ராஜபாளையத்தில் சாலையில் வீணாக செல்லும் குடிநீர் வீதியில் செல்லும் குடிநீர் வீட்டுக்கு வருமா என காத்திருக்கும் பொதுமக்கள்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்காசி சாலையில் சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வீதியில் செல்கிறது சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மழைநீர் தேங்கி கிடப்பதாக அச்சத்தில் செல்கின்றனர்
குடிநீர் வீணாக செல்வதால் வீடுகளுக்கு குடிநீர் கிடைக்காத நிலையில் தண்ணீர் வீணாக செல்வது பொதுமக்கள் கேள்வியை எழுப்பி உள்ளது .
குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கேட்ட பொழுது தாமிரபரணி கூட்டு குடிநீர திட்டம் சோதனை செய்வதாக தெரிவிக்கின்றனர் .
சாலைகள் தோண்டி சிமெண்ட் போட்ட பின்பு குழாயில் உடைப்பு ஏற்பட்டது மீண்டும் சாலையில் தோட்டும் நிலை ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் .
சாலைகளை முழுவதுமாக சரி செய்யும் முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படுகிறத என்று சோதனை செய்த பின்பு சாலைகள் போட்டு இருக்க வேண்டும் அப்டி போடாமல் சாலைகள் போட்டால் மீண்டும் தோண்டும் அவளநிலை ஏற்படும் இதனால் மக்கள் வரிப்பணம் வீணாகும் என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆறு ஆண்டுகளாக தாமிரபரணி கூட்டுக் குடிநீர் வரும் என காத்திருக்கும் இராஜபாளையம் பொது மக்களுக்கு தாமிரபரணி கூட்டுறவு திட்டத்தின் மூலம் வரக்கூடிய குடிநீர் வீதியில் செல்கின்றது வீட்டுக்கு வருமா என ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.