சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க தமிழக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ., எம்.பிகளுக்கு அனுமதி வழங்கும்படி கர்நாடக மாநில சிறைத்துறை டி.ஜி.பி. சத்யநாராயணராவுக்கு தமிழக போலீஸ் டி.ஜி.பி. கடிதம் எழுதியுள்ளதாகவும், அதற்கு அவர் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், ‘‘தண்டனை கைதிகளை மக்கள் பிரதிநிதிகள் சந்தித்து பேசுவது என்ன நியாயம்? ரத்த சம்பந்த உறவினர்கள், வக்கீல்கள் வேண்டுமானால் வாரத்தி–்ற்கு ஓரிரு நாட்கள் அனுமதிக்கலாம். மக்கள் பிரதிநிதிகளை எப்படி அனுமதிக்க முடியும்? இதற்கு சாத்தியமில்லை’’ என்று பதில் கடிதம் எழுதியுள்ளதாக சிறைத்துறை வட்டாரம் மூலம் தெரியவருகிறது.
Popular Categories



