
கேரள மாநிலத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருகிற கார்த்திகை,தை, மார்கழி மாதங்களில் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிவார்கள். இந்த நிலையில் பக்தர்கள் வருவதற்கு ஏதுவாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.ஆனால் இந்த சிறப்பு ரயில் செங்கோட்டை புனலூர் வழியாக இயங்காது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறப்பு ரயில்:
கேரள மாநிலத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். மேலும் தற்போது கார்த்திகை,தை, மார்கழி ஆகிய தமிழ் மாதங்கள் வர இருப்பதால் இம்மாதங்களில் பக்தர்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். அதனால் பக்தர்கள் வருவதற்கு ஏதுவாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது ஒரே ஒரு விரைவு ரயில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
மேலும் தாம்பரம்- செங்கோட்டை இடையே அந்தியோதயா ரயில் இயக்கப்படும் என அறிவித்து 2 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இன்னும் இந்த ரயிலானது இயக்கப்படாமல் உள்ளது. அதனால் சென்னை சென்ட்ரல் கொல்லம் இடையே சென்னை எழும்பூர், செங்கோட்டை, கரூர்,திருச்சி,தஞ்சாவூர், மயிலாடுதுறை,விழுப்புரம், மதுரை சேலம்,நாமக்கல் வழியாக கூடுதலான சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
இந்த நிலையில் சென்னை, எழும்பூர்-கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, திங்கள்,புதன்,வெள்ளி ஆகிய கிழமைகளில் இந்த சிறப்பு ரயில் சென்னையிலிருந்து கொல்லத்திற்கும் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் கொல்லத்திலிருந்து சென்னை எழும்பூருக்கும் வாரந்தோறும் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து மதுரை செங்கோட்டை புனலூர் வழியாக கொல்லத்திற்கு பகல் நேர சிறப்பு ரயில் சபரிமலை ஐயப்பன் கோயில் செல்லும் பக்தர்கள் நலன் கருதி இயக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.செங்கோட்டை அருகே ஐயப்பன் படை வீடு கோயில்கள் அச்சன்கோவில் ஆரியங்காவு குளத்துப்புழா கோயில்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.