உத்திரபிரதேசத்தில் இன்று 53 தொகுதிகளுக்கான 4ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும். 403 தொகுதிகளை கொண்ட உத்திரபிரதேச மாநில சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் 3 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் 4ம் கட்டமாக 12 மாநிலங்களில் உள்ள 53 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
4ம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் 53 தொகுதிகளிலும் தேர்தல் ஆணையம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. உ.பி-யில் பாஜகவும், பகுஜன் சமாஜ் கட்சியும் தனித் தனியாக களமிறங்கியுள்ளன. அதே சமயம் ஆளும் சமாஜ்வாடி கட்சி காங்கிரஸூடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. உத்திரபிரதேசத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்று மார்ச் 11ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்போது தெரிந்துவிடும்.



