October 24, 2021, 1:38 am
More

  ARTICLE - SECTIONS

  திருநீறு பூசியே இந்துக்களை ஏமாற்றி விடுவோம்! திமுக., பதில் சொல்லியே தீர வேண்டும்!

  Sathur Ramachandran MLA - 1

  “திருநீறு பூசியே இந்துக்களை ஏமாற்றி விடுவோம்” என்று கட்சி மாறுவதில் வல்லவர் திமுகவை சார்ந்த கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அவர்கள் பேசியிருக்கிறார்.

  “மெய்ப்பொருள் வேடம் பூண்டு புகுந்தனன் முத்த நாதன்” என்ற சொல்லாடல் வழக்கில் இருக்கிறது. நல்லவன் போல் இருப்பான் பரம சண்டாளன்.

  திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் திரு ஸ்டாலின் மசூதிகளில் சென்று நோன்பு கஞ்சி குடிக்கும் பொழுது குல்லா அணிந்து அல்லா பெயரை சொல்லுவார்.

  அதேநேரத்தில் கிறிஸ்தவர்கள் கொண்டாடக்கூடிய கிறிஸ்துமஸ் பெருவிழாவில் கலந்து கொண்டு வெட்டக் கூடிய கேக்கை பாதிரி ஊட்டும் போது வாயை திறந்து காண்பிப்பார்.

  ஆனால் திருவரங்கம் கோவிலில் நெற்றியில் பட்டாச்சாரியார் மஞ்சள் இடும்போது உடனடியாக அழித்துவிடுவார். அதே நேரத்தில் பசும்பொன் தேவர் திருமகனார் கோவிலில் விபூதி இடும்போது ஏதும் பேசாமல் மௌனமாய் சிரிப்பார்.

  திமுக இந்து விரோதி தெய்வ விரோதி. இவர்கள் பெரியாருடைய வழி வந்ததாக மேடை எல்லாம் முழங்கி ஊரைத் திருத்த வேண்டும் .

  தன் வீட்டில் எந்த மாற்றமும் கூடாது என்று பகுத்தறிவு வேடம் பூண்டு தமிழக மக்களை ஏமாற்றும் “நவீன முத்தநாதன் கள்”. இந்து சமய தமிழர்களின் திருமண சடங்குகளில் வேத புரோகிதர்கள் சொல்லும் மந்திரம் புரியாது அவர்கள் சொல்லும் மந்திரம் தமிழர்களுக்கு தெரியாது அவர்கள் வளர்த்த கூடிய அந்த யாகத்தீயில் உடைய புகை கண்களில் எரிச்சலை உண்டாக்கி கண்ணீரை வரவழைக்கும் இப்படி ஏகடியம் பேசியே இந்துக்களை கொச்சைப்படுத்தும் ஈனச் செயலை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.

  திமுக. மறைந்த கருணாநிதி சொன்னார் நெற்றியில் பொட்டு வைத்து அதை நடத்தப்படுகிறது என்றார். அம்மன் கோவில்களில் ஆடி கூழ் குடிக்க வர மாட்டோம் அதே நேரத்தில் பள்ளிவாசலில் நோன்பு கஞ்சி குடிக்க உடனடியாக சென்று விடுவோம் காரணம் இஸ்லாமியர்கள் ஒன்றாக ஓட்டு போடுவதாக இவர்கள் கற்பனை ஆசை.

  நாங்கள் நாத்திகவாதிகள் கடவுளை வணங்க மாட்டோம் அறங்காவலர்களாக நீடிப்போம். கோவில் சொத்துக்களை ஆட்டையை போடும் கோவில் சாமி சிலைகளை திருடி உண்டியல் பணத்தை கூட்டுக் கொள்ளை அடிப்போம் அதை வாழ்நாள் லட்சியமாக கொண்டு செயல்படக்கூடிய இந்து-விரோத திமுகவை இந்த தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்.

  பாண்டிய மன்னனை திருவிளையாடல் செய்து திருநீற்றுப்பதிகம் பாடி வெப்புநோய் தீர்த்ததாக வரலாறு எல்லாம் இருக்கிறது. எனக்கு இந்துக்கள் அணியக்கூடிய திருநீற்றை அணிந்துகொண்டு இந்துக்களை ஏமாற்றுவோம் என்று சொன்னால் இவர்களை என்ன பெயரில் அழைப்பது?

  ஆட்சி அதிகாரம் வேண்டும் என்பதற்காக பிரபல காமெடி நடிகர் வடிவேலு போல நாய் வேஷம் போட்டால் குறைப்போம் யானை வேஷம் போட்டால் பிச்சை எடுப்போம்

  குரங்கு வேஷம் போட்டால் மரத்திற்கு மரம் தாவுவோம் திமுக கட்சி காரன் வேஷம் போட்டால் இந்துக்களை ஏமாற்றுவதற்கு விபூதி அணிவோம் என்பதுபோல் இருக்கிறது கேகேஎஸ்எஸ்ஆர் பேச்சு. இதையெல்லாம் பொறுத்துக் கொண் மானமுள்ள உணர்வுள்ள சொரணையுள்ள இந்துத் தமிழர்கள் திமுகவில் தான் இருக்க வேண்டுமா என்பதை யோசிக்க வேண்டும்.

  அது மட்டுமல்லாது திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய “தாலியறுப்பு தருதலை” திக தலைவர் வீரமணி அவர்கள் கோடானுகோடி இந்துக்கள் வணங்கும் கூடிய கண்ண பெருமானை, ஸ்ரீ கிருஷ்ணரை ஒரு காமாந்தகன் என்றும், பேசியிருக்கிறார். இதை திமுக தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள் ஆதரிக்கிறாரா?

  கண்ணனை வணங்கக்கூடிய யது குல மக்களே நீங்கள் அமைதியாக இருப்பது நியாயமா? ஓட்டுக்காக கட்சி மாறி திமுகவில் இருக்கும்  “கட்சி மாறி கண்ணப்பன்” யாதவர் குலம் என்று சொல்லி வீராப்பாக பேசுகிறாரே இந்த மானங்கெட்ட வீரமணியை கண்டித்து ஏதாவது பேசி இருக்கிறாரா?

  உணர்வுள்ள இந்துக்களே திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கூட்டணி வேட்பாளர்கள் நமது பகுதியில் வாக்கு கேட்டு வந்தால் விபூதியை வைத்துக்கொண்டு “நான் உண்மையாக விபூதி பூசுகிறேன் இந்துக்களை ஏமாற்றுவதற்காக விபூதி பூச வில்லை என்று சத்தியம் செய்ய வையுங்கள்.”

  இதே கேகேஎஸ்எஸ்ஆர் அவர்கள் இஸ்லாமியர்களை ஏமாற்றுவதற்காக நான் குல்லா அணிகிறேன். கிறிஸ்தவர்களை ஏமாற்றுவதற்காக நான் பாதிரியார்களின் கைகளில் முத்தம் கொடுக்கிறேன் என்று பேசுவாரா?

  இந்துக்கள் என்றால் இளித்தவாயர்கள் என்கின்ற எண்ணத்தினால்தான் இதுபோன்ற மானங்கெட்ட பிறவிகளுக்கு பேசக் கூடிய தைரியம் வருகிறது. இந்துக்கள் ஒன்றாக ஓட்டு போடவேண்டும் எனில் நாளை பன்றி வேடம் போட்டுக்கொண்டு மலம் திண்ண கூட இவர்கள் தயங்க மாட்டார்கள்.

  நக்குகிற நாய்களுக்கு ” செக்கு எது என்று சிவலிங்கம் எது என்று தெரியாது. ஆத்திரத்தின் வெளிப்பாடு இது.

  • இராம. இரவிக்குமார்
   இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர்

  1 COMMENT

  Comments are closed.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  368FollowersFollow
  39FollowersFollow
  74FollowersFollow
  1,585FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-