Home Blog Page 5675

குங்குமம் செய்ய காஞ்சி பெரியவர் கொடுத்த குறிப்பு

குங்குமம் எப்படிச் செய்வது என்பதற்கு ஒருமுறை காஞ்சி பெரியவர்களே கொடுத்த குறிப்பு:

1. முப்பது தோலா கெட்டியான உருண்டை மஞ்சள் எடுத்துச் சிறு துண்டங்களாக நறுக்கிக் கொள்க.

2. இதற்கு ஸம எடை எலுமிச்சம் பழச்சாறு விதையில்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்க. மஞ்சள் முதலியன கடையில் தோலாக் கணக்கில் எடைபோட்டு வாங்குவதுபோல், எலுமிச்சஞ் சாற்றுக்கு வீட்டில் எடை பார்ப்பது முடியாது. அதனால் முகத்தல் அளவையில் வீட்டில் இருக்கக்கூடிய அவுன்ஸ் க்ளாஸில் அளந்து போடுகிற விதத்தில் சொன்னால், பதினாறு அவுன்ஸ் எலுமிச்சம் பழச்சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

3. இந்தப் பழச்சாற்றில் நன்றாகப் பொடித்த வெங்காரமும் படிக்காரமும் ஒவ்வொன்றும் மூன்று தோலா போட்டுக் கரைக்கவும்.

4. மஞ்சள் துண்டங்களை இதில் போட்டுக் கலக்கிக் கொள்ளவும். வாயகன்ற, ஈயம் பூசிய பாத்திரத்தில் வைப்பது உத்தமம்.

5. இதை ஒருநாளில் மூன்று தடவை நன்றாகக் கிளறவும். பழச்சாறு மஞ்சளில் சேர்ந்து சுண்டியபிறகு நிழலிலேயே நன்றாகக் காய வைக்கவும்.

6. அப்பறம் உரலில் இடித்து வஸ்திராயணம் செய்யவும். (மெல்லிய துணியில் பொடி.யை வடிக்கட்டுவதே வஸ்திராயணம் அல்லது வஸ்திரகாயம்.)

7. இப்படி விழுகிற சுத்தமான மஞ்சட் குங்குமத்தை வாயகன்ற ஜாடியில் பத்திரப்படுத்தவும்.

8. குங்குமத்தில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி (tea-spoon) சுத்த பசு நெய்விட்டு, கட்டி தட்டாமல், நன்றாகக் கலக்கச் செய்து வைத்தால் காப்பும் ( preservative) ஆகும்;புனிதமும் ஆகும். சுத்தமான பசுநெய் கிடைத்தால் மட்டுமே சேர்க்கவும். சரக்கைப்பற்றிக் கொஞ்சம் ஸந்தேஹமிருந்தால்கூட நெய்யே சேர்க்காவிட்டாலும் பாதகமில்லை.

https://www.kamakoti.org/tamil/3dKK51.htm

திருமயத்தில் தீரர் சத்யமூர்த்தி சிலை திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தீரர் சத்தியமூர்த்தி சிலையை குமரிஅனந்தன் திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தீரர் சத்தியமூர்த்தி நினைவு மணிமண்டபம் ரூ 3லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா சுப்பையா தலைமையில் நடைபெற்றது.

விழாவிற்கு தீரர் சத்தியமூர்த்தி பேரன் சீனிவாசமூர்த்தி முன்னிலை வகித்தார். மணிமண்டபத்தை அழகுதேவர் அறக்கட்டளை சிந்தாமணிஅம்மாள் திறந்து வைத்தார்.

மணிமண்டபம் உள்ளே அமைக்கப்பட்டுள்ள தீரர் சத்தியமூர்த்தி சிலையை மாநில காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் இலக்கிய செல்வர் குமரிஅனந்தன் திறந்து வைத்தார். மணிமண்டப கல்வெட்டை திருமயம் சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி திறந்து வைத்தார்.

தீரர் சத்தியமூர்த்தி வாழ்க்கை வரலாறு பதாகையை முன்னாள் எம்.எல்.ஏ சுப்புராம் திறந்து வைத்தார். விழாவில் பேசிய மாநில காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் இலக்கிய செல்வர் குமரிஅனந்தன் 1936-ல் மாநில காங்கிரஸ் தலைவராக தீரர் சத்தியமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டனர். செயலாளராக காமராஜர் தேர்ந்தெடுக்கபடட்டார். தனது குருவான தீரர் சத்தியமூர்த்தி நினைவாக காமராஜர் சச்தியமூர்த்தி பவனை கட்டினார்.

அதை நான் (குமரிஅனந்தன்) மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கும் பொமுது 1996ம் ஆண்டு மூப்பனார் கைப்பற்றினார். எனது குருவான காமராஜர் கட்டி சத்தியமூர்த்தி பவனை நான் மூப்பனரோடு கைகோர்ந்து மீட்டெடுத்தேன்.

திருமயம் ஊராட்சி மன்ற அலுவலகம் , பள்ளிகளில் தீரர் சத்தியமூர்த்தி திரு உருவபடம் வைக்கவேண்டும். அப்போது தான் இளம் வயது குழந்தைகளுக்கு நம் ஊரில் பிறந்த தீரர் சத்தியமூர்த்தி பற்றி தெரிந்து கொள்வார்கள்.

தனிமனிதனாக இருந்து இந்த மணிமண்டபத்தை கட்டிய அழகு தேவர் சத்திவேல் குடும்பத்தினரை மனதார பாராட்டுகிறேன் இவ்வாறு இலக்கிய செல்வர் குமரிஅனந்தன் பேசினர்.

விழாவில் தீரர்சத்தியமூர்த்தி மணிமண்டபம் கட்ட உதவியாக இருந்த புலவர் முத்து வெங்கடேசன் உள்ளிட்ட பலருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

விழாவில் நாட்டின் விடுதலை போராட்டத்திற்காக 10 அயிரம் பவுன் தங்கம், 1000 ஏக்கா; நிலத்தை சுபாஸ் சந்திரபோஸ்யிடம் வழங்கிய ஹமீதுஹன்சா குடும்பத்தினருக்கு பொற்கிழி மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

விழாவில் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ராமசாமி, முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன், தே.மு.தி.க. மாநில துணை செயலாளர் என். ஜாகீர் உசேன் முன்னாள் எம்.எல்ஏக்கள் சுவாமிநாதன், கவிதைப்பித்தன், புஸ்பராஜ், காங்கிரஸ் பொதுச்செயலாளர் சந்திரசேகரன் திமுக ஒன்றிய செயலாளர் எம்.பி.சரவணன் தேமுதிக ஒன்றிய செயலாளர் பட்டணம் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அழகு தேவர்சத்திவேல் வருகை தந்த அனைத்து விருந்தினருக்கும் நினைவு பரிசு வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

செய்தி : ஜெயசந்திரன், புதுக்கோட்டை

எஸ்பிஐ -யின் துணை வங்கிகள் ஏப். 1 முதல் எஸ்பிஐ உடன் இணைப்பு

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் 5 துணை வங்கிகள் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உடன் இணைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஒப்புதலை கடந்த பிப்ரவரி 16ம் தேதி நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் ஆகிய 5 துணை வங்கிகளும் வரும் ஏப்ரல் 1ம் தேதி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உடன் இணைக்கப்படுகிறது.*

ஜனாதிபதியை சந்தித்தார் ஸ்டாலின்!

தமிழக சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வு குறித்தான தனது குற்றசாட்டை இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட  கோரிக்கை விடுத்தார் என திமுக வட்டாரங்கள் செய்தி!.

அவர் மேலும் நாளை காலை காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தியை சந்திக்க உள்ளார் என திமுக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

*செய்திக்கதிர்*

தினகரனுக்கு தீபக் திடீர் எதிர்ப்பு: அதிமுக.,வில் ஏற்படும் மாற்றங்கள்

சென்னை:
அதிமுக உடையாமல், ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்று கூறியுள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஓபிஎஸ்க்கு திடீரென ஆதரவு கொடுத்துள்ளார். 
ஓபிஎஸ்.,க்கு ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் திடீர் ஆதரவு கொடுத்துள்ளார். அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், 
”சசிகலாவை மதிக்கிறேன். அதிமுக உடையாமல் இருக்க விரும்புகிறேன். எடப்பாடியோ, பன்னீர் செல்வமோ யாராயிருந்தாலும், முதல்வர் பதவி எங்களுக்கு பிரச்சினையில்லை. ஆனால் தினகரன் அந்தப் பதவிக்கு தகுதியில்லாதவர். 
அதிமுகவிற்கு தலைமை ஏற்க ஓபிஎஸ் முன்வரவேண்டும். அடிமட்ட தொண்டர்கள் யாரும் தினகரனை ஏற்க மாட்டார்கள்.
 தினகரன் தலைமையை ஏற்கமாட்டோம் என்று தீபக் திடீரென போர்க்கொடி உயர்த்தியுள்ளார். 
முன்னதாக,  அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது,  அதிமுகவில் குடும்ப ஆதிக்கம் என்றும் இல்லை 
என்றும், அதிமுகவில் இருந்து திரும்பிச் சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள் ; ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்ற திமுகவின் கனவு தோல்வியடைந்தது
; என்றுமே  திமுகதான் பிரதான எதிரி என்று தெரிவித்திருந்தார். 

நெல்லையில் போராட்டம் நடத்திய பத்திரிகையாளர்கள் கைது

நெல்லை:
நெல்லை போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மதுரையில் செய்தியாளர் சந்திரன் தாக்கப்பட்டதை கண்டித்தும் , நெல்லை செய்தியாளர்கள் மதுரையில் தாக்கப்பட்டதை கண்டித்தும் ,, பறித்த காமிராவை திரும்ப கொடுக்க கோரியும் நெல்லை DIG அலுவலகம் முற்றுகை செய்யப்பட்டது. தமிழகத்தில் தொடர்ந்து செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப் படுவதில் காவல்துறையை கண்டித்து நெல்லை மாவட்ட பத்திரிக்கையாளர் மன்றம் சார்பில் செய்தியாளர்கள் ஒன்றிணைந்து நெல்லை சரக காவல்துறை துணை தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்தப் போராட்டத்தை நடத்தினர். இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

போராட்டம் தொடரும் என பத்திரிகையாளர்கள் அறிவித்துள்ளனர்.

கிரிஜா வைத்யநாதன் மாற்றப்படுவார்?

சென்னை:
தலைமைச் செயலராக இருக்கும் கிரிஜா வைத்யநாதன் விரைவில் மாற்றப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சசிகலா அதிமுக., பொதுச் செயலர் ஆனார், முதல்வர் பதவிக்கு முயன்றார். ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பினால், நான்கு வருட சிறைத் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளார்.

அதற்கு முன்னதாக அவர் தன் சகோதரர் தினகரனை அதிமுக.,வின் துணைப் பொதுச் செயலராக நியமித்தார்.

இந்நிலையில், அதிமுக துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் இன்று பொறுப்பெற்றார்.

இதனிடையே பெங்களூர் சிறைக்குச் சென்று சசிகலாவை சந்தித்த தினகரன், பெரிய பட்டியலுடன் அவரை சந்தித்தார். அதில், ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் அதிகாரிகள் பணி மாற்ற பட்டியலும் அடங்கும். இவ்வாறு சிறையில் இருக்கும் ஒரு குற்றவாளியிடம் தமிழக அரசின் முக்கியமான முடிவுகள், அரசாங்க ரகசியங்கள் காண்பிக்கப்பட்டு, அவர் ஒப்புதலுடன் தமிழகத்தில் ஆட்சி நடக்கும் நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அந்தப் பட்டியலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அளித்தார் தினகரன்.

அந்தப் பட்டியலில், முதல் பெயரே கிரிஜா வைத்யநாதனின் பணியிட மாற்றம்தான் இருந்ததாம். ஆனால், தற்போது, கட்சிக்கும் ஆட்சிக்கும் மக்கள் மத்தியில் கெட்ட பெயரும் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளதால், இதனைச் சரிசெய்ய பெரும் கால அவகாசம் தேவைப்படுகிறது என்றும், உடனே இதைச் செய்தால் மேலும் அவப் பெயர் ஏற்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தயங்கினாராம்.

இருப்பினும், மன்னார்குடி குடும்ப உறவுகளின் நெருக்கடிக்கும் சசிகலாவின் கட்டளைக்கும் அடிபணிந்து போக வேண்டிய நிலையில் முதல்வர் இருப்பதால், விரைவில் அடுத்த அதிரடியாக

தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மாற்றப்படுவார் என்றும், நிதித்துறை செயலர் சண்முகத்துக்கு அந்த வாய்ப்பு வரும் என்றும் தலைமைச் செயலக வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

2ஜி நெட்வொர்க்கிலும் இயங்கும் ஸ்கைப் லைட் செயலி அறிமுகம்!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா இந்தியாவில் ஸ்கைப் லைட் செயலியை அறிமுகம் செய்துள்ளார்.

இந்த செயலி குறைந்த இண்டர்நெட் வேகத்திலும் சீராக இயங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
2ஜி கனெக்ஷன் பயன்படுத்துவோரும் வீடியோ கால், குறுந்தகவல், ஆடியோ கால் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும்.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கென கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் ஸ்கைப் லைட் செயலியை டவுன்லோடு செய்ய முடியும்.

13 எம்பி அளவு கொண்ட ஸ்கைப் லைட் செயலி மற்ற எஸ்எம்எஸ் மற்றும் கான்வெர்சேஷன்களை ஒரே டேபில் இயக்க முடியும்.

இது தவிர டயலர், காண்டாக்ட் மற்றும் பாட் உள்ளிட்ட டேப்களும் இருக்கின்றன.
செயலியை டவுன்லோடு செய்ததும் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் அல்லது ஸ்கைப் ஐடி மூலம் செயலியை பயன்படுத்த துவங்கலாம்.

ஏற்கனவே வாட்ஸ்அப், ஹைக் உள்ளிட்ட செயலிகள் பெரும்பலான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

இந்நிலையில் புதிய ஸ்கைப் லைட் பதிப்பு 2ஜி கனெக்ஷனிலும் சீராக இயங்கும் என்பதால் இந்தியாவில் இந்த செயலி நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் பிரதிநிதிகளை திருப்பி அழைக்கும் சட்டம் குறித்து பொது விவாதம் தேவை : ராமதாஸ்

சென்னை:

மக்கள் பிரதிநிதிகளை திருப்பி அழைக்கும் சட்டம் குறித்து பொது விவாதம் தேவை என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் நிலவும் இன்றைய அரசியல் சூழலைப் பார்க்கும் போது, இனிவரும் காலங்களிலாவது இத்தகைய நிலைமை ஏற்படாமல் தடுக்க தேவையான சட்டத் திருத்தங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. தேவைகள் தான் புதிய கண்டுபிடிப்புகளுக்கு தூண்டுகோல்களாக இருக்கின்றன என்பதை உணர்ந்து, இன்றைய சூழலைத் தேவையாகக் கருதி, ஆரோக்கிய அரசியலுக்கான தீர்வுகளை ஆராய வேண்டும்.

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக சசிகலாவை அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்வு செய்ததைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் ஏற்பட்ட கொந்தளிப்பும், அதை பிரதிபலிக்கும் வகையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு பிரிவினர் பிரிந்து சென்றதும் அனைவரும் அறிந்த ஒன்று தான். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட, அவருக்கு பதில் எடப்பாடி பழனிச்சாமி புதிய முதலமைச்சராக பதவியேற்றிருக்கிறார். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக அவர்கள் நடத்திய ஜனநாயகப் படுகொலைகள் கண்டிக்கத்தக்கவை. சட்டப்பேரவை உறுப்பினர்கள் அணி மாறி விடுவார்களோ என்ற அச்சத்தில், அவர்கள் 11 நாட்கள் கூவத்தூரில் தனியார் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அங்கிருந்து அவர்கள் அமைச்சர்களின் மகிழுந்தில் அடைத்து சட்டப்பேரவைக்கு அழைத்து வரப்பட்டு வாக்களிக்கச் செய்யப்பட்டனர். பொதுமக்களின் மனநிலை மற்றும் எதிர்பார்ப்புக்கு மாறாக நடந்து கொண்டதால் அவர்களால் தொகுதிகளுக்குள் நுழைய முடியாத நிலை நிலவுகிறது.

பல இடங்களில் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன. சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்கள் தாக்கப்பட்டிருக்கின்றன. தங்களின் உணர்வுகளை மதிக்காத சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேவையில்லை என்றும், அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். மற்றொருபுறம், மக்களின் பிரச்சினைகளுக்காக சட்டப்பேரவையில் குரல் கொடுக்க வேண்டிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அவையில் நடந்து கொண்ட விதம் முகம் சுழிக்க வைக்கிறது. இப்போது கூட தமிழகத்தின் உயிர்நாடி பிரச்சினைகள் ஏராளமாக இருக்கும் நிலையில், அவற்றுக்காக போராடாமல், பேரவை செயல்பாடுகளால் தங்களுக்கு ஏற்பட்ட அவப்பெயரைப் போக்கும் நோக்குடன் நடத்தும் போராட்டங்களை தமிழக மக்கள் ஏற்கவில்லை.

சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களின் போது, ஏற்கனவே இருந்தவர்களை பிடிக்காததாலும், வேறு காரணங்களாலும் மோசமானவர்களுக்கு வாக்களித்து தேர்ந்தெடுக்கும் மக்கள், அடுத்த சில மாதங்களில் அவர்களின் உண்மை உருவம் தெரியவரும் போது ஏமாற்றமடைகின்றனர்; வருந்துகின்றனர். ஆனாலும், வாக்களித்து தேர்ந்தெடுத்தவர்களை அடுத்த 5 ஆண்டுகளுக்கு மாற்ற முடியாது என்பதால், பிடிக்காவிட்டாலும் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. மக்கள் பிரதிநிதிகளை மாற்றும் வசதி இருக்கக்கூடாதா? என அவர்கள் ஏங்குகின்றனர். இத்தகைய தருணங்களில் தான் செயல்படாத மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமையை வழங்கும் உரிமை முக்கியத்துவம் பெறுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்ப்பேரவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் சரியாக செயல்படாத போது, அவர்களுக்கு வாக்களித்த மக்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாக்காளர்கள் மனு செய்தால், சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை திரும்பப் பெறுவது குறித்து தேர்தல் ஆணையம் வாக்கெடுப்பு நடத்தும். அதில் அதிக எண்ணிக்கையிலானோர் சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வாக்களித்தால் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள். பிலிப்பைன்ஸ், வெனிசூலா உள்ளிட்ட சில நாடுகளிலும், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் சில மாநிலங்களிலும் இந்த முறை செயல்பாட்டில் உள்ளது. இதைப் பயன்படுத்தி தவறு செய்த மக்கள் பிரதிநிதிகள் திரும்ப அழைக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்தியாவில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், பிகார் ஆகிய மாநிலங்களில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளை திரும்ப அழைத்துக் கொள்ளும் சட்டம் நடைமுறையில் உள்ளது. இதை மக்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுவதும், பின்னர் அடங்குவதும் கடந்த காலங்களில் நடந்திருந்திருக்கின்றன. மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைத்துக் கொள்ளும் வகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திலும் திருத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்ட போதெல்லாம், அதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமல்ல என்று கூறி மத்திய அரசு நிராகரித்திருக்கிறது. பொதுவாழ்க்கையில் நேர்மை குறைந்ததற்கு இதுவும் காரணமாகும்.

மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமை நடைமுறைக்கு வந்தால், தவறு செய்யும் பிரதிநிதிகள் பதவி நீக்கம் செய்யப்படுவர் என்பது ஒருபுறமிருக்க, இப்படி ஒரு சட்டம் இருந்தால் தவறு செய்யவே மக்கள் பிரதிநிதிகள் அஞ்சுவார்கள் என்பது தான் இதன் சிறப்பு ஆகும். இப்படி ஒரு நடைமுறையை கொண்டு வருவதிலும், செயல்படுத்துவதிலும் பல சிக்கல்கள் உள்ளன என்பதையும், தேர்தல் ஆணையத்திற்கு பணிச்சுமை அதிகரிக்கும் என்பதையும் மறுக்க முடியாது. ஆனால், தேர்தல் நடைமுறையில் ஏராளமான சீர்திருத்தங்களை கொண்டு வந்த இந்திய தேர்தல் ஆணையத்தால் இது சாத்தியம் தான். அதுமட்டுமின்றி, இந்திய ஜனநாயகத்தைக் காப்பதற்காக சிரமங்களை பொருட்படுத்தாமல் சில நடவடிக்கைகளை எடுத்து தான் தீர வேண்டும். மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைத்துக் கொள்ளும் சட்டத்தை உடனடியாக வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றுவது சாத்தியமில்லை என்ற போதிலும், குறைந்தபட்சம் அதுகுறித்த பொது விவாதத்தையாவது தொடங்க வேண்டும். அப்போது தான் அடுத்த சில ஆண்டுகளிலாவது இந்த அற்புத யோசனை சட்டம் ஆகும்.

தவறு செய்யும் மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைத்தல்

இந்தியாவில் முதன் முதலாக, தவறு செய்யும் மக்கள் பிரதிநிதிகளான, எம்.பி., எம்.எல்.ஏ., உள்ளாட்சி பிரதிநிதிகளை திரும்ப அழைக்க குரல் கொடுத்தவர் லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயண். இன்றைக்கு சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற சில நாடுகளில் தவறு செய்யும் மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் முறை வாக்காளர்களுக்கு உள்ளது.

பிரிட்டனில் மக்களுக்கு திருப்தி அளிக்காத, தவறு செய்யும் பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் மசோதா பிரிட்டன் பாராளுமன்றத்தில் வரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது பாராட்டத்தக்கது. தவறு செய்யும் மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைப்பது குறித்து, 1993 தினமணியில் நான் எழுதி வெளிவந்த கட்டுரை, எனது உரிமைக்குக்கு குரல் கொடுப்போம் நூலில் உள்ளது.

அது இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது :

#தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் அறிக்கையின் மூலம் மக்களுக்கு பல உறுதி மொழிகளை அளிக்கின்றன. இப்படிப்பட்ட பிரகடனங்கள் மக்களுக்கு நல்ல திட்டங்களை நிச்சயம் வகுக்கும் என்ற உறுதியைத் தருவதாகும். நாட்டில் நிலவும் பொருளாதார, அரசியல், சமூகச் சூழ்நிலைகளின் காரணமாக தேர்தல், அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் செயல்படுத்துவது நடைமுறையில் சற்று கடினம்தான். தாங்கள் அளித்த வாக்குறுதிகளைக் கிட்டத்தட்ட 80 சதவீதம் தங்கள் ஆட்சியின் காலத்தில் நடைமுறைப்படுத்தி, மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளைச் செய்வது அரசியல் கட்சிகளின் ஜனநாயக கடமையாகும். அவ்வாறு தேர்தல் காலத்தில் தாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையென்றால், தங்களுக்கு வாக்களித்த மக்களை ஏமாற்றுவதற்குச் சமமாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள், மக்களின் திருப்திக்கு மாறாகவும் தாங்கள் அளித்த வாக்குறுதிகளைச் செயல்படுத்தாமல் இருந்தால், ஆட்சியிலிருந்து திரும்ப அழைக்கும் (Right to Recall) உரிமை மக்களுக்குத் தரப்பட வேண்டும். ஒரு நாட்டின் இறையாண்மை அந்த நாட்டின் மக்களே ஆவார்கள். மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பது வெறும் மேடை முழக்கமாக மட்டும் இருக்கக் கூடாது.ksradhakrishnan - 2026

திரும்ப அழைத்தல் என்ற முறை ஜோன்ஸ் ஙண் ஹாரியான் (Tex Ch. App. 109 SW – 21 – 251,254 Black Law Dictionary 1989 Edition, Jones Vs Harian) என்ற வழக்கிலிருந்து உருவகப்படுத்தப்பட்டது. ஆட்சியாளர்கள், தவறாக அதிகாரத்தைப் பயன்படுத்துதல், இலஞ்சம் வாங்குவது, உறவினர்களுக்குச் சலுகைகள் (Nepotism) போன்ற ஜனநாயக விரோதச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் திரும்ப அழைத்தல் கோட்பாடு ஒரு ஜனநாயக நாட்டில் செயல்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

இந்தியாவில் லோக்பால் என்ற மசோதா, ஆட்சியாளர்கள் தவறு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில், முதன் முதலில் திரும்ப அழைத்தல் என்ற கோட்பாட்டுக்கு குரல் கொடுத்தவர் லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன்தான்.

எடுத்துக்காட்டிற்கு சொல்ல வேண்டுமானால், காவிரிப் பிரச்சினையில் காவிரி விசாரணை தீர்ப்பாணை இடைக்கால நிவாரணமாக கர்நாடக அரசை தமிழகத்திற்கு தண்ணீர் விடக் கோரியும், கர்நாடக அரசு சற்றும் சிந்திக்காமல் மௌம் சாதிக்கிறது. இதனை எதிர்த்து தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

காவிரிப் பிரச்சினையில் காவிரி தீர்ப்பாணயம், இடைக்கால நிவாரணம் அளிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இப்படிப்பட்ட சாதகமான தீர்ப்பு இருந்தும், தமிழக அரசு அதை சற்றும் சிற்திக்காமல் இருந்தது. தற்பொழுது, முதலமைச்சர் காலங்கடந்து உண்ணாவிரதம் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யத் தவறினால்கூட ஆட்சியாளர்களைத் திரும்ப அழைக்கும் முறை ஜனநாயகத்தில் கொண்டு வரப்பட வேண்டும்.
இதேபோல மத்திய அரசு கொள்கையளவில் ஏற்றுகொள்ளப்பட்ட சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றாமல் இருந்து வருகிறது.

மத்திய அரசு இந்தத் திட்டத்திற்கு பல குழுக்களை அமைத்தும், இந்தக் குழுக்களின் அறிக்கையினை மத்திய அமைச்சரவை ஏற்றுக் கொண்ட பொழுதும், மத்திய அரசு இந்தத் திட்டத்தைப் பல ஆண்டுகளாகக் கிடப்பில் போட்டுள்ளது. இது தமிழகத்தை வஞ்சிக்கும் செயல் ஆகும். இப்படிப்பட்ட செயலுக்குக் கூட, மத்திய அரசு, பாதிக்கப்பட்ட மக்களால் திரும்ப அழைக்கும் உரிமையை ஒரு கொள்கையளவில் செயல்படுத்தலாம்.

இதுமட்டுமன்று, ஒரு குறிப்பிட்ட தொகுதி நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர் பணி, நடவடிக்கைகள் தொகுதி மக்களுக்கு திருப்தி அளிக்காமலிருந்தால் அவரை திரும்ப அழைக்கும் உரிமையை, அக்குறிப்பிட்ட தொகுதி மக்களுக்கு வழங்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்று ஐந்து வருட காலம் ஜனநாயக விதிமுறைகளுக்கு மாறாக, தான்தோன்றித்தனமாக ஆள முற்படுபவர்களுக்கு திரும்ப அழைக்கும் முறை ஒரு வாய்ப்பாக Checks and Balances இருக்கும்.

அமெரிக்கா உள்ளாட்சி அமைப்பில், ஸ்விட்சர்லாந்து, கனடா, உக்ரைன்,வெனிஸுல போன்ற பல நாடுகள் திரும்ப அழைக்கும்
முறை உள்ளது
சோவியத் அரசியல் சட்டத்தில் (1936) அரசியல் சாசனப் பிரிவு 106இல் இந்தக் கொள்கைத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது, தாங்கள் ஆற்ற வேண்டிய பணிகளையும், தங்களுடைய அரசியல் தன்மையையும், தங்களுடைய தொகுதி மக்களுக்கு, கண்காணிக்க உரிமையுள்ளது என கூறப்பட்டுள்ளது. அவ்வாறு தவறினால், தங்களை திரும்ப அழைக்கும் உரிமை தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு உண்டு என்று கூறப்பட்டுள்ளது. சோவியத் நாட்டில் இவ்வாறு மக்கள் பணியில் தவறிய உறுப்பினர்கள் பல சமயங்களில் திரும்ப அழைக்கப்பட்டுள்ளதாக நீதிபதி கிருஷ்ணய்யர் கூறியுள்ளார். இந்தக் கொள்கை பாராட்டுக்குரிய தன்மை கொண்டுள்ளதாகும். ஆனால், இன்றைக்கு சோவியத் நாடு சிதறுண்டு இருக்கிறது என்பது வேறு விவகாரம்.

திரும்ப அழைக்கும் செயல்முறையை நம் தேர்தல் கமிஷன் ஆராய வேண்டும். சட்டமன்ற உறுப்பினரோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினரோ ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு மாறிவிட்டால், தன்னுடைய பதவியை இழக்கிறார். அதேபோல தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி மக்களுக்குப் பணியாற்றத் தவறினால், தங்களுடைய பதவியை இழக்கக் கூடிய தன்மையை, நம் இந்திய அரசியல் சட்டத்தில் கொண்டு வரவேண்டும்.

திரும்ப அழைக்கும் முறையைக் கொண்டு வருவதில் நடைமுறைச் சிக்கல்கள் இருந்தாலும், அதை நடைமுறைப்படுத்த வேண்டிய வழி முறைகளை பல்வேறு தரப்பினர்களை அணுகி, ஆலோசனைகளைப் பெற்று, இந்தக் கோட்பாட்டை நெறிப்படுத்தி செயல்முறைக்கு கொண்டு வரலாம். சமீபத்தில் நீதித் துறையிலும் ஊழலென்று தினமும் தினசரிகளில் செய்திகள் வந்த வண்ணமிருக்கின்றன. நீதி, நிர்வாக, ஆட்சி மன்றங்களில் பங்கேற்கும், மக்களின் பல்வேறு பிரதிநிதிகள், அஞ்சித் தங்களுடைய ஜனநாயகப் பணிகளைச் செவ்வனே செய்ய ஒழுங்குப்படுத்துவதே திரும்ப அழைத்தல் கோட்பாடாகும். இதனால் அரசியலிலும், பொது வாழ்விலும் தூய்மை ஏற்படும்.

திரும்ப அழைக்கும் கொள்கை, நடைமுறைக்கு வந்தால் நாடாளுமன்ற ஜனநாயகம் தூய்மை பெறும். மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை மக்களின் பிரதிநிதிகள் செம்மையாக ஆற்றுவர். ஆனால், இந்தக் கொள்கையை எந்த அரசியல் கட்சியும் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுமா என்று இதுவரை பிரகடனப்படுத்தவில்லை என்பது வருத்தத்திற்குரியதாகும்.
#திரும்பஅழைக்கும்முறை
#RighttoRecall
#ksrpost
#ksradhakrishnanpost
கட்டுரை: – வழக்குரைஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்
23.02.2017