duraimurugan mindvoice - 2026

பயங்கரமா திட்டுறாய்ங்களே…

துரைமுருகன் வீட்டில் ரெய்டு….  எப்படி கேள்வி கேட்க முடியும்? இதற்கும் ஏதாவது கவர் வாங்கி பையில் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிகிறது…

பிரேமலதா விஜயகாந்திடம் எவ்வளவு கேள்வி கேட்டனர் . ஆனால் கையும் களவுமாக மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்று இந்த ஊடகங்கள் தானே ஒளிபரப்பு செய்தது.

துரைமுருகனிடம்…  *எதற்காக கவரில் பணம் போட்டு பெட்டி பெட்டியாக அடுக்கி வைத்தீர்கள் என்று கேள்வி கேட்கவில்லை…

*வார்டு வாரியாக எண்கள் தந்து கவரில் பணம் போட்டு வைத்ததைப் பற்றி கேள்வி கேட்கவில்லை…

*தொகுதி வாரியாக யாருக்கு பணம் தர கவரில் பணம் போட்டுள்ளார்கள் என்று கேள்வி கேட்கவில்லை…

*200 ரூபாய் மட்டுமே கவரில் உள்ளது யாருக்கு என்று கேள்வி கேட்கவில்லை.

*500 ரூபாய், 2,000 ரூபாய் கட்டுப்பணம் யாருக்கு தர உள்ளது என்று கேள்வி கேட்கவில்லை…

*30 கிலோ தங்க நாணய குவியல் குவியலாக யாருக்காக வைத்திருந்தீர்கள் என்று கேள்வி கேட்கவில்லை…

ALSO READ:  எல்லைக்கு உள்ளும் புறமும்… பிரதமரை குறி வைக்கும் அபாயம்!

*இதனால் மக்கள் மத்தியில் திமுகவுக்கு அவப்பெயர் ஏற்பட்டது பற்றி கேள்வி கேட்கவில்லை…

*பணத்தை பறிமுதல் செய்தது திமுகவின் மீது மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது என்று கேள்வி கேட்கவில்லை…

ஆனால் பிரேமலதா விஜயகாந்திடம் மட்டும் எவ்வளவு கேள்வி கேட்க முடிந்தது.

துரைமுருகன் தரும் விளக்கத்தை மட்டும் கேட்டு விட்டு வந்து செய்தி வெளியிட இந்த ஊடகங்களுக்கு துளியும் வெக்கமில்லை…

நிருபர்களிடம் நேர்மை என்பது மருந்துக்குகூட இல்லை என்று தெரிகிறது… எல்லோரும் விலைபோனவர்கள் என்று மட்டுமே தெளிவாக தெரிகிறது…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending