இருக்கும் வரை கலக்குவோம் என்ற மனப்பான்மையில் கவர்ச்சியில் தாராளமயக் கொள்கையைக் கடைப்பிடித்து வரும் நடிகை எமி ஜாக்சன், இப்போது ஒரு படத்தை சமூக வலைத்தளத்தில் விட்டு, ரசிகர்களைச் சுண்டியிழுத்துள்ளார். பொதுவாக பட வாய்ப்புகளுக்காக நடிகைகள் இவ்வாறு கவர்ச்சியாக போஸ் கொடுத்து, படங்களை டிவிட்ட்டர், இன்ஸ்டாக்ராம் உள்ளிட்டவற்றில் பகிர்ந்து வருவது அதிகரித்து வருகிறது.
நடிகை எமி ஜாக்சன் தமிழில் மதராசபட்டினம் படம் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் இந்தியாவிலேயே தங்கி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இங்கிலாந்து மாடல் அழகியான இவர் கவர்ச்சியாக நடிப்பதில் தாராளமயக் கொள்கையைக் கடைப்பிடித்ததால் பட வாய்ப்புகள் குவிந்தன.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் நடித்துள் எமி ஜாக்சன், பாலிவுட் டிவி சீரியலிலும் நடித்து வருகிறார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 2.0 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு, கவர்ந்திழுப்பதில் வல்லவர் எமி. தற்போது பிகினி ட்ரெஸ் காம்பெடிஷனில் கலந்து கொண்டவர் போல், நீச்சல் உடையில் இருக்கும் படத்தை தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்தப் படங்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றன. இவர் இந்தப் படத்தை பதிவேற்றி இரு நாட்களுக்குள் 3 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு மேல் லைக்ஸ் கொடுத்திருக்கிறார்கள்.





