தேசதுரோக தமிழ் செய்தி சேனல்களுக்கு கர்னல் ஹரிஹரன் கொடுத்த செருப்படி!

Reporters Diary அடடே... அப்படியா? உரத்த சிந்தனை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்

thanthitv - 2026

தமிழ் ஊடகங்களுக்கு கர்னல் குடுத்த செருப்படி நைசா டெலிட் பண்ணிட்டோம் தப்பிச்சிட்டோம்ன்னு தந்திடிவிகாரனுக நினைச்சிட்டிருந்தானுக..! இந்தா சிக்கிடுச்சில்ல…!

தேர்தலுக்காக நடத்தப்படும் நாடகம் என்று சொல்லும் உங்களை முதலில் சுட்டுத் தள்ள வேண்டும் என்று நேரலையில் கொந்தளித்தார் கர்னர் ஹரிஹரன்.

இந்திய விமான படையின் முன்னாள் கர்னல் ஹரிஹரனிடம் தந்தி டிவி, நேற்று பாகிஸ்தானுக்குள் நடைபெற்ற வான் தாக்குதல் குறித்து கேள்வி கேட்டது. நண்பகல் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசிக் கொண்டிருந்த ஹரிஹரன், இந்திய ராணுவம் செய்த வீரச் செயல்கள் குறித்து கூறிக் கொண்டிருந்தார்.

அப்போது நெறியாளர் உட்பட பலர் இது தேர்தலுக்காக நடத்தப்பட்ட தாக்குதல் என கம்யூனிஸ்ட்கள் திருமுருகன் காந்தி உட்பட பலரும் குற்றம் சாட்டுகிறார்கள் என்று ஒரு கேள்வியை முன்வைத்தார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியும் கோபமும் ஊடகங்கள் மீது விரக்தியும் அடைந்த ஹரிஹரன், மனம் நொந்து சிலவற்றைக் கூறினார்.   உலகில் இந்தியாவைத் தவிர வேறு எங்கும் இப்படி ஊடகங்கள் நடந்துகொள்வது இல்லை அதிலும் நம் தமிழ்நாட்டில் இன்னும் அதிகமாகிவிட்டது. நம்ம நாட்டை சேர்ந்த 44 பேரை கொன்னுருக்காங்க அதில் தமிழர்கள் 2 பேரு  இறந்துருக்காங்க

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

இந்த நேரத்தில் ஒட்டு மொத்த இந்தியனும் நம்ம அரசாங்கம் பின்னாலும் ராணுவ வீரகளின் பின்னாலும் இருந்து எதிரிகளை அழித்த நம் ராணுவ வீரர்களை பாராட்டுவதை விட்டு விட்டு இப்படி கேவலமாக தேர்தலுக்காக நடத்தப்பட்டதா என விவாதம் நடத்துகிறீர்களே இது எவளோ பெரிய கேவலம்?! இப்படிப் பேசும் வாதங்களுக்கு என்னை அழைக்காதீர்கள் ! யாரெல்லாம் ராணுவ வீரர்களின் தியாகத்தை  தேர்தலுக்காக நடத்தப்படும் நாடகம் என்று சொல்கிறானோ அவனை முதலில் சுட்டு தள்ள வேண்டும்; நீங்க ரேட்டிங்காக டிவி நடத்துறீங்களா? இல்ல இன்பர்மேஷனுக்காக நடத்துறீங்களா? முதல்ல அதை முடிவு பண்ணிக்குங்க. அது வரைக்கும் என்ன இனி கூப்பிடாதீங்க… என்று பளீர் என்று சொல்லிவிட்டு, அத்துடன் விடை பெற்றுக் கொண்டார்.

கர்னர் ஹரிஹரன் போன்றோர் தான் பாஜக., வில் இருந்து டிவி பொட்டிகளில் தலை காட்டினால் போதும் என்று தேச விரோத சேனல்களில் எல்லாம் போய் பல்லிளித்து விட்டு வருபவர்களுக்கான ஒரு பாடம் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துகளை முன்வைக்கிறார்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.