புத்தூர் சுதர்ஸனர் கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் காலமானார்

திருச்சி, டிச.13: திருச்சி புத்தூரில் வசித்து வந்த ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 86.  அண்மைக் காலமாக உடல்நலக் குறைவால் சிரமப் பட்டு வந்தார். இந்நிலையில் இன்று (டிச.13) அதிகாலை 2.15க்கு அவர் ஆசார்யன் திருவடி அடைந்ததாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர்.திருச்சியின் புகழ்பெற்ற வழக்குரைஞர். சுதர்ஸனர் என்றும் சுதர்சனம் ஐயங்கார் என்றும் வைணவ உலகில் அழைக்கப்பட்டவர். இவருடைய தந்தையார் ஸ்ரீனிவாஸ ஐயங்கார். மிகச் சிறந்த அறிஞராகத் திகழ்ந்தவர். தந்தையின் வழியில் கிருஷ்ணஸ்வாமி ஐயங்காரும் சட்டம் முதுநிலை படித்து வழக்குரைஞர் ஆனார். தந்தையார் தொடங்கிய வைஷ்ணவ சுதர்ஸனம் என்னும் வைணவப் பத்திரிகையை வெகு காலம் நடத்தி வந்தவர்.  சமயப் பற்றால் வழக்குரைஞர் தொழிலை இரண்டாம் பட்சமாகக் கருதி சமயத் தொண்டு ஆற்றியவர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை மற்றும் புத்தகங்கள் பதிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் நூற்றுக்கணக்கில் நூல்களை எழுதியுள்ளார். வைணவ கிரந்தங்கள், சமஸ்கிருத நூல்கள், தமிழ் பிரபந்தப் பாசுரங்களுக்கு விளக்கங்கள் என பல நூல்கள் இவரின் உழைப்பில் வெளிவந்துள்ளன. இதற்காக தனி அச்சுக்கூடமே வைத்து பதிப்பித்து வந்தார். தெய்வத் தமிழ் பாசுரங்கள் எளிய மக்களுக்கும் தெளிந்த நடையில் விவரணங்களோடு கிடைப்பதற்கு இவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஏராளம். திவ்யார்த்தரத்னநிதி, விசிஷ்டாத்வைத சம்ரட்சகர், திருமால்நெறி நூற்காவலர், ஸ்ரீதத்வநிர்தாரகர், வித்யாவிஷாரதா உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர் ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி ஐயங்கார்.தொடர்புக்கு:ஸ்ரீவைஷ்ணவ சுதர்ஸனம்5/3பி, புத்தூர் அக்ரஹாரம், புத்தூர், திருச்சி 17போன்: 0431 – 2773705 

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...