———————-
ஆங்கில அரசு 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுப்பதாக சட்டம் இயற்றியது. நம்மவர்கள் அந்த ஆகஸ்டு 15-ம் நாள் அஷ்டமி தினம் என்றும், அன்று நாடு சுதந்திரம் பெற்றால் நாடு நலம் பெறுமா எனவும் ஐயப்பாடு கொண்டனர். 17-ம் தேதி வேண்டுமானால் சுதந்திரம் பெறுவோம்; இவ்வளவு நாள்கள் பொறுத்தோம் இன்னும் இரண்டு நாள்கள் பொறுக்க முடியாதா என அங்கலாய்த்தனர். ஐவஹர்லால் நேருவிடம் இதுபற்றி முறையிட்டனர். அவருக்கு அஷ்டமி-நவமி இவற்றில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. இருந்தாலும் மற்றவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஆங்கில அரசை அணுகினார். சட்டம் இயற்றியாகிவிட்டது. இனிமாற்ற முடியாது என்று ஆங்கில அரசு மறுத்துவிட்டது. நம்மவர்கள் தீவிரமாக யோசித்தனர். ஆங்கிலேயர்களுக்கு புதியநாள் அதாவது மறுநாள் என்பது நள்ளிரவு 12 மணிக்கே தொடங்கிவிடுகிறது. ஆனால் நமக்கோ விடியற்காலை ஐந்து மணிக்குத்தான் தொடங
——————————
இப்படியாக அந்தச் செய்தி இருந்தது. சரிதான்… எந்த செயலையும் நல்ல நேரம் பார்த்து செய்ய வேண்டும் என்பது ஒரு வகையில் சரிதான். ஆனால், நல்லோர்க்கு எந்நாளும் திருநாளே. எந்நேரமும் நன்நேரமே என்பது என் எண்ணம்.
இது கிடக்கட்டும். நம் தமிழ் மாதக் கணக்கீட்டின் படி பார்த்தால் ஆடி மாதமாயிருக்குமே. அப்போது எதுவும் நல்லது செய்ய மாட்டார்களாமே! ஆடியில் கிடைத்ததுதான் நம் நாட்டின் சுதந்திரமா? அப்ப இனிமேல் அதற்கு ஒரு காரணம் எழுதினாலும் எழுதப்படலாம்!
இந்தச் செய்தியின் அடிப்படையில், பஞ்சாங்கத்தை நோண்டினால், கிடைத்த தகவல் அன்று சதுர்த்தசி. மங்களகரமான வெள்ளிக்கிழமை. மறுநாள் பிறந்தால், நிறைந்த அமாவாசை. ஆகவே, இப்படி எல்லாம் சுதந்திர தினத்தை மாற்றிக் கேட்டதாக இருந்திருந்திருந்தால், 16ம் தேதி அமாவாசை அன்று கேட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். 15ம் தேதி இரவு 8.20க்கு மேல் அமாவாசை வந்துவிடுகிறது. ஆனால், இதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. சரி எத்தனையோ புளுகுகளும் கதைகளும் நிறைந்திருக்கும் நாட்டில் இதுவும் ஒன்றாக இருந்துவிட்டுப் போகட்டுமே!
1947 – ஆகஸ்ட் 15ம் தேதி உள்ள பஞ்சாங்க விவரம்:
——————————
Sunrise15/08/47 05:59 AM
Sunset15/08/47 06:26 PM
வாரம்: வெள்ளிக்கிழமை
நட்சத்திரம்: பூசம்
Start Time : 14/08/47 10:58 PM
End Time : 15/08/47 08:08 PM
திதி: சதுர்தசி
Start Time : 15/08/47 12:00 AM
End Time : 15/08/47 08:20 PM
பக்ஷ: கிருஷ்ண பக்ஷ
கரணம்: பத்திரை
Start Time : 15/08/47 12:00 AM
End Time : 15/08/47 10:11 AM
சகுனி
Start Time : 15/08/47 10:11 AM
End Time : 15/08/47 08:20 PM
யோகம் வ்யதீபாதம்
Start Time : 15/08/47 02:02 AM
End Time : 15/08/47 09:56 PM
இராகு : 10:40 AM – 12:13 PM
எமகண்டம்: 3:20 pm – 4:53 pm
குளிகை: 7:33 am – 9:06 am
Place : Chennai, INDate : Aug 15, 1947
Location : 13.09, 80.28
Time Zone : IST (+05:30)