வயிற்றில் தொற்று விளைவிக்கும் நோய்க் கிருமிகளை எதிர்த்து போராட உதவுதல் போன்ற சிறந்த குணங்களைக் கொண்டிருக்கின்றன.
  ஆப்பிள் சிடர் வினிகர்

  தேவையான பொருட்கள்:

  • 2 தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகர்
  • ஒரு குவளை சூடான நீர்
  • தேன்
  இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் சாரை ஒரு குவளை வெதுவெதுப்பான தண்ணீரில் சேர்த்து நன்கு கலக்கவும். சிறிதளவு தேனை சுவைக்கு சேர்த்து உடனடியாக எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டு நாட்களுக்கு தினமும் இரண்டு முறை இந்த தீர்வை எடுத்துக்கொள்ளுங்கள். ஆப்பிள் சைடர் வினிகரிலுள்ள நோய்த்தொற்று எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உங்கள் செரிமான அமைப்பைப் பாதுகாக்க மற்றும் குடல் அழற்சியைப் போக்க உதவுகின்றன. இதிலுள்ள பெக்டின் செரிமானத்தை அதிகரிக்க மற்றும் மலச்சிக்கலை நீக்க உதவுகிறது.

  இஞ்சி தேவையான பொருட்கள்
  • புதிதாக பிரித்தெடுக்கப்பட்ட 1-2 தேக்கரண்டி இஞ்சி சாறு.
  • தேன்
  புதிதாக பிரித்தெடுக்கப்பட்ட இரண்டு தேக்கரண்டி இஞ்சி சாற்றை எடுத்து அதில் தேன் சேர்க்கவும். இந்த கலவையை நேரடியாக உட்கொள்ளவும். சுவை உங்களுக்கு மிகவும் வலுவானதாக இருந்தால், இஞ்சி சாறை சிறிது வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும். உங்கள் நிலையில் முன்னேற்றம் காணும் வரை தினமும் குறைந்தபட்சம் 2 முதல் 3 முறை தினமும் எடுத்துக்கொள்ளுங்கள். இஞ்சி செரிமானத்திற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், உங்கள் குடலிற்கு இதமளித்து உங்கள் உடம்பின் நோய்த்தொற்றை தன்னுலுள்ள பாக்டீரியா மற்றும் அழற்சி எதிர்ப்பு குணங்களைக் கொண்டு எதிர்த்து நோயாளிகளுக்குப் பயன் தருகிறது.

  puthina

  புதினா மற்றும் தேன் தேவையான பொருட்கள்:

  • புதிதாக பிரித்தெடுக்கப்பட்ட புதினா சாறு 1 டீஸ்பூன்
  • புதிதாக பிரித்தெடுக்கப்பட்ட எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன்
  • 1 டீஸ்பூன் தேன்
  • 1 கப் சூடான நீர்

  ஒரு டீஸ்பூன் புதிதாக பிரித்தெடுக்கப்பட்ட புதினா சாறு , எலுமிச்சை சாறு, மற்றும் தேன் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கொள்ளவும். இந்த கலவையை ஒரு கப் சூடான நீரில் சேர்த்து நன்றாகக் கலக்கவும். உடனடியாக உட்கொள்ளவும். தினமும் இரண்டு முறை செய்யுங்கள். வயிற்றுப் போக்கு சிகிச்சை என்று வரும் போது புதினா மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அது எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலக்கும் போது, ​மிகவும் விதிவிலக்கான முடிவுகளைத் தரும். புதினா உங்கள் குடலுக்கு இதமளிக்கிறது மற்றும் உங்கள் வயிற்றை அமைதியாக்குகிறது. அஜீரணத்தின் அறிகுறிகளை நீக்குகிறது. தேன் மற்றும் எலுமிச்சை சாறு குடல் எரிச்சலைக் குறைப்பதில் மற்றும் நோய்க்கிருமிகளை எதிர்க்க உதவுகின்றன.
  இலவங்கப்பட்டை மற்றும் தேன்
  தேவையான பொருட்கள்
  1/2 தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூள்
  1 தேக்கரண்டி தேன்
  ஒரு க்ளாஸ் சூடான நீர்
  ஒரு தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி தேனை வெதுவெதுப்பான தண்ணீரில் கலக்கவும். சூடாக இருக்கும் போதே இதை உட்கொள்ளுங்கள். ஒரு சில நாட்களுக்கு தினமும் இதை 2 முதல் 3 முறை செய்யுங்கள். இலவங்கப்பட்டை அழற்சியெதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்றதடுப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது .
  இது கெட்டுப்போன வயிற்றுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. தேன் இணையும்போது, அது வயிற்றுப்போக்கினால் உருவாகும் வலியின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.

  ஓட் பிரான்
  தேவையான பொருட்கள் 1.1 கிண்ணம் சமைத்த ஓட் பிரான் சமைத்த 1 கிண்ணம் ஓட் பிரானைச் சாப்பிடவும். தினமும் இரண்டு முறை இதைச் சாப்பிட வேண்டும். ஓட் பிரான் நார்ச்சத்து நிறைந்த ஆதாரமாக உள்ளது மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், மற்றும் மெக்னீசியம் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்களும் உள்ளன. இது வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்படுவதால் நமது உடல் இழக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் மின்னாற்றலைகளை மீட்டெடுக்க உதவுகிறது.

  முருங்கை இலைகள்

  தேவையான பொருட்கள்: 1 டீஸ்பூன் முருங்கை சாறு தேன் முருங்கை இலைகளில் இருந்து ஒரு டீஸ்பூன் புதிய சாறு பிரித்தெடுக்கவும். அதில் சிறிது தேன் சேர்த்து உடனடியாக சாப்பிடுங்கள். உலர்ந்த முருங்கை இலைகளை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இரண்டு நாட்களுக்கு தினமும் ஒரு முறை இதை செய்ய வேண்டும். பல காலங்களாக வயிற்றுப் போக்கிற்கு சிகிச்சையளிக்க டிரம்ஸ்டிக் இலைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை நம்பமுடியாத ஊட்டச்சத்து மட்டுமல்லாது, வயிற்றுப் போக்கை எதிர்த்துப் போராடும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டிருக்கின்றன.

  எலுமிச்சை & ப்ளாக் டீ தேவையான பொருட்கள்:
  தேநீர் பவுடர் 1 டீஸ்பூன்
  எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன்
  1 கப் தண்ணீர்
  தேன்
  டீஸ்பூன் தேநீர் பொடியை ஒரு கப் தண்ணீரில் போட்டு அதைக் கொதிக்க விடவும். 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டவும். தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கும் முன் வடிகட்டிய தேநீர் சிறிது குளிர காத்திருங்கள். உடனடியாக உட்கொள்ளுங்கள். இந்தத் தேநீரை ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முறை உட்கொள்ளுங்கள். நல்ல பலன் கிடைக்கும். எலுமிச்சை கொண்ட பிளாக் தேநீர் வயிற்றுப்போக்கை குணப்படுத்த மற்றொரு பெரிய தீர்வு. டானின்களின் இருப்பு தேயிலைக்கு ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகளை அளிக்கிறது. இது வயிற்றுப்போக்கை ஒழிப்பதில் மிகச் சிறந்தது. பிளாக் தேநீர் கூட ஆன்டி அழற்சி மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் கொண்டிருக்கிறது, இது வீக்கம் ஆற்றவும் மற்றும் நோய்க்காரணிகளை எதிர்த்து போராடவும் உதவுகிறது.

   

  Latest Posts

  ஸ்டாலின், திருமாவளவன் இதற்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டும்: கொந்தளிக்கும் பாஜக., பிரமுகர்!

  மதரீதியான மோதல்களை தூண்டிவிட முனைந்த இவர்கள் மீது, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  நவராத்திரி விரதத்தை ஒரு முறை கடைபிடித்தால் வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டுமா?

  இந்த திவ்யமான சரந் நவராத்ரி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றே சாஸ்திரம் தெரிவிக்கிறது.

  70 ஆண்டுக்குப் பின்… முதல் முறையாக கோயிலுக்குள் வலம் வந்த முதலை!

  இதன் சிசிடிவி காட்சிகளை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்தக் காட்சிகள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  வேண்டாம் மனு தர்ம சட்டம்!

  வேண்டாம் ! வேண்டாம் ! மனு தர்ம சட்டம்...
  Dhinasari Jothidam adDhinasari Jothidam ad

  சமூகத் தளங்களில் தொடர்க:

  18,009FansLike
  257FollowersFollow
  15FollowersFollow
  71FollowersFollow
  956FollowersFollow
  17,300SubscribersSubscribe

  ஆர்ப்பாட்ட அரசியல் : ஸ்டாலின், திருமாவளவன் உள்பட கட்சியினர் 3750 பேர் மீது வழக்கு பதிவு!

  மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் இல்லம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!

  தனிநபர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீடித்துள்ளது

  ராணுவ கேண்டீன்களில் மது உட்பட… இனி வெளிநாட்டுப் பொருள்கள் விற்பனைக்கு இல்லை!

  இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,

  நவராத்திரி விரதத்தை ஒரு முறை கடைபிடித்தால் வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டுமா?

  இந்த திவ்யமான சரந் நவராத்ரி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றே சாஸ்திரம் தெரிவிக்கிறது.

  சுபாஷிதம்: சிக்கனம் சிறப்பான குணம்!

  கிரெடிட் கார்டுகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பது இந்த செய்யுளில் ஒளிந்துள்ள செய்தி.

  ஸ்டாலின், திருமாவளவன் இதற்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டும்: கொந்தளிக்கும் பாஜக., பிரமுகர்!

  மதரீதியான மோதல்களை தூண்டிவிட முனைந்த இவர்கள் மீது, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  பெண்களை இழிவு படுத்தும் நோக்கம் இருந்திருக்குமானால்… இவையெல்லாம் சாத்தியமில்லை!

  அதைச் செய்பவர்களையும் அதை ஆதரிப்பவர்களையும் நிராகரிப்பது சமுகத்திற்கு நல்லது.

  அடடா… பெண்கள் குறித்து மனு தர்மம் இப்படியா சொல்லுது..?!

  மனு ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி சொல்ல பட்டிருக்கின்றது……