Home Blog Page 5674

நெல்லையில் வெட்டப்பட்ட கைதி மருத்துவமனையில் உயிரிழப்பு

காவல்துறை வாகனத்தை வழிமறித்து தாக்குதல்-ஜெயில் கைதி சரமாரியாக வெட்டி படுகொலை

_நெல்லை பாளையங்கோட்டை அருகே, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் காவல்துறை வாகனத்தில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஒருவரை, போலீசார் மீது மிளகாய் பொடி கலந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து, 13 பேர் கொண்ட மர்ம கும்பல், சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளது._

_நெல்லை மாவட்டம் பழையகாயல் அடுத்த புல்லாவெளி கிராமத்தை சேர்ந்தவர், சிங்காரம் என்கிற சிங்காரவேல். இவர், சுத்தமல்லி மதன் கொலை வழக்கு மற்றும் சுபாஷ் பண்ணையார் ஆதரவாளர்கள் கொலை வழக்கு என, பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையவர். பசுபதிபாண்டியன் ஆதரவாளரான சிங்காரவேல், தற்போது பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்._

_இன்று இவரை வழக்கு ஒன்றுக்காக, ஆயுதப்படை எஸ்.ஐ வீரபாகு உள்ளிட்ட 4 போலீஸார், துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் காவல்துறை வாகனத்தில் ஏற்றி, தூத்துக்குடி நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர். இவர்களது வாகனம், நெல்லை கேடிசி நகர் செக் போஸ்ட் அருகே சென்றபோது, 13 பேர் கொண்ட மர்ம நபர்கள் திடீரென வாகனத்தை மறித்து, போலீஸார் மீது மிளகாய் பொடி கலந்த தண்ணீரை பீய்ச்சி அடித்துள்ளனர். இதை சற்றும் எதிர்பாராத காவல்துறையினர் நிலைகுலைந்த நேரத்தில், வாகனத்தின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய மர்ம கும்பல், போலீஸார் வைத்திருந்த துப்பாக்கியை பறித்து, அதை செயல்படாதவண்ணம் உடைத்துள்ளனர். பின்னர், உள்ளே இருந்த கைதி சிங்காரத்தை வெளியே இழுத்துப் போட்டு, அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளர். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அடங்கிய சிங்காரம் உயிரிழந்துவிட்டதாக கருதிய மர்ம கும்பல், அங்கிருந்து சாவகாசமாக தப்பியோடிவிட்டது._

_ஆனால், சிங்காரம் உயிரோடு இருப்பதை கண்ட பொதுமக்களும் போலீஸாரும், அவரை தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம், பாளையங்க்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்._ _

தகவல் அறிந்த நெல்லை மாநகர காவல் ஆணையர் திருஞானம், தாக்குதல் நடைபெற்ற இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார். கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள், சுபாஷ் பண்ணையாரின் ஆட்களாக இருக்கலாம் என சந்தேகிக்கும் போலீஸார், அவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்._

_துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், காவல்துறை வாகனத்தில் இருந்த கைதியை, போலீஸாரின் கண்ணில் மிளகாய் பொடி தூவி மர்ம நபர்கள் கொலை செய்த நிகழ்வு, நெல்லை மட்டுமல்லாமல் தமிழகத்தையே அதிர்ச்சியடைய செய்துள்ளது._

தி. நகரில் அலுவலகம் திறந்தார் தீபா

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் தமிழகத்தில் அதிமுக துண்டு துண்டாக சிதற தொடங்கியுள்ளது. சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஒபிஎஸ் தலைமையில் ஒரு அணியும் ஜெ.தீபா தலைமையில் ஒரு அணியும் இயங்கி வந்தது. இந் நிலையில் தீபா இன்று காலை தனது அமைப்பிற்கான அலுவலகத்தை தி.நகரில் துவங்கினார்.

அதன் பின் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய தீபா இன்று மாலை தனது அமைப்பிற்கான பெயர் மற்றும் கொடியை அறிவிப்பதாக தெரிவித்தார். அவர் மேலும் தீபக்கின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு தேவையற்ற பிரச்சினையை கிளப்புகிறார்கள் என்று மட்டும் கூறினார். மாலை விரிவாக பேசுவதாக தெரிவித்துள்ளார்.

ஊத்தங்கரையில் அதிமுக மூன்றானதா ?

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றிய அதிமுக வில் ஒப்ஸ் -தீபா ஒரு அணியாகவும், சசி ஆதரவு அதிமுக ஒரு அணி  என இருந்த நிலையில் மூன்றாவதாக தம்பிதுரை, பாலகிருஷ்ண ரெட்டி, சின்னம்மா, பெயர் போட்டு கடமைக்கு டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி படத்தை மட்டும் போட்டு பெயர் இல்லாத போஸ்டர் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளதால் அதிமுகவினரே அதிர்ச்சி அடைந்துள்ளனர் … மேலும் கட்சி மூன்றாக உடைந்ததா என தொண்டர்கள் புலம்புகின்றனர்.

வாட்சாப் பிறந்த தினம் இன்று!

*வாட்ஸ்* *அப்*-புக்கு இன்னிக்கு ஹேப்பி பர்த் டே!

?ஜேன் கோம். ?பிரையன் ஆக்டன். இந்த இரண்டு பெயர்கள்தான் கொண்டவர்கள்தான் ‘வாட் ஸ் அப்’  என்ற தொழில் நுட்ப புரட்சியை உருவாக்கிய தொழில்நுட்ப வல்லுனர்கள்.

கோமுக்கு இப்போது வயசு நாற்பது. ஆக்டனின் வயது நாற்பத்தி நாலு. மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக ‘ஃபேஸ்புக்’ நிறுவனம் ஆசை ஆசையாக இவர்களிடமிருந்துதான் ‘வாட்ஸ் அப்’ உரிமையை காசு கொடுத்து வாங்கியது. விலை எவ்வளவு கொடுத்திருப்பார்கள்? குன்ஸாக சொல்லுங்களேன் பார்ப்போம். பத்து லட்சம்? ஐம்பது லட்சம்? ஒரு கோடி? பத்து கோடி? நூறு கோடி? ஹூம்.. சொன்னா நம்பணும் – வாட்ஸ் அப்பை ஃபேஸ்புக் வாங்கியது ஜஸ்ட் ஒரு லட்சத்து இருபது ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே

யார் இவர்கள்?

ஜேன் கோம், உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர். அந்நாட்டின் வறுமை இவரை அமெரிக்காவை நோக்கி துரத்தியது. பதினாறு வயதில் கலிஃபோர்னியா மாகாணத்தின் மவுண்டெயின் வியூ என்கிற இடத்துக்கு வந்து செட்டில் ஆனார். அவரும், அவருடைய அம்மாவும் அரசாங்கம் தரும் இலவச உணவுக்காக மணிக்கணக்கில் கியூவில் நின்றவர்கள். பத்தொன்பது வயசான போது கோமுக்கு என்று சொந்தமாக ஒரு கம்யூட்டர் கிடைத்தது. கூடவே இணைய இணைப்பும். எந்நேரமும் கம்ப்யூட்டரும் கையுமாக உட்கார்ந்திருவர் ‘ஹேக்கிங்’ தொழில்நுட்பங்களில் கில்லாடி ஆனார். உலகெங்குமிருக்கும் பிரபலமான ஹேக்கிங் குழுக்களின் இணைந்து கலக்க ஆரம்பித்தார். பெரிய நிறுவனங்கள் பலவும் ஹேக்கிங் தொடர்பான உதவிகளுக்கு இவரை நாட ஆரம்பித்தார்கள் (ஹேக்கிங் என்பது தீய காரணங்களுக்காக மட்டுமல்ல, சில சமயங்களில் நல்ல விஷயத்துக்கும் தேவைப்படும்).

பின்னர் எர்னஸ்ட் & யங் என்கிற நிறுவனத்துக்கு மென்பொருள் பாதுகாப்பு சோதனைப் பணியாளராக பணிபுரிந்துகொண்டே கல்லூரியில் சேர்ந்து கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தார். அப்போது யாஹூ நிறுவனத்தின் இணை நிறுவனரான டேவிட் ஃபைல் தங்களோடு வந்து இணையுமாறு இவரை நல்ல சம்பளத்துக்கு அழைக்க, கல்லூரியை பாதியிலேயே விட்டு விட்டு ‘யாஹூ’வில் இணைந்தார்.

இன்னொருவரான பிரையன் ஆக்டன் அமெரிக்கர். ஃப்ளோரிடா மாகாணத்தில் வளர்ந்தவர். ஸ்டேண்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டரில் பட்டம் பெற்றவர். ‘ஆப்பிள்’ நிறுவனத்தில் சாஃப்ட்வேர் என்ஜினியராக தன் வாழ்க்கையைத் தொடங்கினார். 1996ல் ‘யாஹூ’ நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.

நட்பு மலர்ந்தது

அப்போது எர்னஸ்ட் & யங் நிறுவனத்தில் மென்பொருள் பாதுகாப்பு சோதனையாளராகப் பணியாற்றிய ஜேன் கோம் அடிக்கடி யாஹூவுக்கு பணி தொடர்பாக வரவேண்டி இருந்தது. கோமுடைய புத்திக்கூர்மையும், நேர்மையும் ஆக்டனை கவர்ந்தது.

சில மாதங்கள் கழித்து கோம், யாஹூவில் இணைந்தார். ஏற்கனவே இருவரும் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த மரியாதை, இணைந்து பணியாற்றிய போது நெருங்கிய நட்பாக மலர்ந்தது. பணி நேரத்திலும் சரி, பணி தாண்டிய நேரங்களிலும் சரி இரட்டையர்களாக ஒன்றாகவே சுற்றிக் கொண்டிருந்தார்கள். 2007ஆம் ஆண்டு இருவரும் ஒன்றாகவே பணியை விட்டார்கள். தென்னமெரிக்காவுக்கு பயணித்தார்கள்.

வாட்ஸப் பிறந்தது

இதுக்கிடையிலே ‘ஃபேஸ்புக்’ பிரபலமாகத் தொடங்கியது. இருவரும் இணைந்து வேலைக்கு விண்ணப்பித்தார்கள். ஆனால், ஏனோ இவர்களை பணிக்கு சேர்த்துக் கொள்ள ஃபேஸ்புக் மறுத்தது. யாஹூவில் சம்பாதித்து சேர்த்த கையிருப்பு இருவரிடமுமே கரையத் தொடங்கியிருந்தது. நொந்து போன நிலையில் ஜனவரி 2009. நண்பர் ஒருவரது வீட்டில் கோம் சினிமா பார்த்துக் கொண்டிருந்தார். ஆக்டனுக்கும் மற்ற நண்பர்களுக்கும் ஏதாவது மெசேஜ் அனுப்பிக் கொண்டே இருந்தார். மொபைல் போனில் இருந்த மெசேஜ் அப்ளிகேஷனுக்கு சில போதாமைகள் இருந்ததாக அவருக்கு பட்டது. ஒவ்வொரு எஸ்.எம்.எஸ்.சுக்கும் காசு செலவழிக்க வேண்டியிருக்கிறது. மெயில் செக் செய்ய பயன்படுத்தும் இண்டர்நெட் கனெக்‌ஷன் மூலமாகவே கூடுதல் காசு செலவில்லாமல் மெசேஜ் அனுப்பக்கூடிய வசதி இருந்தால் நன்றாக இருக்குமே என்று சட்டென ஓர் ஐடியா பளிச்சிட்டது.

ஆக்டனிடம் பேசினார். சில டெவலப்பர்களை கலந்தாலோசித்தார்கள். தான் புதியதாக உருவாக்க இருக்கும் அப்ளிகேஷனுக்கு ‘வாட்ஸ் அப்’ என்று கோம்தான் பெயரிட்டார். பேச்சை நீட்டிக்க அடிக்கடி மெசேஜில் ‘அப்புறம் என்ன?’ (what’s up?) என்று கேட்போம் இல்லையா? அதையே தன் நிறுவனத்துக்கும் பெயராக வைத்து, கலிஃபோர்னியாவில் தன்னுடைய பிறந்தநாளான இதே  பிப்ரவரி 24, 2009 அன்று வாட்ஸப் இன்கார்ப்பரேஷனை ஜேன் கோம் தொடங்கினார்.

பொறுமை தந்த வெற்றி

ஆரம்பத்தில் ‘வாட்ஸ் அப்’ அடிக்கடி சொதப்பியது. பயனாளர்களும் பெரிய ஆதரவு காட்டவில்லை. ஏற்கனவே மொபைல் போன்களில் மெசேஜ் ஆப்ஷன் இருக்க, புதுசாக இன்னொரு கந்தாயம் எதற்கு என்று நினைத்தார்கள்.“இது வேலைக்கு ஆகாது. சம்பளம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை, எங்காவது வேலைக்கு போய்விடப் போகிறேன்” என்று கோம் சொன்னபோது, ஆக்டன் கோபத்துடன் மறுத்தார். “எனக்கென்னவோ இந்த ‘வாட்ஸ் அப்’ எதையோ பெரியதாக சாதிக்கப் போகிறது என்று தோன்றுகிறது. ஒரு சில மாதங்கள் பொறுமையாக இரு” என்றார். நண்பனின் பேச்சுக்கு மறுபேச்சு ஏது? இத்தனைக்கும் அப்போது ஆக்டன் வேலை இல்லாமல் சும்மாதான் இருந்தார். ட்விட்டரில் வேலைக்கு சேர முயன்று, அவர்களும் சேர்த்துக் கொள்ள வில்லை.

ஆக தன்னுடைய வாட்ஸப்புக்கு பெரிய வரவேற்பு இல்லையென்றாலும் (வருமானமும் இல்லை), அதில் இருக்கும் குறைகளை அவ்வப்போது களைந்து கடமையே கண்ணாக அப்டேட் செய்துக் கொண்டிருந்தார் கோம். என்ன மாயமென்று தெரியவில்லை. திடீரென்று ஆப்பிள் பயனாளிகள் ஏகப்பட்ட பேர் வாட்ஸ் அப்பை டவுன்லோடு செய்ய ஆரம்பித்தார்கள். இரவும், பகலுமாக வாட்ஸப்பில் கடலை போட ஆரம்பித்தார்கள். சட்டென்று சில நாட்களிலேயே சுமார் இரண்டரை லட்சம் பேர் வாட்ஸப் பயனாளிகள் ஆனார்கள்.

“நாம பெருசா பண்ணலாம் பாஸ்” என்று ஆக்டனையும் தன்னோடு வாட்ஸப் நிறுவனத்தில் அக்டோபர் 2009 வாக்கில் இணைத்துக் கொண்டார். முன்னாள் யாஹூ நண்பர்கள் சிலரிடம் பேசி ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக முதலீடு திரட்டி பிசினஸை கொஞ்சம் பெருசாக்கினார்கள். ஆப்பிளைத் தொடர்ந்து பிளாக்பெர்ரி போன்களுக்கும் வாட்ஸப் வசதியை நீட்டிக்க, ஆக்டன் முன்பு சொன்னமாதிரி நிஜமாகவே வாட்ஸப் பெரியதாக சாதிக்கத் தொடங்கியது.

இன்று?

கடந்த எட்டே வருடங்களில் வாட்ஸ் அப் அடைந்திருக்கும் வளர்ச்சி யாருமே யூகித்தறிய முடியாதது. பெரிய முதலீட்டு நிறுவனங்கள் பல்லாயிரம் கோடியை இதில் முதலீடு செய்திருக்கின்றன. ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸப்பை எவ்வளவு கோடி ரூபாய் கொடுத்து வாங்கினார்கள் என்பதை மேலேயே சொல்லியிருக்கிறோம்.

நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக ஃபேஸ்புக்குக்கு கைமாற்றி விட்டுவிட்டாலும் இன்னமும் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருப்பவர்கள் ஜேன் கோமும், பிரையன் ஆக்டனும்தான். கோம், வாட்ஸப்பின் மென்பொருள் தரத்தை பார்த்துக் கொள்கிறார். ஆக்டன், பிசினஸ் தொடர்பான விஷயங்களை கவனித்துக் கொள்கிறார். இருவரது உணர்வுப்பூர்வமான நட்புதான் வாட்ஸப்பை இந்த உயரத்துக்கு வளர்த்திருக்கிறது.

வெற்றிக்கு காரணம்?

பொதுவாக இணையத்தள பயன்பாடு என்றாலே எரிச்சலூட்டும் விளம்பரங்கள்தான் பெருந்தொல்லை. நிம்மதியாக ஒரு யூட்யூப் வீடியோவை கூட பார்த்துத் தொலைக்க முடியாமல், அதற்கு முன்பாக ஒரு இருபது நொடி விளம்பரத்தை சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. செய்திகளை வாசிக்கும்போது குறுக்கிடும் விளம்பர அட்டைகளை க்ளோஸ் செய்து, க்ளோஸ் செய்தே சோர்ந்து விடுகிறோம்.

ஆனால் வாட்ஸ் அப் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தன்னுடைய டேபிளில் பிரையன் ஆக்டன் எழுதி வைத்திருக்கும் மந்திரச்சொல்தான் வாட்ஸப்பின் வெற்றிக்குக் காரணம் என்கிறார்கள். அது இதுதான் :

“*No* *Ads*! *No* *Games*! *No* *Gimmicks*!”

நட்பு பரிமாறிக் கொள்ளும் சாளரமான வாட்ஸப்பில் வேறெந்த குறுக்கீடுகளும் எக்காலத்திலும் இருக்கக்கூடாது என்பதில் நண்பர்கள் இருவரும் உறுதியாக இருக்கிறார்கள். நட்பின் அருமையை அவர்களைவிட வேறு யார் அதிகமாக அறிய முடியும்?

தற்போது வாட்ஸப், குழந்தையும் பயன்படுத்தும் வண்ணம் எளிதாக இருக்கிறது. பாதுகாப்பானது. வேகமானது. மற்ற சமூகவலைத்தளங்களைப் போல நேரத்தை விழுங்குவதில்லை. நாமறிந்த நம்முடன் தொடர்பில் இருக்கும் நண்பர்களோடு மட்டும் கருத்துகளை பரிமாறிக் கொள்ளவோ, குறிப்பிட்ட விஷயங்களுக்காக தனிக்குழு அமைத்து விவாதிக்கவோ உதவுகிறது. தகவல் பரிமாற்றம் இன்று இதன் அளவுக்கு எளிமையாகவும், வேகமாகவும் வேறு எந்த வடிவிலும் இல்லை.

ஆனால்-

யாருக்கு தெரியும்? எட்டு ஆண்டுகளுக்கு முன்பு யாராவது வாட்ஸப்பை நூறு கோடி பேர் பயன்படுத்தப் போகிறார்கள் என்று கணித்திருக்க முடியுமா? அதுபோல நாளை வேறொரு அப்ளிகேஷன் வரலாம். அது வாட்ஸப்பை வெற்றிக் கொள்ளவும் செய்யலாம்.

எனினும், அது அவ்வளவு எளிதல்ல. இந்த இரு நண்பர்களை தாண்டி  ஓட விரும்புபவர்கள் இவர்களை விட இரு மடங்கு வேகமாக ஓடவேண்டும்…. என்பதுதான் உண்மை!

அமெரிக்க பாரில் இந்தியர் சுட்டுக்கொலை: நாட்டை விட்டு வெளியேறு என்று சுட்டாராம்

அமெரிக்காவில் இந்திய என்ஜினியர் ஒருவர் மர்மநபரால் சுட்டுக்கொல்லாப்பட்டுள்ளார். பாரில் மது அருந்திக் கொண்டிருந்தபோது எங்கள் நாட்டை விட்டு வெளியேறு என்று கூறியபடி அந்த நபர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

கார்மின் நகரில் விமான போக்கு வரத்து பொறியாளராக பணிபுரிந்து வந்தவர் இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா. 32 வயதான இவர் தனது நண்பர் அலோக் மடசனி என்பவருடன் கன்சாஸ் நகரில் உள்ள பாருக்கு கடந்த புதன் கிழமை சென்றுள்ளார்.

இருவரும் மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த மர்ம நபர் ஒருவர் எங்கள் நாட்டை விட்டு வெளியேறு என்று கூறியப்படி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் ஸ்ரீனிவாச குச்சிபோட்லா மற்றும் அவரது நண்பர் அலோக் ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து இருவரும் மருத்துவமனையில் சேர்க்ப்பட்டனர். இந்நிலையில் ஸ்ரீனிவாஸ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து தப்பியோடிய மர்ம நபரை போலீசார் தேடி வந்தனர். அப்போது கிளின்டன் என்ற பாரில் அவர் மது அருந்தியதும் அங்கிருந்த பார் டென்டரிடம் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த 2 இஸ்லாமியர்களை சுட்டுக்கொன்றதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து பார் டென்டர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் அந்த நபர் ஆஸ்டின் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் அவரது பெயர் ஆடம் புரின்டன் என்பதும் தெரிய வந்துள்ளது. இஸ்லாமியர்கள் என நினைத்து அவர் இந்தியர்கள் 2 பேர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தீபக் திடீர் பேச்சின் பின்னணியில் நடராஜன்

தீபக்கின் திடீர் போர்க்கொடிக்கு பின் நடராஜன் உள்ளார் என செய்திகள் அலையடிக்க தொடங்கியுள்ளன.

சசிகலாவின் ஒப்புதலோடு தான் தீபக் பேசுவதாகவும் கருத்து நிலவுகிறது. ஒபிஎஸ்சை துணை பொது செயலாளராக்குவது தேவைப்பட்டால் முதல்வராக ஒபிஎஸ்சும், துணை முதல்வராக பழனிசாமி  என பல திட்டங்கள் ஆலோசனையில் உள்ளதாம்.

சசிகலாவிடம் நடராஜன் தெளிவாக ஒன்றை சொல்லியுள்ளராம்  "நீ முதல்வராவது நடைமுறையில் நடைபெறாத ஒன்றாகிவிட்டது, கட்சி பதவி மட்டும் போதும் எதற்காக மக்களிடம் கெட்ட பெயர் வாங்க வேண்டும். கட்சி, ஆட்சி இரண்டையும் கட்டுபாட்டில் வைக்க வேண்டுமானால் சில தியாகங்களை செய்து தான் ஆகவேண்டும் அதற்கு சம்மதித்தால் மட்டுமே வெளியில் வரும் போது கட்சி தொண்டர்களின் முழு ஆதரவோடு செயல்பட முடியும்" என்றுள்ளார்.

தீவிர யோசனைக்கு பின் நடராஜனின் யோசனைக்கு சசிகலாவும் சம்மதித்துள்ளார். இனி காட்சிகள் விறுவிறுப்டையும் என இரு தரப்பு அதிமுகவினரும் கூறுகின்றனர்.

புதிய கட்சி அறிவிப்பு வெளியிடுகிறார் தீபா

இன்று (24ம் தேதி) மாலை 5 மணிக்கு கட்சி குறித்த அறிவிப்பு :தீபா

இன்று (24 ம் தேதி) மாலை 5 மணிக்கு கட்சி துவங்குவது குறித்த அனைத்து விபரங்களும் வெளியிடப்படும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று (24 ம் தேதி) பேரவைக்கான புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தீபா:

ஜெயலலிதா செய்த தியாகங்களை பின்பற்றி செயல்பட வேண்டும் எனவும் , புதிய பேரவை, கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும், பெயர், மற்றும் கொடி உள்ளிட்ட அனைத்தும் தயாராகி விட்டாதாகவும், அந்த விபரங்கள் அனைத்தும் இன்று மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இன்று ஆர்.கே., நகரில் நடக்கும் நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ள போவதில்லை எனவும் கூறினார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்ப விவரம்

*ஆசிரியர் தகுதி தேர்வுக்கு மார்ச் 6ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்*

*ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பங்களை மார்ச் 6ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்*

*ஆசிரியர் தகுதி தேர்வுக்கான பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மார்ச் 23ஆம் தேதி கடைசி நாள்*

தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்

நாகை கோடியக்கரை அருகே பாம்பன் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்கள் மற்றும் மீன்பிடி சாதனங்களை எடுத்து சென்றதாகவும் புகார் கூறியுள்ளனர்.*

அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக் கொலை

கான்சாஸ் நகரில் உள்ள ஒரு மதுபானக் கடையில் சம்பவம். அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு மர்ம நபர் இந்தியரைச் சுட்டுக் கொன்று விட்டு தப்பியோடி விட்டார். "எங்கள் நாட்டை விட்டு வெளியே போ" என்று கூறிக் கொண்டே சுட்டாராம் அந்த நபர்