WhatsApp Image 2023 02 07 at 11.jpeg 1 - 2026

ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பு..

அரசியல்
WhatsApp Image 2023 02 07 at 11.jpeg 1 - 2026

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது.இடைத்தேர்தலையொட்டி வரும் பிப் 19 ஆம் தேதியன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிப்ரவரி 24 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் வேட்பாளருக்கு பிரசாரம் மேற்கொள்ளவிருப்பதாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேர்தல் திமுக பிரச்சார குழு தெரிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவையடுத்து அங்கு வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 

இந்த இடைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ். தென்னரசு, உள்பட 62 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஆனால் இறுதியாக போட்டி காங்கிரஸ் அதிமுக வேட்பாளர்களிடையே நிலவிவருகிறது.இந்தநிலையில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று துவங்கி நடைபெறுகிறது. 

இடைத்தேர்தலையொட்டி கட்சிகள் தொகுதியில் பிரசாரத்தை தொடங்கியுள்ள நிலையில்,  காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்
வருகிற  பிப்ரவரி 24 ஆம் தேதி  ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரம் மேற்கொள்வார் என திமுக அறிவித்துள்ளது.
அதுபோல, வருகிற 19 ஆம் தேதியன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்வார் எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தியை பிரச்சாரத்துக்கு அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.