பட வாய்ப்பு தருகிறேன் என்று கூறி பாலியல் பலாத்காரம்! தயாரிப்பாளர் தலைமறைவு!

கிரைம் நியூஸ் சினிமா
paliyal-vankodumai

திரையுலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்ட பலரும் Me Too என்ற டேக்கில் பேசி வந்தனர்.

இவ்விசயத்தில் மலையாள சினிமாவில் புரட்சியே நடைபெற்றது எனலாம். இந்நிலையில் தற்போது 22 வயது இளம் மாடல் நடிகை ஒருவர் படத்தயாரிப்பாளர் ஆல்வின் ஆண்டனி மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.

இப்புகாரில் அப்பெண் ஆல்வின் கொச்சியில் உள்ள பனம்பள்ளி நகர் கெஸ்ட் ஹவுஸில் வைத்து பட வாய்ப்புகள் தருவதாக கூறி 4 முறை பாலியல் கொடுமை செய்துள்ளார் என கூறியுள்ளார்.

இதனால் போலிசார் அத்தயாரிப்பாளரை தேடி வருகின்றனர். ஆனால் அவர் தலைமறைவாகியுள்ளாராம். ஆல்வின் ஓம் சாந்தி ஓஷானா, அமர் அக்பர் அந்தோனி ஆகிய ஹிட் படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.