தெலுங்கானா அரசு ஊழலில் திளைத்து வருகிறது-பிரதமர் மோடி

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

ஐதராபாத்தில் இன்று பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது,

21ஆம் நூற்றாண்டில் இந்தியா ‘ஆத்மநிர்பர் பாரத்’ மற்றும் ‘மேக் இன் இந்தியா’ என்ற கனவோடு முன்னேறி வருகிறது. நமது நாட்டில் புதிதாக உருவாகியுள்ள சிறு நிறுவனங்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகிறது. இன்று புதிய நிறுவனங்கள் அதிகரிப்பதில் உலகில் மூன்றாவது நாடாக இந்தியா திகழ்கிறது. குடும்ப அரசியல் கட்சிகள் எவ்வாறு ஊழல் மயமாகி உள்ளன என்பதையும், அவை எவ்வாறு ஒரு குடும்பத்திற்காகவே மட்டுமே இயங்குகின்றன என்பதையும் நாடு பார்த்துக்கொண்டிருக்கிறது.குடும்ப அரசியல் கட்சி ஒரு அரசியல் பிரச்சினை மட்டுமல்ல, நமது நாட்டின் ஜனநாயகம் மற்றும் இளைஞர்களின் மிகப்பெரிய எதிரி. ஒரே குடும்பத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகமாக ஊழல் எப்படி மாறுகிறது என்பதை நம் நாடு பார்த்துள்ளது. குடும்ப அரசியல் காரணமாக இளைஞர்களுக்கு அரசியலில் நுழைய வாய்ப்பு கிடைப்பதில்லை.

ALSO READ:  கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

தெலுங்கானா அரசு ஊழலில் திளைத்து வருகிறது. இங்குள்ள ஆட்சியாளர்கள் அவரவர் வங்கி கணக்கை நிரப்புவதிலேயே குறியாக உள்ளனர். ஒரு குடும்பத்தின் கையில் ஆட்சி நிர்வாகம் சிக்கி தவிக்கிறது. நாட்டை கொள்ளை அடிப்பதிலேயே ஒரு குடும்பத்தினர் அரசியல் கட்சி நடத்துகின்றனர். இங்குள்ள ஆட்சி ஜனநாயகத்திற்கு எதிரானது
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் போனது. வாரிசு அரசியலால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. அவர்கள் தங்களின் குடும்ப முன்னேற்றத்திற்கு மட்டும் உழைக்கின்றனர். நாட்டின் வளர்ச்சியில் அக்கறை இல்லை. இவ்வாறு மோடி பேசினார்.

Tamil News large 3038795 - 2026

Related articles

Recent articles

spot_img