சென்னை:
அதிமுக உடையாமல், ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்று கூறியுள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஓபிஎஸ்க்கு திடீரென ஆதரவு கொடுத்துள்ளார்.
ஓபிஎஸ்.,க்கு ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் திடீர் ஆதரவு கொடுத்துள்ளார். அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,
”சசிகலாவை மதிக்கிறேன். அதிமுக உடையாமல் இருக்க விரும்புகிறேன். எடப்பாடியோ, பன்னீர் செல்வமோ யாராயிருந்தாலும், முதல்வர் பதவி எங்களுக்கு பிரச்சினையில்லை. ஆனால் தினகரன் அந்தப் பதவிக்கு தகுதியில்லாதவர்.
அதிமுகவிற்கு தலைமை ஏற்க ஓபிஎஸ் முன்வரவேண்டும். அடிமட்ட தொண்டர்கள் யாரும் தினகரனை ஏற்க மாட்டார்கள்.
தினகரன் தலைமையை ஏற்கமாட்டோம் என்று தீபக் திடீரென போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.
முன்னதாக, அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது, அதிமுகவில் குடும்ப ஆதிக்கம் என்றும் இல்லை
என்றும், அதிமுகவில் இருந்து திரும்பிச் சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள் ; ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்ற திமுகவின் கனவு தோல்வியடைந்தது
; என்றுமே திமுகதான் பிரதான எதிரி என்று தெரிவித்திருந்தார்.




