Home Blog Page 5676

டிராபிக் ராமசாமி வழக்கு பிப்.27க்கு ஒத்திவைப்பு

*சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான டிராபிக் ராமசாமியின் வழக்கு பிப்.27க்கு ஒத்திவைப்பு: சென்னை உயர்நீதிமன்றம்*
*நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான டிராபிக் ராமசாமியின் வழக்கு மு.க.ஸ்டாலின் மனுவுடன் சேர்த்து விசாரிக்கப்படும்:சென்னை உயர்நீதிமன்றம்*

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை எடப்பாடி சந்திக்க தடை ஏன்? பரபரப்பு தகவல்கள்

சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க தமிழக  அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ., எம்.பிகளுக்கு அனுமதி வழங்கும்படி கர்நாடக  மாநில சிறைத்துறை டி.ஜி.பி. சத்யநாராயணராவுக்கு தமிழக போலீஸ் டி.ஜி.பி.  கடிதம் எழுதியுள்ளதாகவும், அதற்கு அவர் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில்,  ‘‘தண்டனை கைதிகளை மக்கள் பிரதிநிதிகள் சந்தித்து பேசுவது என்ன நியாயம்?  ரத்த சம்பந்த உறவினர்கள், வக்கீல்கள் வேண்டுமானால் வாரத்தி–்ற்கு ஓரிரு  நாட்கள் அனுமதிக்கலாம். மக்கள் பிரதிநிதிகளை எப்படி அனுமதிக்க முடியும்?  இதற்கு சாத்தியமில்லை’’ என்று பதில் கடிதம் எழுதியுள்ளதாக சிறைத்துறை  வட்டாரம் மூலம் தெரியவருகிறது.

மோடியை இன்று சந்திக்க நேரம் கேட்டுள்ளார் ஸ்டாலின்

குடியரசு தலைவரை சந்திக்க, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார்.

அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த சம்பவங்கள் குறித்து ஜனாதிபதியிடம் நேரில் முறையீடு செய்யும் அவர் பிரதமரையும் சந்திக்க நேரம் கேட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர் மட்டம்

நெல்லை மாவட்ட  அணைகளின் நீர் மட்டம் .    (23-02-2017)
*பாபநாசம் :* 
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 53.70 அடி
நீர் வரத்து : 70.72 கன அடி
வெளியேற்றம் : 104.75 கனஅடி .                                      
*சேர்வலாறு :*
உச்ச நீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 72.18 அடி .
*மணிமுத்தாறு :* 
உச்ச நீர்மட்டம் : 118 அடி
நீர் இருப்பு : 49.22 அடி 
நீர் வரத்து : 110 கன  அடி
வெளியேற்றம் : 125 கன அடி .

இலங்கை நீதிமன்றத்தில் தமிழ் நீதிபதி: ராஜபக்சே எதிர்ப்பு

இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதியாக ராமநாதன் கண்ணன் என்பவர் நியமிக்கப்பட்டார். இதற்கு முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் நீதிமன்ற சுதந்தரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ராஜபக்சே குற்றம் சாட்டியுள்ளார்

சென்னையில் மின்சார ரயிலில் பயணித்த இரு இளைஞர்கள் பலி

சென்னை: ரயிலிலிருந்து தவறி விழுந்த 2 பேர் பலி
பரங்கிமலை ரயில் நிலையத்தில் இன்று காலை இவ்விபத்து ஏற்பட்டது. ரயிலில் தொங்கியபடி பயணித்த 5 இளைஞர்கள் திடீரென தவறி விழுந்தனர். இவர்களில் 2 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படுகாயமடைந்த 3 இளைஞர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
*

உ.பி.யில் 53 தொகுதிகளுக்கான 4ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

உத்திரபிரதேசத்தில் இன்று 53 தொகுதிகளுக்கான 4ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும். 403 தொகுதிகளை கொண்ட உத்திரபிரதேச மாநில சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் 3 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் 4ம் கட்டமாக 12 மாநிலங்களில் உள்ள 53 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 
4ம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் 53 தொகுதிகளிலும் தேர்தல் ஆணையம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. உ.பி-யில் பாஜகவும், பகுஜன் சமாஜ் கட்சியும் தனித் தனியாக களமிறங்கியுள்ளன. அதே சமயம் ஆளும் சமாஜ்வாடி கட்சி காங்கிரஸூடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. உத்திரபிரதேசத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்று மார்ச் 11ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்போது தெரிந்துவிடும்.

முதல்வராகும் காய் நகர்த்தலில் டிடிவி.தினகரன்

எடப்பாடி பழனிச்சாமிக்கும் சசிகலாவுக்கும் மனக்கசப்பு தொடங்கிவிட்டதாக கோட்டை வட்டாரங்கள் பேசத் தொடங்கியுள்ளன. கடந்த திங்கட்கிழமை சசிகலாவை பெங்களூரு சிறைக்கு சென்று பார்த்த அதிமுக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன், கூடவே ஒரு பட்டியலையும் காட்டி ஒப்புதல் வாங்கியுள்ளார். தமிழகத்தில் உயர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் பற்றிய பட்டியல் தான் அது… 
இதை எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பி வைத்துள்ளனர். பட்டியலை படித்து பார்த்த பழனிச்சாமி அப்படியே தூக்கி ஓரமாக வைத்துவிட்டாராம். காரணம், இடமாற்ற பட்டியலில் முதல் பெயராக இருந்தது தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் பெயர். கடந்த டிசம்பரில் தான் கிரிஜா தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றார். யாருக்கும் வளைந்து கொடுக்காதவர் என்று பெயரெடுத்தவர். கிரிஜாவுக்கு பதிலாக பரிந்துரைக்கப்பட்டவர் தற்போதைய நிதித்துறை செயலாளர் சண்முகம். 
ஏற்கனவே அரசுக்கு எதிரான மனநிலை மக்களிடம் நிலவும் சூழலில் அதிகார வர்க்கத்தையும் பகைத்துக் கொள்ள முதல்வர் விரும்பவில்லை. ஆகவே தான் மன்னார்குடி கும்பல் கொடுத்த பட்டியலை ஓரங்கட்டிவிட்டதாக கோட்டையில் கிசுகிசுக்கிறார்கள்.
இது போக, தம்பிதுரை, டி.ஜெயக்குமார், செங்கோட்டையன், எடப்பாடி இம்மூவரும் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசிக் கொள்கிறார்கள் என்கிறது க்ரீன்வேஸ் சாலை வட்டாரம். இந்த தகவல் எல்லாம் சிறைக்குள் இருக்கும் சித்திக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளன. பொறுமை காக்கும் படி பெங்களூரூவில் இருந்து தகவல் வந்துள்ளதையடுத்து அனைத்து அமைச்சர்களையும் கண்காணிப்பு வளையத்திற்குள் தினகரன் கொண்டு வந்துள்ளார். 
பொருளாதார குற்ற வழக்கால், ஏற்கனவே அமைச்சராகும் தனது கனவு கவர்னரால் சிதைக்கபட்ட கொதிப்பில் இருக்கும் தினகரன், சித்தி சென்னைக்கு மாறுதலான பிறகி, இந்த பட்டியல் விஷயத்தை பெரிதாக்கி முதல்வராகும் முயற்சியில் படு தீவிரமாக இறங்கியுள்ளாராம்.

10 ரூபாய் நாணயம் பயன்படுத்த தடையில்லை: ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு

பெங்களூரு: 10 ரூபாய் நாணயம் தடைசெய்யவில்லை. வழக்கம் போல் கடைக்காரர்கள், வியாபாரிகள் இந்த விவகாரத்தில் தேவையற்ற பீதி அடைவதை விட்டு பொதுமக்களிடமிருந்து தாராளமாக பெற்றுக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை: சமீபகாலமாக 10 ரூபாய் நாணயம் போலியாக வெளியாகி உள்ளது. எனவே, இதை ரிசர்வ் வங்கி தடைசெய்துள்ளதாக பொய்யான தகவல்கள் வெளியாகி உள்ளன. 
இதுபோன்ற பொய்யான தகவல்களை பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம். அதிலும் குறிப்பிடும்படியாக ஹோட்டல் உரிமையாளர்கள், பெட்ரோல் பங்க், காய்கறி, பழக்கடைகள் போன்ற பல்வேறு கடைகளில் கட்டாயம் 10 ரூபாய் நாணயங்களை பொதுமக்களிடமிருந்து பெற்று கொள்ளவேண்டும். 10 ரூபாய் நாணய விவகாரத்தில் வியாபாரிகள் பீதி அடைய தேவையில்லை. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாமுண்டி மலையில் கேமரா பொருத்த போலீஸ் முடிவு

மைசூரு: மைசூரு சாமுண்டி மலையில் சிசிடிவி கேமரா பொருத்த போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மைசூரு சாமுண்டி மலையில் கடந்த திங்கட்கிழமை மாலை ஜெர்மன் நாட்டைச் சேர்நத பெண் ஒருவருக்கு மர்ம நபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து சாமுண்டி மலையில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இது தொர்பாக கமிஷனருக்கும் சாமுண்டி போலீசார் மனு அளித்துள்ளனர். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் பாலியல் தொல்லைக்குள்ளான சம்பவத்தில் சாமுண்டி மலைப்பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றிக் கொண்டிருந்த 3 இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது வரை உண்மையான குற்றவாளி யார் என போலீசார் கண்டுபிடிக்கவில்லை. 
மேலும் இது போன்ற சம்பவங்களைத் தடுக்க சாமுண்டி மலைப்பகுதியில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தலாம் என்று போலீசார் ஆலோசித்தனர். எந்தெந்த இடத்தில் சி.சி.டி.வி. கேமரா தேவை என்பது குறித்து சாமுண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆய்வு நடத்தினார். சாமுண்டி மலை படிக்கட்டு தொடங்கும் இடத்தில் ஒரு சி.சி.டி.வி. கேமரா மற்றும் நடுப்புறத்தில் ஒரு சி.சி.டி.வி. கேமரா வைக்கப்படவுள்ளது. ஜெர்மன் பெண் பாலியல் தொல்லைக்குள்ளான நந்தி சிலை அருகே ஒரு சிசிடிவியும், மாநகரின் இயற்கையை ரசிக்க உள்ள வியூ பாயிண்ட்டிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படவுள்ளது. மேலும் குற்றச் செயல்களைத் தடுக்க மாலை 6 மணி முதல் அதிகாலை 5 மணி வரை படிக்கட்டு வழியாக கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
5 மணிக்கு மேல் படிக்கட்டு வழியாக பக்தர்கள் சாமுண்டியை தரிசனம் செய்ய வருவார்கள். இதற்காக காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை படிக்கட்டு பகுதி திறந்திருக்கும். காலை 5 மணிக்கு மேல் பக்தர்கள் கூட்டம் இருக்கும் என்பதால் எந்த பிரச்னையும் இருக்காது. எனவே இப்பகுதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று போலீசார் கூறியுள்ளனர். பக்தர்களுக்கு பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டி.சி.க்கு அனுப்பியுள்ள அறிக்கைக்கு ஓரிரு நாட்களில் பதில் கிடைக்கும் என்று போலீசார் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.