porvaal - 2026

கருணாநிதி சிலைத் திறப்பு விழாவில் ஸ்டாலின் பேசிய பேச்சுகள் இப்போது சர்ச்சையாகி உள்ளன. மோடி ஒரு சாடிஸ்ட் என்று அவர் கூறியது, பல்வேறு மட்டத்தில் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது.

கருணாநிதி உடல் நலக் கோளாறு காரணமாக வீட்டுக்குள்ளேயே முடக்கி வைக்கப் பட்டிருந்த போது, சென்னை வந்த பிரதமர் மோடி, தாமே வலியச் சென்று கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னரும் கருணாநிதியின் மறைவின் போது, பல்வேறு அலுவல்களையும் விட்டுவிட்டு சென்னைக்குப் பறந்து வந்து, கருணாநிதியின் இறுதிச் சடங்கில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்.

வேற்றுக் கட்சி, வசைபாடிய நபர் என்றெல்லாம் பார்க்காமல், ஒரு அரசியல் தலைவர் என்ற முறையில் நாகரீகமாக நடந்து கொண்ட மோடிக்கு, ஸ்டாலின் சூட்டியுள்ள பெயர்தான் சாடிஸ்ட் மோடி என்பது!

இந்த நிலையில், யார் சாடிஸ்ட் என்று டிவிட்டரிலும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் பட்டிமன்றமே துவங்கியுள்ளது .

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி, ஒரு டிவிட்டர் பதிவுக்கு பதிலளித்த போது, 

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

தாமிரபரணியில் ஆற்றில் தேயிலை தோட்ட தொழிலாளர்களை அடித்து கொண்ற கருணாநிதி வருத்தமோ கண்டனமோ தெரிவித்தாரா? – என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு இதுவரை வருத்தமோ கண்டனமோ தெரிவிக்காத பிரதமருக்கு பெயர் வேறு என்ன என்று ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், ஷ்யாம் கிருஷ்ணசாமியின் இன்னொரு டிவிட்டர் பதிவில், திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் அடித்துக் கொல்லப்பட்ட தொழிலாளர்கள் விவகாரத்தில், அவர்களாகவே மூழ்கி இறந்தார்கள் என்று பொய்யான தகவல் தந்தவர் சாடிஸ்ட் இல்லாமல் வேறு என்ன என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்!

ALSO READ:  விடுதலைப் போரில் சனாதனத்தின் பங்களிப்பு!

One response to “யார் சாடிஸ்ட்? தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை அடித்துக் கொன்ற கருணாநிதிதான் சாடிஸ்ட்!”

  1. சரியான நினைவூட்டல். இதோடு அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் உதயகுமாரையும் சேர்த்துக் கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending