
இராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி பகுதியில் காய்ச்சலுக்காக ஊசி போட்ட 5 வயது சிறுவன் உயிர் இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வடக்கு மாலையடிபட்டி, பகுதியை சேர்ந்தவர்
மகேஷ்ஸ்வரன் இவரது கற்பகவள்ளி தம்பதியினருக்கு திருமணம் ஆகி 11 ஆண்டுகள் ஆகின்ற நிலையில் யூவஸ்ரீ என்ற 10 வது பெண் குழந்தையும் 5 வயது
கவிதேவநாதன் என்ற ஆண் குழந்தையும் உள்ளது .
மகேஷ்வரனின் மனைவி கற்பகவள்ளி உடல் நல குறைவால் கடந்த மூன்று ஆண்டு களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் இரண்டு குழந்தைகளையும் மகேஸ்வரனின் தாயார்வளர்த்து வந்துள்ளார் .
இந்த நிலையில் சிறுவன்
கவிதேவநாதனுக்கு கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சல் வந்துள்ளது அருகே இருந்த கம்போண்டர் ஒருவரிடம் ஊசி போட்டு வந்துள்ளனர் இருப்பினும் காய்ச்சல் குறையாத நிலையில் இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் பணிபுரியக்கூடிய மருத்துவர் ஒருவர் சம்பந்தபுரம் பகுதியில் தனியாக மருத்துவமனை நடத்தி வருகிறார் அவரிடம் ஊசி போட சென்றுள்ளனர் ஊசி போட்டு வீட்டுக்கு வந்து அரை மணி நேரத்தில் சிறுவன் மயங்கி விழுந்துள்ளார் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர் அங்கு அனுமதிக்க மறுத்ததை அடுத்து இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர் அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் சிறுவனின் உடலை பரிசோதனை செய்த பொழுது ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர் .
இதை அடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு இராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரீத்தி வடக்கு காவல் ஆய்வாளர் ராஜா ஆகியோர் சிறுவனின உறவினர்களிடம் சமாதானம் செய்து உடலை விருதுநகர் அரசு மருத்துவமனை கொண்டு சென்று பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனைக்கு பின்பு காய்ச்சலுக்கு ஊசி போட்டதால் சிறுவன இறந்தானா வேறு ஏதும் காரணமா என்பது தெரியவரும் என தெரிவித்தனர்
காய்ச்சலுக்காக ஊசி போட்டு சிறுவனை இழந்து வாடும் குடும்பத்தினர் கதறி அழுதனர் காய்ச்சலுக்காக ஊசி போட்டு சிறுவன் இறந்தது அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது