குடிமகன் !

நான்
அன்றாடகாச்சிதான்
ஆனாலும்
தினக்கூலியில் சரி பாதியை
நாள் தவறாது
தமிழக அரசால்
தடுக்கி விழும் இடமெல்லாம் திறந்து வைக்க பட்டுள்ள
தமிழ்நாடு சில்லரை வணிப கழக அலுவலகத்தில் வருமான வரியை
கண்ணியம் தவறாமல் கட்டி விட்டு
அடுத்த வேளை சாப்பாட்டுக்கு
விட்டத்தை பார்த்து
விழித்து கொண்டுள்ள
தமிழ்நாட்டின்
மிக சிறந்த குடிமகன் நான்.